சனி, 7 ஜூலை, 2012
இரண்டாம் பாவகம் மூன்றாம் பாவகம் ஆய்வு
ஐங்கரன் ஜோதிட பயிற்சி மையம் நாமக்கல்
இரண்டாம் பாவகம் , மூணாம் பாவகம் ஆய்வு
இரண்டாம் வீட்டின் பலன்
அன்பு மாணவர்களே நாம் ஒரு பாவகத்தை ஆய்வு செய்வதற்கு முன் சில கதைகளை படித்து பாவகத்தை ஆய்வு செய்வோம்.
விதிப்படிதான் நடக்குமா?
இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டால் பல
பதில்கள் உள்ளன. ஆனால் கேள்வியைச் சுருக்கி -
முதல் பெருமை எது? என்று கேட்டால்
ஒரே ஒரு பதில்தான்.
அது என்ன? இந்த இடத்திலேயே சொன்னால்
கட்டுரையின் வீச்சு அல்லது வேகம் குறைந்து
போய்விடும். ஆகவே இறுதிப் பகுதியில் சொல்கிறேன்
என்னுடன் - என் மனதிற்குள் உடன் இருக்கும் - ஆசான்கள்
- என்னுடைய ஆசிரியர்கள் மூன்று பேர்கள்.
ஒருவர் திருவள்ளுவர், இன்னொருவர் பாரதியார்
மூன்றாமவர் கண்ணதாசன்
"இரவும்வரும் பகலும்வரும் உலகம் ஒன்றுதான்
உறவும்வரும் பகையும்வரும் இதயம் ஒன்றுதான்
வறுமைவரும் செழுமைவரும் வாழ்க்கை ஒன்றுதான்
பெருமைவரும் சிறுமைவரும் பிறவி ஒன்றுதான்"
அடடா கண்ணதாசன் அவர்கள் எப்படிப் பட்டியல்
இட்டுச் சொல்லியிருக்கிறார் பாருங்கள். அதோடு
விட்டாரா? தொடர்ந்து சொல்கிறார்:
"துணையும்வரும் தனிமைவரும் பயணம் ஒன்றுதான்
வழிபடவும் வரம்தரவும் தெய்வம் ஒன்றுதான்"
உனக்கு துணை கிடைத்தாலும் சரி அல்லது தனியாக
இருக்க நேரிட்டாலும் சரி (வாழ்க்கைப்) பயணம் ஒன்று
தான்னு நெற்றியடியாக எப்படி அடித்தார் பாருங்கள்?
அதுதான் கண்ணதாசன்!
சரி, நாம் கட்டுரைக்குள் வருவோம்
பெருமை என்றால் என்ன? சிறுமை என்றால் என்ன?
பெருமை = 1.தான் அல்லது தன்னைச் சார்ந்தோர்
அடைந்த உயர்நிலை, வெற்றி முதலியவை காரணமாக
மதிப்பில் உயர்ந்துவிட்டதாகக் கொள்ளும் உணர்வு.
pride; sense of Pride. 2. ஒன்றின் உயர்ந்த நிலை
அல்லது தகுதி standing reputation.
சிறுமை = 1.மதிப்பிழ்ந்து வெட்கப்பட வேண்டிய நிலை.
கீழ்நிலை meanness: degradation;smallnesss
2. முக்கியம் அற்ற சிறிய தன்மை, குறையுடைய
நிலைமை. insignificance
உங்களுக்கு பெருமையாகத் தோன்றுவது எது என்று
கேட்டால் 'சந்தேகமென்ன, மீனாட்சி அம்மன் கோவில்
தான்' என்று மதுரைக்காரர்கள் சொல்வார்கள்.
தருமமிகும் சென்னை வாசிகளைக் கேட்டால்,
'உலகின் இரண்டாவது பெரியதும், அழகியதுமான
மெரீனா கடற்கரையைக் காட்டுவார்கள்.
கோவை வாசிகளைக் கேட்டால் சிறுவாணித் தண்ணீருக்கு
ஈடு ஏது -அதுதான் எங்களூருக்குப் பெருமை சேர்ப்பது
என்பார்கள்
இப்படி ஊருக்கு ஊர், மனிதருக்கு மனிதர் பதில் மாறுபடும்.
சரி இந்த உலகிற்கே பெருமை சேர்ப்பது எது?
யாரைக்கேட்டால் சரியான பதில் கிடைக்கும்?
உலகிலேயே மனிதனுக்கு மனிதனால் எழுதப்பட்டதில்
மிகச் சிறந்ததும், ஒப்புவமையற்றதுமான திருக்குறளை
எழுதிய வள்ளுவரையே கேட்போம்.
வள்ளுவர் பெருந்தகை என்ன சொல்கின்றார் பாருங்கள்!
"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு."
நேற்று இருந்தவன் இன்றில்லை அதுதான் இந்த
உலகத்தின் பெருமை என்று அடித்துச் சொல்கின்றார்
வள்ளூவர் பெருமகனார். நிலையாமை (Instability)
அதிகாரத்தில் வரும் குறள் இது
வேறு ஒரு சிந்தனையாளன் இதே கருத்தை ஒரே
வரியில் இப்படிச் சுருக்கமாகச் சொன்னான்
"நிலையாமைதான் நிலையானது"
(Uncertainity is certain)
ரத்தினச்சுருக்கமாக எப்படிச் சொன்னான் பாருங்கள்.
எல்லாம் நிலையில்லாததுதான். நம்மை விட்டுப்
போகக்கூடியதுதான். ஏன் எல்லாவற்றையும் போட்டது
போட்டபடி போட்டு விட்டு நாமும் ஒருநாள்
போகப் போகிறோம்.
அதைத்தான் பகவான்- அந்தக் கார்மேக வண்ணன்,
நம் மனம் கவர்ந்த கண்ணபிரான் இப்படிச் சொன்னார்
"எது இன்று உன்னுடையதோ, அது நாளை
மற்றொருவனுடையதாகிறது. மற்றொருநாள்
அது வேறொருவருடையதாகும். இதுவே உலக நியதியும்
எனது படைப்பின் சாராம்சமுமாகும்"
எத்தனை பேர் இதையெல்லாம் நினைத்துப் பார்க்கின்றார்கள்?
"மாடு மனை போனால் என்ன
மக்கள் சுற்றம் போனால் என்ன
கோடி செம்பொன் போனால் என்ன - உந்தன்
குறுநகை ஒன்று போதும்!"
என்று கவிஞனொருவன் தன் மனைவியிடம் சொன்னானாம்.
மாடு என்றால் செல்வத்தைக் குறிக்கும். செல்வம், வீடு,
பிள்ளைகள், சுற்றத்தார் என்று எது என்னை
விட்டுப்போனாலும் கவலையில்லையடி - உன் புன் சிரிப்பு
ஒன்றுபோதுமென்றானாம் அந்தக்கவிஞன்.
பட்டினத்தார் சரித்திரதைப் படித்தபோதுதான் எல்லாம் மாயை
(illusion) என்பதை அதே கவிஞன் உணர்ந்தான்
"அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே, கைபற்றிய மாந்தரும்
வீதி மட்டே, மெத்த விம்மியழும் பிள்ளைகளும் சுடுகாடு
மட்டே" என்ற பட்டினத்தடிகளின் பாட்டைப் படித்துப்
புரிந்து கொண்ட பிறகு குறுநகையெல்லாம் அந்தக்
கவிஞனுக்குப் பெரிதாகத் தெரியவில்லை!
பட்டினத்தாருக்கே அவருடைய வளர்ப்பு மகனாக வந்துதித்த
சிவபெருமான்தான் 'காதறுந்த ஊசியும் வாராது காணும்
கடைவழிக்கே" -என்பதை - அதாவது மனிதன் இறந்து
விட்டால் அவன்கூட எதுவும் வராது - காது ஒடிந்து
பயனற்றுப்போன ஊசி கூட உடன் வராது என்று உணர்த்தினார்
ஒருமுறை இப்படி அடுக்கடுக்காக அடியவன் பேசிக்
கொண்டிருந்தபோது கேட்டுகொண்டிருந்த அன்பர்
குறுக்கிட்டார்.
"அண்ணே நீங்கள் சொல்வதெல்லாம் போகிற காலத்திற்
குத்தான் பொருந்தும்! இருக்கும் போது என்ன செய்ய
வேண்டும்? - எதைப் பெருமையாக நினைக்க வேண்டும்?
அதைச் சொல்லுங்கள்" என்றார்
"இருக்கிறகாலம், போகிறகாலமென்று காலத்தில் எல்லாம்
வேறு பாடு கிடையாது. ஏன் இன்று இரவிற்குள்ளேயே கூட
உங்களுக்கு இறுதிப் பயணச் சீட்டுக் கொடுக்கப்பட்டு
விடலாம். அதைத்தான் நம் வீட்டுப் பெரியவர்கள்
தூங்கையிலே வாங்கிகிற காற்று, சுழி மாறிப் போனாலும்
போச்சு என்பார்கள்" என்று அவருக்குப் பதில் சொன்னேன்
அவர் மெதுவாகத் தொடர்ந்து சொன்னார்."அண்ணே,
ஒன்னாம் தேதியானால் குறைந்த பட்சம் இருபதாயிரம்
ரூபாய் பணம் வேண்டிய திருக்கிறது.வீட்டுக் கடனுக்குத்
தவணைப் பணம், பால் கார்டு,மின் கட்டணம், மளிகைக்
கடை பில், செல்போன் பில், வேலைக்காரி சம்பளம்,
பெட்ரோல் கார்டு, இத்தியாதிகள் என்று வரிசையாக
வந்து பாடாய்ப் படுத்துகின்றன. வாழ்க்கையே
போராட்டமாக இருக்கிறது. இன்றையச் சூழ்நிலையில்
இதையெல்லாம் சமாளித்து ஒருவன் உயிர் வாழ்வதே
பெருமையான விஷயம்தான்"
"நகரங்களில் வாழ்கின்ற ஆடு மாடுகள் கூடத்தான்
மனிதன் மிஞ்சிய உணவோடு கீழே போட்டுவிட்டுப்
போகும் பிளாஸ்டிக் பைகளையும் சேர்த்து விழுங்கி
விட்டு உயிர் வாழ்கின்றன - உயிர் வாழ்வதா
முக்கியம்.அதையே பெருமையாக நினைப்பதா?
யாருக்குத் தான் பிரச்சினைகள் இல்லை ?
தேவைகளைக் குறைத்துக் கொண்டு வருமானத்திற்
குள் வாழ்வதற்குப் பழகினால் எந்தப் பிரச்சினையும்
இல்லை. தஞ்சை மாவட்டத்தில் தினசரி ரூபாய்
நூறுக்கும் குறைவாகச் சம்பாதிக்கும் எண்ணற்ற
தொழிலாளிகள் எல்லாம் சந்தோஷமாக வாழவில்லையா?
வரும் பிரச்சினைகளைச் சமாளித்து வாழ்வதுதான்
வாழ்க்கையின் முதல் நியதி. - அடிப்படை நியதி -
ஆகவே அதைத் தவிர்த்து நீங்கள் பெருமைப்
படுவதைச் சொல்லுங்கள்" என்றேன்
"எனக்குத் தெரியவில்லை நீங்களே சொல்லுங்கள்" என்றார் அவர்
நான் சொன்னேன் " எளிமையான வாழ்க்கை, நேர்வழியில்
பொருளீட்டல், சிக்கனம், இறையுணர்வு, தர்மசிந்தனை,
பெற்றோர்களையும், பெரியோர்களையும் மதித்தல்,
இயற்கைக்கும், அரசிற்கும் எதிராக எதையும்
செய்யாதிருக்கும் மேன்மை என்று அனைத்து
நற்பண்புகளையும் கொண்ட இனம் - இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றையும், கலாச்சாரத்
தையும் கொண்ட இனம் தமிழர் இனம்.ந்ம்மைப் போன்ற
எண்ணற்ற இனத்தவர்கள் ஒற்றுமையாக வாழும் நாடு
நம் நாடு.பல மொழிகளைக் கொண்டது நம்நாடு. பல
மதத்தவர்களைக் கொண்ட்து நம் நாடு. பலவிதமான
இயற்கை நிலைகளைக் கொண்டது நம் நாடு.
திரு.ஜவஹர்லால் அவர்கள் சொன்னதுபோல வேற்றுமையில்
ஒற்றுமை நிறைந்தது நம் நாடு"
"தொன்மையிலும், கலாச்சரத்திலும், பண்பாட்டிலும்
நமக்கு இணையானவர்களைக் கொண்ட நாடு
வேறொன்றுமில்லை! அது நிதர்சனமான உண்மை!
ஆகவே இந்தத் திருநாட்டில் பிறந்திருக்கிறோம்
என்பதுதான் முதல் பெருமை!"
"இந்தியாவில் பிறந்ததற்காக முதலில் பெருமைப்படுங்கள்!"
அவர் மெய்மறந்து சொன்னார்,"ஆமாம், அதுதான் உண்மை!"
அத்துடன் கேள்வி ஒன்றையும் கேட்டார்.
"சரி, எது சிறுமை?"
"நம் தாய்த்திரு நாட்டை இகழ்ந்து பேசுவதுதான் சிறுமை!"
"இதில் உங்களுடைய விதிப்படிதான் நடக்கும் என்பது
எங்கே வரும்?"
"பிறப்பு உன் கையில் இல்லை!இந்தத் தாய்தான் வேண்டுமென்று
நீ விரும்பிப் பிறக்கவில்லை. அதுபோல நாடும் அப்படித்தான்
இரண்டுமே இறைவன் அளித்த கொடை. நீ வாங்கி வந்த வரம்!
இல்லையென்றால் நீ நைஜீரியாவிலோ அல்லது ஜாம்பியாவிலோ
பிறந்திருப்பாய். இல்லையென்றால் அவற்றைவிட மோசமான
நாடு ஒன்றில் பிறந்திருப்பாய்!"
"ஆகவே அதை உணர்ந்து கொள் முதலில்!
நாட்டை நேசி,
நாட்டிற்கு விசுவாசமாக இரு.
நாட்டிற்கு நன்றியுள்ளவனாக இரு.
அந்த உணர்வு ஒன்றுதான் உன்னை மேம்படுத்தும்!"
நாகேஷ் சொன்ன நகைச்சுவை!
முப்பதைந்து ஆண்டுகளுக்கு முன்பு வந்த படம்.படத்தின்
பெயர் நினைவில் இல்லை. ஆனால் காட்சி நினைவில் இருக்கிறது
நாகேஷ் வெளியிலிருந்து வீட்டிற்குள் வருவார். வீட்டில்
இருக்கும் டைப்பிஸ்ட் கோபு நாகேஷைப் பார்த்துக் கேட்பார்.
"ஏண்டா ஜோசியருகிட்டே போனியே,என்ன சொன்னார் அவர்?"
அதற்கு நாகேஷ் அவருக்கே உரிய ஏற்ற இறக்கங்கள் உள்ள
குரலில் பதில் சொல்வார்.
"அதெல்லாம் நல்லாத்தான் சொன்னாருப்பா!"
"அதான் என்ன சொன்னாருங்கிறேன்ல?"
"உனக்கு இந்தக் கஷ்டம், நஷ்டம், துன்பம், துயரம் எல்லாம்
நாற்பது வயசு வரைக்கும்தான்னு சொன்னாரு!"
"அதுக்கப்புறம்?"
"அதுவே பழகிப் போயிடும்னுட்டாரு!"
கொல்' லென்ற சிரிப்பொலியால் தியேட்டர் அதிர்ந்துவிடும்!
-----------------------------------------------------------------------------------
அது அவர் நகைச்சுவைக்காகச் சொல்லியது என்றாலும்
பலருடைய ஜாதகத்தில் அது உண்மையாகவே இருக்கும்
ஏன் அப்படி?
குரு, சந்திரன், சுக்கிரன் மூன்றும் அதிக நன்மைகளைக்
கொடுக்கக்கூடிய கிரகங்கள். அவைகள் மூன்றுமே ஒருவருடைய
அல்லது ஒருத்தியுடைய ஜாதகத்தில் வலுவிழந்து இருந்தால்
அந்த ஜாதகனுடைய அல்லது ஜாதகியுடைய வாழ்க்கை கடைசி
வரை போராட்டங்கள் மிகுந்ததாகவே இருக்கும்.
அந்த மாதிரி ஜாதகங்களுக்கெல்லாம், கருணை மிக்க கடவுள்
நின்று போராடும் சக்தியைக் (Standing Power) கொடுத்திருப்பார்.
ஆனால் 40 வயதுவரை, அதாவது இளமைத் துடிப்புள்ள காலத்தில்
இதெல்லாம் ஏன் இப்படி எனக்கு மட்டும் நடக்கிறது? என்ற
துடிப்பு இருக்கும். 40 வயதிற்குமேல், சரி, இதுதான், நம்முடைய
நிலைமை, என்று பக்குவப்பட்ட மனது உணர்ந்து விடும்.
ஆதலால், வருவதை ஏற்றுக் கொள்ளும் துணிச்சலும்
கிடைத்து விடும். வாழ்க்கைப் பயணத்தை ஒரு சோகம் கலந்த
மகிழ்ச்சியுடன் தொடர்வார்கள் அவர்கள்!
கூலி ஆளாக வேலையைத் துவங்குபவன், கடை வரைக்கும் கூலி
வேலை பார்ப்பதற்கும், சைக்கிளில் செல்பவன் கடைசிவரை
சைக்கிளில் செல்வதையே மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதற்கும்,
ஒரு சின்ன கிராம ரயில்வே ஸ்டேசனில், ஸ்டேசன் மாஸ்டராக
வேலைக்குச் செல்பவன், கடைசிவரை ஸ்டேசன் மாஸ்டராகவே
வேலை பார்ப்பதற்கும், ஒரு இசையமைப்பாளரிடம், வயலின்ஸ்ட்டாக
வேலை பார்ப்பவன், அதே சினிமாத்துறையில் கடைசிவரை, ஏதோ
ஒரு இசையமைப்பாளரிடம் வயலின் வாசித்துக் கடைசிவரை
வாழ்க்கையை ஓட்டுவதற்கும், ஒரு ஸ்டுடியோவில் Light Boy
Or Clap Boy வேலைபார்க்கும் ஒருவன் கடைசிவரை அதே
வேலையில் நீடிப்பதற்கும் - அவ்வளவு ஏன் பேருந்துகளில்
ஓட்டுனராகவும், நடத்துனராகவும் வேலைக்குச் சேர்பவர்கள்
கடைசிவரை, அதே வேலையில் மன அமைதியோடு இருப்பதற்கும்,
நான் மேற்சொன்ன ஜாதக அமைப்புதான் காரணம்.
Twist, Up & Down உள்ள ஜாதகங்களில் 4 கிரகங்கள் நன்றாக
இருக்கும், மீதி கிரகங்கங்கள் பாதிக்கப்பட்டிருக்கும். அவர்கள்
வாழ்க்கை ஏற்ற இறக்கம் உள்ளதாக இருக்கும்.
ஒரு நடிகர் ஒரே படத்தில் புகழின் உச்சிக்குபோய் விடுவார்.
அடுத்தடுத்து மேலூம் இரண்டு படங்கள் வெற்றியடைய, முதல்
படத்தில் வெறும் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு நடித்தவர், நான்காவது
படத்திற்கு இரண்டு கோடி சம்பளம் என்பார். அதையும்
கொடுத்து அவருடைய கால்சீட்டை வாங்க ஒரு கூட்டம்
அவருடைய வீடு வாசலில் காத்திருக்கும். இரண்டே ஆண்டுகளில்
பத்துக் கோடி பணம் சேர்ந்து விடும். சென்னை தி.நகரில் பங்களா,
பென்ஸ் கார் என்று வாழ்க்கை தடபுடலாகிவிடும்
அதே நிலைமை நீடிக்குமா என்றால் - எப்படித் தெரியும்?
அவருடைய ஜாதகம் நன்றாக இருந்தால் நீடிக்கும்.
இல்லையென்றால் கிரகங்கள் ஊற்றிக் கவிழ்த்து விட்டு
அல்லது அடித்துத் துவைத்து விட்டுப்போய் விடும்!
எப்படி?
இரண்டு வருடங்களுக்குப் பிறகு அடுத்தடுத்து மூன்று அல்லது
நான்கு படங்கள் தோல்வியுறும், மார்கெட் போய் விடும்.
ராசியில்லாத நடிகர் என்ற பெயர் ஏற்பட்டுவிடும். ஃபீல்டில்
நிற்க வேண்டும் என்பதற்காக கையில் இருக்கின்ற காசைப்
போட்டுப் பெரிய பட்ஜெட் படமாக எடுப்பார்.அதுவும்
நேரம் சரியில்லாத காரணத்தால் ஊற்றிக் கொண்டுவிடும்
விட்ட பணத்தைப் பிடிப்பதற்காக கடன் வாங்கி மீண்டும்
ஒரு சொந்தப் படம் எடுப்பார். அதுவும் ஓடாமல் அவரைச்
சோதனைக்கும், வேதனைக்கும் உள்ளாக்கிவிடும்.
கடைசியில் கடன்காரர்கள் பிடியில் இருந்து தப்புவதற்காக
சம்பாத்தித்த சொத்துக்களையெல்லாம் விற்றுக் கடனை
அடைப்பார். மீண்டும் லாட்ஜ் வாசம், எடுப்புச் சோறு
என்றாகி விடும்.
இது சினிமாக்காரர்கள் என்று மட்டுமில்லை, பல தொழில்
அதிபர்கள், வியாபாரிகள் வாழ்விலும் நடக்கின்றதுதான்.
சினிமாக்காரரை ஏன் முன்னிலைப் படுத்திச் சொன்னேன்
என்றால், அது உங்களுக்கு சுலபமாக வசப்படும் அல்லது
புரியும் என்பதால்.
இது ஒரு நடிகரின் வாழ்க்கையில் நடந்ததுதான். பெயரைச்
சொல்லவில்லை. முடிந்தால் கண்டு பிடித்துக் கொள்ளுங்கள்
அந்த நடிகர் - பென்ஸ் காரில் போய்க் கொண்டிருந்தவர்
கஷ்டகாலம் வந்து, அனைத்தையும் இழந்து கோடம்பாக்கத்தில்
பொடி நடையாக ஒருமுறை நடந்து சென்று கொண்டிருந்த
போது, எதிரில் வந்து அவரை வழி மறித்த பத்திரிக்கை
நிருபர் ஒருவர் அவரிடம் இப்படிக்கேட்டார்:
"என்ன அண்ணே, நடந்து போய்க் கொண்டிருக்கிறீர்கள்?"
அவர் பதில் சொன்னார்:
"ஆமாம்ப்பா, கடவுள் பென்ஸ் காரில் போகச் சொன்னார்
போனேன்; இப்போது நடந்துபோ என்றார்.நடந்து போய்க்
கொண்டிருக்கிறேன். மீண்டும் என்னை அவர் பென்ஸ் காரில்
போக வைப்பார்.போவேன்.அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது"
அவர் நம்பிக்கை பொய்க்கவில்லை. மீண்டும் அவருக்கு
ஒரு அருமையான வாய்ப்புக் கிடைத்தது. கதாநாயகன்
வேடமல்ல; குண சித்திர வேடம். சிறப்பாக நடித்தார்.
மீண்டும் பல வாய்ப்புக்கள் அதே குணசித்திர வேடங்களில்
நடிக்கத் தேடி வந்தது. இன்று மீண்டும் நல்ல நிலைமையில்
இருக்கிறார் அவர்.
---------------------------------------------------------------------------
ஆகவே உங்களுடைய ஜாதகத்தைப் பற்றிய கவலையை
எல்லாம் விட்டு விடுங்கள்.
நல்ல ஜாதகம் என்றால் நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள்
ஜாதகத்தைப் பற்றி யோசிக்கக்கூட நேரமின்றி வாழ்க்கை
முழு இன்ப மயமானதாக இருக்கும். அதிகாலையில் மும்பை
மத்தியானம் ஃபிராங்க்ஃபர்ட், நடு இரவு நியூயார்க் என்று
பறந்து கொண்டிருப்பீர்கள்.வாழ்க்கையின் அவ்வளவு
செளகரியங்களும் அதுவாகவே உங்கள் காலடிக்கு வந்து
சேரும்.
அதேபோல உங்கள் ஜாதகம் சொல்லும் படியாக இல்லை
யென்றால், நீங்கள் கவலைப் பட்டு ஒன்றும் ஆகப்போவ
தில்லை. உங்களுடைய துன்பங்களையும், அசெளகரியங்களையும்
யாரிடமும் கொடுத்துவிட்டு நீங்கள் தப்பிக்க முடியாது.
உங்கள் துன்பங்களை நீங்கள்தான் அனுபவிக்க வேண்டும்
ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள்.
துன்பப்படுபவனுக்கு மட்டும்தான் கடவுள் தோள் கொடுப்பார்.
ஜாதகத்தில் அதற்குப் பெயர் நிற்கும் சக்தி!
That is standing power confered by The Almighty!
--------------------------------------------------------------------
ஒரு குட்டிக்கதை மூலம் அதை விளக்குகிறேன்.
ஒரு பெரிய பக்தர் இருந்தார். எப்படியும் இறைவனைப்
பார்த்துப் பேசிவிட வேண்டும் என்ற மன ஆதங்கத்துடன்,
ஒரு முறை அவர், தொடர்ந்து பல நாட்கள் கடும் விரதம்
மேற்கொண்டதோடு, கடும் பிரார்த்தனையிலும் ஈடுபட்டார்.
இறைவன் காட்சி கொடுத்தார்.அதோடு நில்லாமல் உன்
பக்தியை மெச்சும் விதமாக ஒரு வரம் தருகிறேன்.
என்ன வேண்டுமென்றாலும் கேள் என்றார்.
"நீங்கள் எப்போதும் எனக்குத் துணையாக வரவேண்டும்.
அதுதான் என்னுடைய ஆசை! வேறொன்றும் வேண்டாம்"
என்று பக்தர் சொல்ல, அப்படியே நடக்கும், கவலையை விடு
என்று இறைவன் சொன்னார்.
பக்தர் விடவில்லை,"ஆண்டவரே, நீங்கள் எனக்குத் துணை
யாகத்தான் உள்ளீர்கள் என்பதை நான் எப்படித் தெரிந்து
கொள்வது?" என்றார்
ஆண்டவன் புன்னகைத்து விட்டுப் பதில் சொன்னார்.
"நீ அதை ஒரு பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்
உங்கள் ஊரில் உள்ள ஆற்று மணலில் நீ மட்டும் தனியாக
ஐம்பது அல்லது அறுபது அடி தூரம் நடந்து சென்று, திரும்பிப்
பார்த்தாயென்றால் உன்னுடைய காலடிச் சுவடுகள் இரண்டுடன்
உன்னுடன் நானும் நடந்து வந்ததற்கான காலடிச் சுவடுகளாக
மணலில் பதிந்த மேலும் இரண்டு ஜோடிக் காலடிச் சுவடுகள்
உன் கண்களுக்குத் தெரியும்! அதுதான் அடையாளம்!"
என்று சொல்லிக் கடவுள் மறைந்து விட்டார்.
பக்தரும் மிகவும் மகிழ்ந்து வீட்டிற்குத் திரும்பி விட்டார்
வாழ்க்கை ஆனந்த மயமாக இருந்தது."உன்னைக் கண்டு நான்
ஆட, என்னைக் கண்டு நீ ஆட" என்று தன் மனைவியுடன்
மகிழ்வாக வாழ்ந்தார்.
ஒரு மூன்று வருட காலம் போனதே தெரியவில்லை!
ஒரு நாள் திடீரென்று நினைவிற்கு வர, ஆண்டவர் சொல்லியபடி
கூட இருக்கிறாரா என்பதைத் தெரிந்து கொள்ள ஆற்று மணல்
பரிசோதனை செய்து பார்த்தார். என்ன ஆச்சரியம்?
மணிலில் ஆண்டவர் சொல்லியபடியே இரண்டு ஜோடிக் கால்
தடயங்கள் இருந்தன. அவரும் மன நிறைவோடு திரும்பி விட்டார்
காலச் சக்கர ஓட்டத்தில், ஒரு நாள் அவர் தன் மனைவி, மக்களை
யெல்லாம் விபத்தொன்றில் பறிகொடுக்க நேர்ந்தது. அது விதி
என்று மனதைத் தேற்றிக் கொண்டு விட்டார். அடுத்தடுத்துத்
தொடர்ந்து துன்பங்கள் அப்போதும் துணிவுடன் அவற்றை
எதிர் கொண்டார். கடைசியில் துறவியாகி ஊர் ஊராகக்
கோவில் கோவிலாகச் செல்ல ஆரம்பித்தார்.
அப்போதுதான் அவருக்கு அந்த எண்ணம் வந்தது.
"நாம் நமது விதிப் பயனால் இப்படித் துன்பப் படுகிறோம்
அப்போழுதே ஆண்டவரிடம், துன்பமில்லாத வாழ்க்கையைக்
கொடு என்று கேட்டிருக்கலாம். அதைவிடுத்துக் கொழுப்புடன்
ஒன்றும் வேண்டாம், விதித்ததை நான் பார்த்துக் கொள்கிறேன்
நீ துணையாக மட்டும் வந்தால் போதும் என்றோம்.
சரி அப்படியே செய்கிறேன் என்று சொல்லிய ஆண்டவர்
நன்றாக இருந்த காலத்தில் துணையாக வந்தார்.அதைக்
கண்ணாலும் பார்த்தோம். இப்போது எல்லாவற்றையும்
இழந்துவிட்டுத் தனியாக இருக்கிறோம். மூன்று வேளை
உணவும், படுக்கக் கோவில் மண்டபங்களும் கிடைத்தாலும்
வாழ்க்கை வெறுமைதானே - இந்த வெறுமையான நேரத்திலும்
ஆண்டவன் நமக்குத் துணையாக வருகிறாரா - தெரியவில்லையே?"
இப்படி நினைத்தவர், உடனே, ஆண்டவனின் துணையைப்
பரிசோதனை செய்து பார்ப்போம் என்று எண்ணி, கண்ணில்
கண்ட ஒரு ஆற்றின் மணல் பகுதியில் இறங்கி நடக்க
ஆரம்பித்தார்.
ஒரு நூறு அடி தூரம்வரை நடந்தவர், திரும்பிப் பார்த்தார்.
என்ன சோதனை?
இரண்டு ஜோடிக் காலடிச் சுவடுகளுக்குப் பதிலாக ஒரு
ஜோடிக் காலடிச் சுவடு மட்டுமே தெரிந்தது.
மனம் நொருங்கிப் போய்விட்டது அவருக்கு!
சுடு மணல் என்றும் பார்க்காமல், அங்கேயே உட்கார்ந்து
கண்ணீர் மல்க, கதறியவாறு ஆண்டவனைப் பிரார்த்திக்கத்
துவங்கினார்.
அடுத்த ஷணமே ஆண்டவர் காட்சியளித்தார்.
இவர் வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டவாறு
கேட்டார்.
"நியாயமா _ கடவுளே? நான் இன்பமாக இருந்த போதெல்லாம்
என் கூடவே துணையாக நடந்து வந்த நீங்கள், எனக்குத்
துன்பம் வந்த நிலையில் என்னைக் கைவிட்டுப் போனதேன்?"
அண்டவன், புன்னகைத்துவிட்டுச் சொன்னார்:
"நான் வாக்குக் கொடுத்தால் - கொடுத்தது கொடுத்ததுதான்.
நீ இப்போது பார்த்த காலடிகள் என்னுடையவை. நீ இன்பமாக
இருக்கும்போது நான் உன் கூட நடந்து வந்தேன்.அதனால்
உன் கண்ணில் அன்று பட்டது இரண்டு ஜோடிக் காலடிகள்'.
ஆனால் நீ துன்புற்ற நிலைக்கு வந்தவுடன், உன்னை நடக்க
விடாமல் நான் தூக்கிக் கொண்டு நடந்தேன். அதனால்தான்
இந்த ஒற்றைக் காலடிப் பதிவுகள். உன் துன்பங்களைத்
தாங்க வைத்ததும் என்னுடைய அந்த அணைப்புதான் -
தெரிந்து கொள்வாய் பக்தனே!"
ராசி பலன்கள் பார்ப்பது எப்படி என்று சுலபமாக பார்க்கலாம் .
தினசரிப் பத்திரிக்கைகள் எல்லாம் போட்டி போட்டுக்
கொண்டு அன்றைய ராசிபலன்களை எழுதிப் பிரசுரிப்
பதைப் பார்த்திருப்பீர்கள். பலர் தலைப்புச் செய்தி
என்ன என்று பார்த்தவுடன் அடுத்து விரைந்து
பார்ப்பது அந்த ராசிபலன் பகுதியைத்தான்.
இளைஞர்கள் எல்லாம் விளையாட்டுச் செய்திகளுக்கு
அல்லது சினிமாச் செய்திகளுக்கு முக்கியத்துவம்
கொடுத்துப் பார்ப்பார்கள். ஆனால் நடுத்தரவயதுக்
காரர்களும், வயதான பெரிசுகளும் ராசிபலன்
பகுதியைத்தான் முதலில் விரும்பிப் பார்ப்பார்கள்
அதற்குப் பிறகுதான் மற்ற பகுதிகள்
சரி, தினமும் ஒரு பத்திரிக்கைக்கு ராசிபலன்களை
எழுதிக் கொடுக்கும் ஜோதிடர் எந்த அடிப்படையில்
அதை எழுதுகின்றார்?
சந்திர, சூரிய சுழற்சியை வைத்து அதை அவர் எழுதுவார்!
சூரியன் மாதம் ஒரு ராசி, சந்திரன் இரண்டேகால்
நாளைக்கு ஒரு ராசி (தினமும் ஒரு நட்சத்திரம்) ஆகவே
ஒவ்வொரு ராசிக்கும் உரிய தினசரிப் பலனை இந்த
இரண்டு கோள்களின் நிலைமையை வைத்து எழுதிக்
கொடுத்து விடுவார்.
அது 100% சரியாக இருக்குமா?
அது பொதுப்பலன்தான். ஆகவே பொதுவில் சரியாக
இருக்கும். உதாரணத்திற்குப் பணச் சிக்கல் என்று ஒரு
ராசிக்குச் சொல்லப்பட்டிருந்தால், பணத்தை வைத்து
எத்தனை விதமான சிக்கல்கள் இருக்கின்றனவோ
அததனை விதமான சிக்கல்களில் ஏதாவது ஒன்று
அவரவர் சொந்த ஜாதகம், நடப்பு திசை, நடப்பு
புக்திகளை வைத்து அன்றைக்கு வரும்!
பணத்தைத் தேடுவதிலும் (சம்பாதிப்பதிலும்) சிக்கல்
இருக்கிறது. கடனாகக் கொடுத்த பணத்தைத் திருப்பி
வாங்குவதிலும் சிக்கல் இருக்கிறது. பணப் பற்றாக்
குறையும் சிக்கல்தான். பணம் அதிகமாக இருந்தால்
அதைப் பாதுகாப்பதில் - முதலீடு செய்வதில்- சிக்கல்
உள்ளது!
செலவிற்குப் பணம் இல்லாமல் இருப்பதும் சிக்கல்
தான், கொடுத்த இடத்தில் வாங்கிக் கொண்டு போனவர்
சொன்னபடி பணத்தைத் திருப்பித்தராமல்
இழுத்தடிப்பதும் சிக்கல்தான்.
காரிய தாமதம் என்றால், Routine Workஐத் தவிர்த்து
நாம் செய்வதற்கு முனைப்படுகின்ற காரியம்
அன்றைக்கு நிறைவேறாமல் போய்விடும்.
சூரியன் 11-3-10-6 ம் இடங்களில் இருக்கும் மாதங்களும்,
சந்திரன் 7-1-6-11-10-3 ம் இடங்களிலும் இருக்கும்
நாட்களும் பொதுவில் மகிழ்ச்சிக்குரியதாக இருக்கும்.
சந்திரன் உங்களுடைய ராசிக்கு எட்டாம் இடத்திலும்,
12ம் இடத்திலும் சஞ்சாரம் செய்யும் நாட்கள் மகிழ்ச்சி
யைத் தராது.
சரி அதை எப்படித் தெரிந்து கொள்வது?
வெரி சிம்ப்பிள். நீங்கள் திருவோண நட்சத்திரம்
என்றால், உங்களுடைய ராசி மகரம். அதிலிருந்து
எட்டாவது ராசி சிம்மம். சிம்மத்திற்குரிய நட்சத்
திரங்கள் -மகம் - பூரம் - உத்திரம் முதல் பாதம்
(First Six Hours of Uththiram Star). அந்த நட்சத்திரம்
உடைய நாட்கள் சிறப்பாக இராது.
அதுபோல அதே திருவோண நட்சத்திரத்திற்குப்
பன்னிரெண்டாம் இடம் என்னும்போது அது தனுசு
ராசி -அதற்குரிய நட்சத்திரங்கள் மூலம் - பூராடம்
- உத்தராடம் முதல் பாதம் (First Six Hours of
Uththiradam Star). அந்த நட்சத்திரம் உடைய நாட்களும்
சிறப்பாக இராது.
இதுபோல ஒவ்வொரு ராசிக்காரரும் தனக்குச்
சாதகமாக அல்லது பாதகமாக உள்ள நட்சத்திரங்களைக்
குறித்து வைத்துக் கொள்ளலாம்.
அந்த நாட்களில் என்ன செய்யலாம்?
கவுந்தடித்து வீட்டில் படுத்துக் கொண்டு விடலாமா?
கூடாது. அன்றாட வேலைகளைச் செய்யுங்கள்.
That is your routine work. அதற்கெல்லாம் ஆபிஸில்
லீவு கிடைக்குமா என்ன?
அன்றாட வேலைகளைச் (routine work) செய்வதற்கு
நாள், நட்சத்திரங்களைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை!
விஷேசமாக அல்லது புதிதாகச் செய்யவுள்ள
வேலைகளை அன்று செய்யாமல் தவிர்க்கலாம்.
திருமணத்திற்குப் பெண் பார்க்கப் போகிறீர்கள்
என்றால அந்த நாட்களைத் தவிர்க்கலாம். புதிதாகக்
கார் வாங்கப் போகிறீர்கள் என்றால அந்த நாட்களைத்
தவிர்க்கலாம். என்ன, நீங்கள் தேடிப்போகும் மாடல்
அல்லது கலர் கிடைக்காது!
(இரண்டிற்கும் தான்:-))))
ஆண்டுப் பலன்களைச் சனி, மற்றும் குருவை வைத்தும்,
மாத பலன்களைச் சூரியனை வைத்தும், நாள் பலன்களைச்
சந்திரனை வைத்தும் பார்க்க வேண்டும்
இரண்டாம் வீட்டிற்கு தனஸ்தானம் (House of Finance), குடும்ப ஸ்தானம்
(House of family life), வாக்கு ஸ்தானம் (House of speech) ஆகிய
வேலைகள் உண்டு. ஜாதகத்தில் இரண்டாம் வீட்டிற்கு அதிபதி, அவர்
அமர்ந்த இடம், அந்த வீட்டில் வந்து அமர்ந்த கிரகம், அந்த வீட்டின்
மேல் விழும் நல்ல மற்றும் தீய கிரகங்களின் பார்வை, அம்சத்தில்
இரண்டாம் வீட்டு அதிபதியின் நிலை ஆகிய காரணங்களால் வெவ்வேறு
விதமான பலன்கள் உண்டாகும்.
இரண்டில் சனி இருந்தால் கையில் காசு தங்காது. உத்தியோக ஸ்தானம்
நன்றாக இருந்து நல்ல ஆறு டிஜிட் சம்பளம் வந்தாலும் கையில் காசு
தங்காது (Expense oriented horosocope)
அதேபோல இரண்டில் சனி இருந்தால், குடும்ப வாழ்க்கை அமையாது.
சில அரசியல் தலைவர்களின் ஜாதகத்தைப் பார்த்தால் அது தெரிய வரும்.
அப்படியே எழாம் வீட்டின் காரணமாக நல்ல மனைவி கிடைத்திருந்தாலும்,
அவளை இங்கே விட்டு விட்டு அவன் பொருள் ஈட்ட துபாய் போன்ற
நாடுகளுக்குப் போய்விடுவான். வருடத்தில் ஐந்து நாட்கள் அல்லது
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பத்து நாட்கள் ஊருக்கு வந்து மனைவியோடு
இருந்து விட்டுப்போவான். அதை எப்படி சிறந்த குடும்ப வாழ்க்கை என்று
சொல்ல முடியும்?
அதேபோல இரண்டில் சனி இருந்தால், வாயைத் திறந்தால் சண்டைதான்.
தர்க்கம்தான். அவன் பேசுவது நியாயமாக இருந்தாலும் எப்போதுமே தர்க்கம்
செய்யும் குணத்தால் மற்றவர்கள் அவனை விரும்ப மாட்டார்கள்.
ராகு அல்லது கேது இருந்தாலும் அதே பலன்தான்.
இரண்டாம் வீட்டில் குரு அல்லது சந்திரன் அல்லது சுக்கிரன் போன்ற சுபக்
கிரகங்கள் இருந்தால் மேற்கூறியவற்றிற்கு எதிரான பலன்கள் நடக்கும். கையில்
காசு தங்கும், நல்ல குடும்ப வாழ்க்கை அமையும், நல்ல சொல்வாக்குக்குப்
பெற்றுத் திகழ்வான்.
எல்லாம் பொதுப் பலன்களே - அவரவர் ஜாதகத்தில் வேறு கிரக அமைப்புக்கள்,
பார்வைகள், சேர்க்கைகள் காரணமாக சிலருக்கு பலன்கள் வேறுபடலாம்.
1. இரண்டில் சூரியன் அமர்ந்திருந்தால் - பொருள் சேதம்.
2. இரண்டில் சந்திரன் இருந்தால் - இளம் வயதிலேயே திருமணமாகிவிடும்.
பணக்காரனாக இருப்பான், புத்திசாலித்தனம், செல்வாக்கு இருக்கும்.பெண்களு
டனான கேளிக்கைகளில் நாட்டம் உள்லவனாக இருப்பான்
3. இரண்டில் செவ்வாய் இருந்தால் - கோபக்காரன், வாக்குவாதம் செய்பவன்,
வீணாக செலவு செய்பவன். பூமி லாபம் உண்டு. கண் நோய் உண்டாகும்
4. இரண்டில் புதனிருந்தால் - நல்ல படிப்பாளி, எடுத்த காரியத்தை முடிக்கும்
ஆற்றல் இருக்கும். பணம் சம்பாதிக்கக்கூடியவன். சேர்த்துவைக்கக் கூடியவன்
.
5. இரண்டில் குரு இருந்தால் பணம் வந்து கொண்டே இருக்கும். தர்மங்கள்
செய்பவன். சுகமாக வாழக்கூடியவன்.
6. இரண்டில் சுக்கிரன் இருந்தால் சுகமாக வாழ்பவன். அதிகமான உறவுகளைக்
கொண்டவன். நல்ல மனைவி அமைவாள். வித்தைகள் தெரிந்தவன்.
பெண்களிடம் வசப்பட்டுவிடுபவன்.
7. இரண்டில் சனி இருந்தால் - இரண்டு விவாகம் அல்லது இரண்டு குடும்பங்கள்
அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பெண்ணுடன் தொடர்புடையவன். கையில் காசு
தங்காது. சம்பளத்திற்கு மேல் செலவாகும். எல்லாத் தீமைகளும் இவனுக்குப்
பெண்களாலேயே உண்டாகும்.
8. இரண்டில் ராகு அல்லது கேது இருந்தால் - இரண்டு விவாகம் அல்லது
இரண்டு குடும்பங்கள் அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பெண்ணுடன் தொடர்புடைய
வன். தயவு தாட்சண்யம் பார்க்க மட்டான். சோம்பல் உடனிருக்கும். மன
சஞ்சலம் உடையவன். சிறுவயதில் கஷ்டங்களை அனுபவிப்பான். வயதான
காலத்தில் செளகரியமாக இருப்பான், வாயைத் திறந்தால் சண்டைதான்.
9. இரண்டில் சுபக்கிரகங்கள் சேர்ந்து நின்றால் - பெரும் பணக்காரனாக
இருப்பான். சகல வித்தைகள் தெரிந்தவனாக இருப்பான்.
10. இரண்டில் சுபக்கிரகங்களுடன் - சூரியனும் கூடி நின்றால் - பொருள்
நாசம். கையில் காசு தங்காது.
11. இரண்டில் சுபக்கிரகங்களுடன்- செவ்வாய் கூடி நின்றால் ஞானமும்
(அறிவும்) செல்வமும் உண்டு
12. இரண்டில் சூரியனும், சனியும் கூடி நின்றால், அவன் சம்பதித்தது
மட்டுமல்ல, பரம்பரைச் சொத்தும் சேர்ந்து கரைந்துவிடும்
13. இரண்டில் சுக்கிரனும், குருவும் கூடி நின்றால் நல்ல மனைவி, மக்கள்,
செல்வம் எல்லாம் கூடி வரும்
14. இரண்டாம் இடத்தில் குரு இருந்து அந்த வீட்டிற்கு ஏழில் புதன்
அமர்ந்திருந்தால் பொருள் விரையம் அல்லது நாசம் ஆகும்
15. இரண்டில் சந்திரன் நிற்க உடன், சனி அல்லது ராகு அல்லது கேது
சேர்ந்து நின்றால் தரித்திரம். கையில் காசு தங்காது (Everything will be
drained out)
16.
17. இரண்டிற்கதிபதி ஆறாம் வீட்டில் அமர்ந்தால் அவனுடைய சொத்துக்களைப் பகைவர்கள் -
அவனுடைய எதிரிகள் கைக்கொண்டு விடுவார்கள்.
18. அதற்கு நேர்மாறாக ஆறாம் அதிபதி இரண்டாம் வீட்டில் வந்து
அமர்ந்திருந்தால், எதிரிகளுடைய சொத்துக்கள் இவனுக்கு வந்து சேரும்.
19. கடக லக்கினத்தில் பிறந்தவனுக்கு, சூரியனும், சந்திரனும், சுக்கிரனும்
ஒன்றாகக்கூடி பாவ வீட்டில் இருந்தால் அவன் பிறவிக் குருடனாய்
இருப்பான்.
20. இரண்டாம் வீட்டுக்காரன் சுக்கிரனாகி, அவன் லக்கினாதிபதியுடன்
கூடி மூன்றில் இருந்தால் ஜாதகனுக்குக் கண் நோய் உண்டாகும்
21. இரண்டாம் அதிபனும், புதனும் கூடி ஆறாம் இடத்தில் வலுவாக
அமர்ந்தால் ஜாதகன் ஊமையாக இருப்பான்.
22. இரண்டம் அதிபனும், புதனும் கூடி எட்டிலோ அல்லது பன்னி
ரெண்டிலோ இருந்தாலும் ஜாதகன் ஊமையாகிவிடுவான்
23. இரண்டாம் அதிபதியும், குருவும், சுக்கிரனும் உச்சமடைந்திருந்தால்
ஜாதகன் அதி புத்திசாலியாக இருப்பான்
24. இரண்டிற்குடையவனும், புதனும் உச்சம் பெற்றிருக்க, லக்கினத்தில்
குருவும், எட்டில் சனியும் இருந்தால் ஜாதகன் பெரிய மேதையாக விளங்குவான்.
25. மூன்று, அறு, எட்டு, பதினொன்று ஆகிய வீடுகளில் பாவக் கிரகங்கள்
நின்று அவை லக்கினத்தைப் பார்க்காமல் இருந்தாலே ஜாதகன் பெரிய
செல்வந்தனாக இருப்பான்.
நாமக்கல்
மூணாம் பாவகத்தில் உள்ள சில பாவக காரகத்துவம்
இந்த பாவகத்தில் ஒவ்வொரு கிரகமும் நின்றாள் என்ன பலன் என்பதை பாப்போம் .
புகழ், அதிகாரம், ஆணவம் ,ஈகை குணம் கொண்ட சூரியன் நின்றாள் நிச்சயம் இளைய சகொதிரன் புகழ் கொண்டவனாக இருப்பான்
ஜாதகருக்கு அரசு பதவி , நிர்வாக திறன், தொண்டர்கள் பலம் (அரசியல் வாதியாக இருந்தால் ) முதலாளிக்கு பணியால் பலம் , ஆனால் காத்து, கைகள் பாதிப்பு ஏற்படலாம்
சஞ்சலம், உணவு, கற்பனை கிரகமான சந்திரன் நின்றாள் சகோதிரன் உணவு பிரியனாகவும், சஞ்சல மனம் கொண்டவனாக இருப்பான் . ஆபர சேர்கை, பணியால் பலம், சகோதிர மேன்மை ஏற்படும்,ஜாதகனுக்கு குறுகிய பயணம் அதிகம் வரும் (சந்திரன் குறுகிய பயணத்திற்கு காரகன் என்பதால் )
கோபம் ஆணவம், வலிமை முரட்டு தனம் கொண்ட செவ்வாய் நின்றாள் இளையசகொதிரன் வலிமை ,கோபம் உள்ளவனாக இருப்பான்
ஜாதகனுக்கு எதிரிகளை அளிக்கும் திறன் உண்டாகும்
புத்திசாலித்தனம், வாக்கு சாதுரியம் , அறிவு, நகைசுவை கொண்டகிரகமான புதன் நின்றாள் சாதகனின் இளைய சகொதிரனின் குணம் புதனின் கொண்டே இருக்கும் .ஜாதகனுக்கு குருட்டு தைரியம் வரும் ,வீரிய குறைபாடு வரும் (புதன் அலிகிரகம் என்பதால் ) சீடர்கள் மற்றும் வேலையாள் உதவி கிடைக்கும்
பொறுமை, ஆண்மீககுனம், அமைதி ,பொறுப்பு ,ஒழுக்கம் போன்ற வெற்றிக்கு காரணமான குரு நின்றாள் இளையசகொதிரன் அப்படியே இருக்கும் . ஜாதகனுக்கு மனோதிடம், சந்தேகம், அதிகாரம், நல்ல வசதியான ராஜ வாழ்வு உண்டு( kuru ராஜகிரகம் என்பதால் )
முயற்சிகள் வெற்றி உண்டாகும் ,மனம் தைரியமாக செயல்படும் ,ஜாதகனுக்கு அலைச்சல் உண்டாகும்
இரண்டுக்கு உடையவன் நின்றாள் ,இளையசகொதிரனுக்கு செலவுகள் ஏற்படும், ஜாதகனுக்கு வெளிநாடு தொடர்புகள் வரலாம்
ஜாதகனுக்கு காரிய முடக்கம், தருமா செலவு கூடும் இரண்டாம் அதிபதி பாபி ஆனால் கஷ்டமில்லை, சுப கிரகமாக இருக்க கூடாது
மூன்றாம் பாவகதில் அந்த பாவக அதிபதியே நின்றாள் ஜாதகன் தைரியமுடயவன் இலசகொதிரன் நல்ல பேர் புகழ் உடையவன் ,பொன் ஆபரண சேர்கை, நல்ல வேலையாள் அமைவு, நண்பர்கள் உதவி, அரசு பணம் கிடைத்தல். போன்றவை ஏற்படும்
நான்காம் பாவ அதிபதி நின்றாள் இளையசகொதிரன் தனம் உடையவன் ,நல்ல வாக்கு உடையவன் ,நல்ல சகோதிர மேன்மை ஏற்படும் ,ஜாதகனுக்கு தாயார் தோஷம் ஏற்படும், வாகன செலவு, கால்நடைகள் இழப்பு, வீட்டு செலவுகள் ,வீடு இழப்பு, போன்றவை ஏற்படும், ஜாதகனுக்கு சுகம் குறைவு உண்டாகும், கல்வி தடை வரலாம், உறவினர்களால் செலவுகள் வரலாம்.
ஐந்தாம் பாவ அதிபதி நின்றாள் இளையசகொதிரன் மிகுந்த தைரியமுடையவன் ,ஜாதகனுக்கு சிறுது புத்திர தோஷம் வரலாம், சுயமுயற்சி, தன்னம்னிக்கை, சுயதொழில் ஜாதகனுக்கு கிடைக்கும்
தாயாரின் அன்பு இளையசகோதிரனுக்கு கிடைக்கும் .
ஆறாம் பாவக அதிபதி நின்றாள் இளய சகொதிரனுக்கு வீடு,மனை, சுகம் உண்டாகும், வாகன சுகம் இளையசகோதிரனுக்கு உண்டு .
ஜாதகனுக்கு தைரிய வீரிய குறைபாடு வரலாம். வேலையாள் தகராறு செய்வார்கள்' ஜாதகன் அகால போஜனம் தின்பான், குடும் பகை வரும் ,கடன் கிடைக்காது, வேலை கிடைப்பது கொஞ்சம் கடினமாகும், பகைவர்களால் கொஞ்சம் பயம் இல்லை ,
ஏழாம் பாவக அதிபதி நின்ற பலன் இளையசகோதிரனுக்கு அறிவு உண்டாகும் பொழுபோக்கு விசயங்களில் நாட்டம் வரலாம்
ஜாதகனுக்கு பல தார பிரச்சனை வரலாம் , ,ஆபரண சேர்க்கை, வியாபார வளர்ச்சி, தைரியமான மனைவி, கல்யாணம் ஆன பிறகு அலைச்சல் வரும்.
எட்டாம் பாவக அதிபதி நின்றாள் இளையசகோதிரனுக்கு நோய்கள் உண்டாகும், கடன்கள் ஏற்படும் ,ஜாதகனுக்கு வேலையாள் பிரச்சனை உருவாகும், ஆபரண இழப்பு, வீரிய ,தைரிய இழப்பு வரலாம், சிற்றின்பதினால் கெடுதல், ,இசை ஆர்வமின்மை ஏற்படலாம்
ஒன்பதாம் paaவ அதிபதி நின்றாள் இளையசகோதிரனுக்கு மனைவியின் அன்பு கிடைக்கும் பொதுநல மக்களால் விரும்புவான், ஜாதகனுக்கு பிதா தோஷம் சிறிது வரலாம் . இருந்தாலும் பாகியாதிபதி யாக இருப்பதால் தனசெற்கை, ஆபரண சேர்கை, வேலையாள் உதவி, ஆண்மை விருத்தி, துணிவு கூடுதல் போன்றவை வரலாம்
பத்தாம் பவ அதிபதி நின்றாள் இளையசகொதிரன் அவமான படுவான், பல துன்பங்களை அனுபவிப்பான் ,ஜாதகனுக்கு தொழில் தேக்கம் வரலாம் ,பண முடை வரலாம், ஆனால் லக்ன சுபர்களாக இருந்தால் செல்வ சேர்கை ஏற்படலாம்
பதினொன் பாவ அதிபதி நின்றாள் இளையசகோதிரனுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும், பேர் புகழ் உண்டாகும், ஜாதகனுக்கு ,மூத்த சகொதிரன் உதவி, அதிகாரம், புத்திர யோகம் கொஞ்சம் லாப குறைவு வரலாம். .
பன்னிரண்டாம் அதிபதி லக்னத்தில் இருந்தால் சகோதிர மேன்மை ஏற்படலாம். பிதுர், புத்திர தோஷம் வரலாம், ஜாதகனுக்கு திடீர் தனம் வரலாம் ,செலவுகள் குறைவாக செய்வார், சேமிக்கும் எண்ணம் ஏற்படும், வெளிநாட்டு யோகம் தடை பெரும், வேலைகாரர்களுக்கு அதிகம் செலவு செய்ய வேண்டியது வரும், நகைகள் வாங்க அதிகம் செலவு செய்யலாம் சிற்றின்ப செலவுகள் அதிகமாகும்,
என்ன மாணவர்களே குழப்பமாக உள்ளதா, நன்றாக குலம்புங்கள் , குழம்பினாள் தெளிவு கிடைக்கும் ,உங்களுக்கு ஏன் ,aetharkku என்ற ஆராய்ச்சி மனப்பான்மை varavendum . அன்பு maanavarkale இதை தான் புரிந்து கொள்ளுதல் என்பார்கள்
அடுத்து நாலாம் பாவகத்தை நன்றாக பாப்போம்
இந்து லக்னம்
இது ஒருவனின் செல்வ நிலையை அறிய பயன்படும் கணிதமாகும்.
அதற்க்கு முன் ஒவ்வொரு கிரகத்திற்குரிய களப்பரிமான எங்களை நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.
சூரியன் கலபரிமான எண் 30
சந்திரன் 16
செவ்வாய் 6
புதன் 8
குரு 10
சுக்கிரன் 12
சனி 1
இது நிலையானது ,நாபகம் வைத்துகொள்ளுங்கள்
முதலில் பயப்படவேண்டாம், விரைவாக நீங்கள் ஜாதகம் பார்க்கும் வழியை கற்று கொள்வீர்
நிச்சயம் உங்களுக்கு நடக்கும்.
நன்றி
என்றும் உங்கள் ஆசிரியர்.
வணக்கம்

மூணாம் பாவகம் ,நாலாம் பாவகம், இந்துலக்னம்
பஞ்சமுஹன் ஜோதிட பயிற்சி மற்றும் கல்வி மையம்நாமக்கல்
மூணாம் பாவகத்தில் உள்ள சில பாவக காரகத்துவம்
- சிற்றின்பம்
- வேலையாள், நமக்கு உதவுபவர், சீடர்கள்
- இசை பிரியம்
- தைரியம் , ஆண்மை, வீரியம்
- இளைய சகோதிரம்
- காத்து
- ஆபரண நகைகள்
- சிறு தேவதை ஆசி
- வெற்றி ஸ்தானம்
- ஆயுள்
- சிறு வாகனங்கள்
- குறுகிய பிரயாணம்
இந்த பாவகத்தில் ஒவ்வொரு கிரகமும் நின்றாள் என்ன பலன் என்பதை பாப்போம் .
புகழ், அதிகாரம், ஆணவம் ,ஈகை குணம் கொண்ட சூரியன் நின்றாள் நிச்சயம் இளைய சகொதிரன் புகழ் கொண்டவனாக இருப்பான்
ஜாதகருக்கு அரசு பதவி , நிர்வாக திறன், தொண்டர்கள் பலம் (அரசியல் வாதியாக இருந்தால் ) முதலாளிக்கு பணியால் பலம் , ஆனால் காத்து, கைகள் பாதிப்பு ஏற்படலாம்
சஞ்சலம், உணவு, கற்பனை கிரகமான சந்திரன் நின்றாள் சகோதிரன் உணவு பிரியனாகவும், சஞ்சல மனம் கொண்டவனாக இருப்பான் . ஆபர சேர்கை, பணியால் பலம், சகோதிர மேன்மை ஏற்படும்,ஜாதகனுக்கு குறுகிய பயணம் அதிகம் வரும் (சந்திரன் குறுகிய பயணத்திற்கு காரகன் என்பதால் )
கோபம் ஆணவம், வலிமை முரட்டு தனம் கொண்ட செவ்வாய் நின்றாள் இளையசகொதிரன் வலிமை ,கோபம் உள்ளவனாக இருப்பான்
ஜாதகனுக்கு எதிரிகளை அளிக்கும் திறன் உண்டாகும்
புத்திசாலித்தனம், வாக்கு சாதுரியம் , அறிவு, நகைசுவை கொண்டகிரகமான புதன் நின்றாள் சாதகனின் இளைய சகொதிரனின் குணம் புதனின் கொண்டே இருக்கும் .ஜாதகனுக்கு குருட்டு தைரியம் வரும் ,வீரிய குறைபாடு வரும் (புதன் அலிகிரகம் என்பதால் ) சீடர்கள் மற்றும் வேலையாள் உதவி கிடைக்கும்
பொறுமை, ஆண்மீககுனம், அமைதி ,பொறுப்பு ,ஒழுக்கம் போன்ற வெற்றிக்கு காரணமான குரு நின்றாள் இளையசகொதிரன் அப்படியே இருக்கும் . ஜாதகனுக்கு மனோதிடம், சந்தேகம், அதிகாரம், நல்ல வசதியான ராஜ வாழ்வு உண்டு( kuru ராஜகிரகம் என்பதால் )
அழகு, கவர்ச்சி, ஆடை அழகு ,கலாரசிகன், கவர்ச்சி தன்மை, இசை விருப்பம், பகுத்து பந்தா போன்ற காரகம் கொண்ட சுக்கிரன் நின்றாள் இந்த காரக தன்மை இளைய சகொதிரனுக்கு கிடைக்கும் .ஆனால் அதே சமயன் இந்த செய்கைகளால் சகொதிரனுக்கு தரித்திர நிலைமை வரலாம், ஜாதனுக்கு ஆடம்பர செலவு, உதவி இன்மை, போக குறைவு, தனகுறைவு, மாணவி சுக குறைபாடு வரலாம்
மந்தகுணம் , அறிவுக்குறைவு, முதிர்ந்த தன்மை, ,தாமத குணம், கொண்ட சனி இருந்தால் இந்த காரகுனம் இளைய சகொதிரனுக்கு கொஞ்சம் வரலாம் , ஜாதகனுக்கு ஆயுள் பலம், நிர்வாக தன்மை, அரசின் நிதி, கிடைக்கும், ஜாதகன் வீண் செலவு செய்வான், தந்தைக்கு தோஷம் ,அயன சயன தோஷம் ஏற்படும்
வஞ்சனை சூது கொண்ட ராகு மூனில் இருந்தால் இளைய சகொதிரனுக்கு தோஷம்தான் ,ஜாதகனுக்கு சில நன்மைகள் ஏற்படும் சனி நின்ற பலன் ராகுவுக்கு வரும் ,ஜாதகனுக்கு மாந்திரீக வல்லமை வரும் ,விஞ்ஞான தன்மை வரும், ஆனால் வீண்பழி ,கேட்ட பெயர் ஏற்படும்
ஆன்மிகம் ,விரக்தி ,முதிர்ந்த தன்மை, மெய்ணன் தன்மைகொண்ட கேது நின்றாள் அந்த குணம் இளைய சகோதிரனுக்கு வரும் , ஜாதகனுக்கு மந்த குணம், சுகபோக வெறுப்பு, தவ சித்தி, பகுத்தறிவு, சர்வ ஞானம், தெய்வ பக்தி தந்துவிடும் .
அன்பு மாணவர்களே கொஞ்சம் புரிகிறதா, பாவகதில் கிரகங்கள் tharum பலன்களை கொஞ்சம் பார்ப்போம் .
இந்த பாவகதில் லக்னாதிபதி நின்றாள் இளைய சகொதிரனின் அன்பும், ஆதரவு ,பண உதவி ஜாதகனுக்கு கிடைக்கும், சகோதிர நன்மை ஏற்படும்
இந்த பாவகதில் லக்னாதிபதி நின்றாள் இளைய சகொதிரனின் அன்பும், ஆதரவு ,பண உதவி ஜாதகனுக்கு கிடைக்கும், சகோதிர நன்மை ஏற்படும்
முயற்சிகள் வெற்றி உண்டாகும் ,மனம் தைரியமாக செயல்படும் ,ஜாதகனுக்கு அலைச்சல் உண்டாகும்
இரண்டுக்கு உடையவன் நின்றாள் ,இளையசகொதிரனுக்கு செலவுகள் ஏற்படும், ஜாதகனுக்கு வெளிநாடு தொடர்புகள் வரலாம்
ஜாதகனுக்கு காரிய முடக்கம், தருமா செலவு கூடும் இரண்டாம் அதிபதி பாபி ஆனால் கஷ்டமில்லை, சுப கிரகமாக இருக்க கூடாது
மூன்றாம் பாவகதில் அந்த பாவக அதிபதியே நின்றாள் ஜாதகன் தைரியமுடயவன் இலசகொதிரன் நல்ல பேர் புகழ் உடையவன் ,பொன் ஆபரண சேர்கை, நல்ல வேலையாள் அமைவு, நண்பர்கள் உதவி, அரசு பணம் கிடைத்தல். போன்றவை ஏற்படும்
நான்காம் பாவ அதிபதி நின்றாள் இளையசகொதிரன் தனம் உடையவன் ,நல்ல வாக்கு உடையவன் ,நல்ல சகோதிர மேன்மை ஏற்படும் ,ஜாதகனுக்கு தாயார் தோஷம் ஏற்படும், வாகன செலவு, கால்நடைகள் இழப்பு, வீட்டு செலவுகள் ,வீடு இழப்பு, போன்றவை ஏற்படும், ஜாதகனுக்கு சுகம் குறைவு உண்டாகும், கல்வி தடை வரலாம், உறவினர்களால் செலவுகள் வரலாம்.
ஐந்தாம் பாவ அதிபதி நின்றாள் இளையசகொதிரன் மிகுந்த தைரியமுடையவன் ,ஜாதகனுக்கு சிறுது புத்திர தோஷம் வரலாம், சுயமுயற்சி, தன்னம்னிக்கை, சுயதொழில் ஜாதகனுக்கு கிடைக்கும்
தாயாரின் அன்பு இளையசகோதிரனுக்கு கிடைக்கும் .
ஆறாம் பாவக அதிபதி நின்றாள் இளய சகொதிரனுக்கு வீடு,மனை, சுகம் உண்டாகும், வாகன சுகம் இளையசகோதிரனுக்கு உண்டு .
ஜாதகனுக்கு தைரிய வீரிய குறைபாடு வரலாம். வேலையாள் தகராறு செய்வார்கள்' ஜாதகன் அகால போஜனம் தின்பான், குடும் பகை வரும் ,கடன் கிடைக்காது, வேலை கிடைப்பது கொஞ்சம் கடினமாகும், பகைவர்களால் கொஞ்சம் பயம் இல்லை ,
ஏழாம் பாவக அதிபதி நின்ற பலன் இளையசகோதிரனுக்கு அறிவு உண்டாகும் பொழுபோக்கு விசயங்களில் நாட்டம் வரலாம்
ஜாதகனுக்கு பல தார பிரச்சனை வரலாம் , ,ஆபரண சேர்க்கை, வியாபார வளர்ச்சி, தைரியமான மனைவி, கல்யாணம் ஆன பிறகு அலைச்சல் வரும்.
எட்டாம் பாவக அதிபதி நின்றாள் இளையசகோதிரனுக்கு நோய்கள் உண்டாகும், கடன்கள் ஏற்படும் ,ஜாதகனுக்கு வேலையாள் பிரச்சனை உருவாகும், ஆபரண இழப்பு, வீரிய ,தைரிய இழப்பு வரலாம், சிற்றின்பதினால் கெடுதல், ,இசை ஆர்வமின்மை ஏற்படலாம்
ஒன்பதாம் paaவ அதிபதி நின்றாள் இளையசகோதிரனுக்கு மனைவியின் அன்பு கிடைக்கும் பொதுநல மக்களால் விரும்புவான், ஜாதகனுக்கு பிதா தோஷம் சிறிது வரலாம் . இருந்தாலும் பாகியாதிபதி யாக இருப்பதால் தனசெற்கை, ஆபரண சேர்கை, வேலையாள் உதவி, ஆண்மை விருத்தி, துணிவு கூடுதல் போன்றவை வரலாம்
பத்தாம் பவ அதிபதி நின்றாள் இளையசகொதிரன் அவமான படுவான், பல துன்பங்களை அனுபவிப்பான் ,ஜாதகனுக்கு தொழில் தேக்கம் வரலாம் ,பண முடை வரலாம், ஆனால் லக்ன சுபர்களாக இருந்தால் செல்வ சேர்கை ஏற்படலாம்
பதினொன் பாவ அதிபதி நின்றாள் இளையசகோதிரனுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும், பேர் புகழ் உண்டாகும், ஜாதகனுக்கு ,மூத்த சகொதிரன் உதவி, அதிகாரம், புத்திர யோகம் கொஞ்சம் லாப குறைவு வரலாம். .
பன்னிரண்டாம் அதிபதி லக்னத்தில் இருந்தால் சகோதிர மேன்மை ஏற்படலாம். பிதுர், புத்திர தோஷம் வரலாம், ஜாதகனுக்கு திடீர் தனம் வரலாம் ,செலவுகள் குறைவாக செய்வார், சேமிக்கும் எண்ணம் ஏற்படும், வெளிநாட்டு யோகம் தடை பெரும், வேலைகாரர்களுக்கு அதிகம் செலவு செய்ய வேண்டியது வரும், நகைகள் வாங்க அதிகம் செலவு செய்யலாம் சிற்றின்ப செலவுகள் அதிகமாகும்,
என்ன மாணவர்களே குழப்பமாக உள்ளதா, நன்றாக குலம்புங்கள் , குழம்பினாள் தெளிவு கிடைக்கும் ,உங்களுக்கு ஏன் ,aetharkku என்ற ஆராய்ச்சி மனப்பான்மை varavendum . அன்பு maanavarkale இதை தான் புரிந்து கொள்ளுதல் என்பார்கள்
அடுத்து நாலாம் பாவகத்தை நன்றாக பாப்போம்
இந்து லக்னம்
இது ஒருவனின் செல்வ நிலையை அறிய பயன்படும் கணிதமாகும்.
- இந்து லக்னத்தில் உள்ள கோள்களின் திசா ,புத்தியில் செல்வ சேர்கை நிச்சயம் ஏற்படும்
- அந்த கோள் கெட்ட பாவக அதிபதியாக இருந்தாலும் ஏற்படும்
- இந்து லக்னத்தில் தீய கோள் இருந்தால் குறைந்த செல்வத்தை சேர்ப்பார்
- நற் கோள் இருந்தால் பெரும் செல்வத்தை சேர்ப்பார்
- இந்து லக்னத்தில் தீய கோள் உச்சம் பெற்று இருந்தால் பெரும் கோடீஸ்வரர் ஆவார்
- இந்து லக்னத்தில் உள்ள கோள்களின் திசை, புத்தி வராவிட்டால் இந்த பலன் நடக்காது
அதற்க்கு முன் ஒவ்வொரு கிரகத்திற்குரிய களப்பரிமான எங்களை நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.
சூரியன் கலபரிமான எண் 30
சந்திரன் 16
செவ்வாய் 6
புதன் 8
குரு 10
சுக்கிரன் 12
சனி 1
இது நிலையானது ,நாபகம் வைத்துகொள்ளுங்கள்
- ஒருவரின் லக்னத்திற்கு ஒன்பதாம் அதிபதியின் கலபரிமான எண்னை குறிக்கவேண்டும்
- அதே போல் ராசிக்கு ஒன்பதாம் அதிபதியின் கலபரிமான எண்னை குறித்துக்கொள்ளவேண்டும்
- இரண்டையும் கூட்டிக்கொள்ளவேண்டும்
- கூட்டி வந்த எண்னை 12 ஆல் வகுக்கவேண்டும்
- மீதி வரும் எண்னை வைத்து பிறந்த ராசியில் இருந்து எண்ணி போடவேண்டும்
- அப்படி வரும் ராசியே இந்து லக்னமாகும்
- இந்த இந்து லக்னத்தில் உள்ள கிரகமே செல்வ யோகத்தை உருவாக்கும்
- நமது நடிகர் ரஜினி காந்த் ஜாதகம் சிம்ம லக்னம் ஆகும் ,அவர் ராசி மகரம் இந்து லக்ன கணித்தபடி இவரது இந்து லக்னம் கும்பம் ஆகும் அந்த கும்பத்தில் குரு உள்ளார் ,அந்த குரு திசை காலத்திலயே அவர் சூப்பர் ஸ்டார் ஆனார்
முதலில் பயப்படவேண்டாம், விரைவாக நீங்கள் ஜாதகம் பார்க்கும் வழியை கற்று கொள்வீர்
நிச்சயம் உங்களுக்கு நடக்கும்.
நன்றி
என்றும் உங்கள் ஆசிரியர்.
வணக்கம்
ஞாயிறு, 1 ஜூலை, 2012
சனி, 23 ஜூன், 2012
inthu laknam
நமது வாசக அன்பர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம். இன்று நாம் இந்து லக்கினம் பற்றி பார்க்க விருக்கிறோம்.
விக்கிரமாதித்தன் காலத்தில் வாழ்ந்த அம்பிகையின் அனுக்கிரகம் பூரணமாகப் பெற்ற , மகா கவி காளி தாசரின் மூலம் இந்த உலகுக்கு கிடைத்த , பல அரும்பெரும் பொக்கிஷங்களில் ஜோதிடமும் ஒன்று. . அவரால் கிடைக்கப் பெற்றதே இந்த இந்து லக்கினம் பற்றிய குறிப்பு.
அவரது "உத்தர காலமிர்தம் " - நிஜமாகவே ஒரு அமுதம் தான். சமஸ்கிருதத்தில் உத்தர் என்றால் பதில் . KBC நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன் சொல்வாரே ஞாபகம் இருக்கிறதா? " சஹி உத்தர். " அப்படினா சரியான பதில்.
உத்தர காலமிர்தம் என்றால் - காலா காலத்திற்கும் பொருந்தும் , அமுதம் போன்ற - கேள்வி பதில் தொகுப்பு என்ற பொருள் கொள்ளுங்கள்,
சரி, இந்து லக்கினம் பற்றிய தகவல்களுக்கு வருவோம்..
இதைப் பற்றி , நிறைய ஜோதிடர்களுக்கு தெரியாது என்பது என் அனுபவக் கருத்து. அது போன்ற , ஒரு அரிய விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி.
உங்கள் ஜாதகத்தில் - எதுவும் உச்ச கிரகம், ஆட்சி கிரகம் இல்லை என்ற போது , இந்து லக்கினத்தில் நின்ற கிரகத்தின் தசை வருகிறதா என்று பாருங்கள்... நீங்கள் கோடீஸ்வரராவது 100 % உறுதி.
உங்களுக்கு கிடைக்கும் , பண வரவு பற்றி தெரிந்து கொள்ள - இரண்டாம் இடம், குரு பகவான் நிலைமை தவிர இந்து லக்கினமும் தெரிந்தால் நல்லது.
சரி, இதை எப்படி பார்ப்பது என்று பார்ப்போம்..
உங்கள் ஜாதக கட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள் :
லக்கினம், ராசி --- என்ன என்று பாருங்கள் :
சூரியனுக்கு - 30
சந்திரனுக்கு - 16
செவ்வாய்க்கு - 6
புதனுக்கு - 8
சுக்கிரனுக்கு - 10
குருவுக்கு - 12
சனிக்கு - 1
ராகு, கேதுக்கு - கலைகள் கிடையாது.
உங்கள் லக்கினத்தில் இருந்து - ஒன்பதாம் வீடு என்ன என்று பாருங்கள் . அந்த வீட்டின் அதிபதி யார் ? அவருக்கு எத்தனை கலை என்று பாருங்கள்.
அதேபோலே - உங்கள் ராசிக்கு - ஒன்பதாம் வீட்டின் அதிபர் , அவருக்கு எத்தனை கலை எண் என்று பாருங்கள் .
இரண்டு கலை எண்களையும் கூட்டி , வரும் கூட்டுத்தொகையை - 12 ஆல் வகுக்க வேண்டும். வகுத்த பிறகு வரும் எண்ணை, சந்திரன் நின்ற வீட்டில் இருந்து 1 ...2 ...3 ... என்று எண்ணி வாருங்கள். எந்த வீட்டில் மீதி தொகை முடிகிறதோ .. அந்த வீடு .. இந்து லக்கினம் என்று பெயர்...
இந்த இந்து லக்கினத்தில் இருந்து வரும் ஒரு கிரகத்தின் தசை நடக்கிறது என்றால்... உங்களுக்கு , பொன்னும் பொருளும், புகழும் குவியும்...
ஒரு உதாரணத்திற்கு - விருச்சிக லக்கினம் , சிம்ம ராசி என்று வைத்துக் கொள்வோம்.
விருச்சிகத்திற்கு - ஒன்பதாம் வீடு - கடகம் . அதிபதி - சந்திரன் . அவரது கலை எண் : 16 .
சிம்ம ராசிக்கு - ஒன்பதாம் வீடு - மேஷம் . அதிபதி - செவ்வாய். கலை எண் : 6.
இரண்டையும் கூட்டினால் - வருவது : 16 + 6 = 22 .
12 ஆல் வகுக்க மீதி வருவது ::: 10 . இதை சந்திரன் நின்ற சிம்ம ராசியில் இருந்து என்ன , 10 ஆம் வீடாக வருவது ரிஷபம். இந்த ஜாதகருக்கு - ரிஷபமே இந்து லக்கினம் ஆகும்.
ரிஷபத்தில் இவருக்கு நிற்கும் கிரகத்தின் தசை நடந்தால் - அவருக்கு , அந்த தசை காலம் - அற்புதமான ஒரு காலமாக இருக்கும். அது அசுப / தீய கிரகமாகவே இருந்தாலும் , இது பொருந்தும்.
அவரது பலன் அளவு வேறுபட வாய்ப்பு இருக்கிறது. உதாரணத்திற்கு நடை முறையில் - ஆளும் கட்சி கவுன்சிலரும் அதிகாரம் படைத்தவர்தான், MLA , MP , மினிஸ்டர் இப்படி ஆளுக்கு தகுந்த மாதிரி வேறுபடும் இல்லையா? அதே மாதிரி ...
இயல்பில் இந்து லக்கினம் - ஜென்ம லக்கினத்திற்கு பகை வீடு , இல்லை பகை கிரகம், நீச கிரகம் அங்கே இருந்தால் - பலன் கொஞ்சம் குறையும். ஆனால் , அபரிமித பலன்கள் கண்டிப்பாக ஏற்படும்.
அதே வேளையில் , இந்த இந்து லக்கினம் - ஜென்ம லக்கினத்திற்கு , மறைவு ஸ்தானமாக இல்லாமல் ( 3 ,6 ,8 ,12 ) - இந்து லக்கினத்தில் - ஒரு சுப கிரகம் இருந்து , அல்லது சுப கிரகங்களின் பார்வை பெற்று தசை நடந்தால் - அவர் உலக புகழ் பெரும் கோடீஸ்வரராவார்.
இதைத் தவிர சில நுணுக்கமான விதிகளும், விதி விலக்குகளும் உண்டு. அதை எல்லாம் நீங்கள் - தனியே , உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது - ஆராய்ச்சி
செய்து கொள்ளுங்கள்.
பாடம் புரியவில்லை என்றால் , சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.. வழக்கம் போல் - உங்கள் கருத்துக்களும், விமர்சனங்களும் வரவேற்கப் படுகின்றன.
=======================================================
அப்புறமா , இன்னொரு முக்கியமான விஷயம். வரவிருக்கும் பிரதோஷம் -
பற்றிய தினங்கள் பற்றிய குறிப்பு கொடுத்துள்ளேன். ஒவ்வொரு பிரதோசமும் - நீங்கள் சிவ ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது மனக் கவலைகளை நீக்கி , வாழ்வில் வளம் பெற seiyum
vanakkam

ஒவ்வொரு கிரகத்திற்கும் - இந்து இலக்கின விதிப்படி - கலை எண்கள் என்று உண்டு. "ஒளி எண்கள் " என்றும் வைத்துக் கொள்ளலாம்.

சனி, 26 மே, 2012
thasavarkkam
சப்தாம்சம்
oru ராசியை ஏழு பங்காக பிரித்தால் oru பங்கிற்கு
4 பாகை 17 கலை 8 விகளை வரும் .கிரகம் நின்ற ராசி ஆண்ராசிய , பென்றாசியா என பார்க்கவேண்டும்.
ஆண் ராசியானால் கிரகம் நின்ற ராசியிலிருந்து எண்ணி போடவேண்டும் ,பென்றாசியாக இருந்தால் கிரகம் நின்ற ஏழாவது ராசியிலிருந்து எண்ணி போடவேண்டும்.
oru ராசியை
10 பங்காக பிரித்தால் oru பங்கு பத்து பாகை யாகும்
ஆண் ராசி அதே ராசி , பென்ராசி கிரகம் நின்ற ராசியிலிருந்து ஒன்பதாம் ராசியில் இருந்து என்ன வேண்டும்
துவாதாம்சம்
oru பங்கு இரண்டு பாகை முப்பது கலையாகும்.கிரகம் நின்ற ராசியிளுருந்து எண்ணி போட்டாலே போதும்.
சோடசாம்சம் அல்லது காலங்கிசம்
oru ராசியை பதினாறு பங்காக பிரிக்கவேண்டும்.
oru பங்கு oru பாகை
52 கலை முப்பது ௦ விகளை வரும் அதாவது 3150 விகளை வரும்
oru ராசியில் பன்னண்டு கட்டம் மட்டும்தான் வரும் ,மீதி நாம் தான் கட்டம் போட்டுக்கொள்ளவேண்டும்
பதிமூன்றாவது கட்டம் பிரம்மன் ,பதினாலு மாயோன், பதினைந்து ருத்ரன் ,பதினாறு சூரியன்
ஆண் ராசி எனில் மேஷம் முதல் என்னவேண்டும், பென்ராசி எனில் சூரியன் முதல் என்ன வேண்டும்.
பிரமன்(13 ) - மாயோன் (பதினாலு ))
சூரியன்( பதினாறு ) --ருத்ரன் (பதினைந்து)
முப்பது பாகை கொண்ட ராசியை ஐந்து கிரகங்களுக்கு பிரிதுகொடுப்பது
ஆன்றாசியில்
செவ்வாய் 1-5 , சனி 6--10, குரு 11--18 , புதன் 19--25 , சுக்கிரன் 26--30
பென்றாசியில்
சுக்கிரன் 1--5, புதன் 6--10, குரு 11-18, சனி19--25 செவ்வாய்-26--30
கிரகம் ஆண் ராசியில் உள்ளத எனவும் பென்றாசியில் உள்ளதா எனவும் பார்க்கவேண்டும்.
oru கிரகம் பென்றாசியில் குறு பங்கில் நின்றாள் ராசி கட்டத்தில் குருவின் வீடான தாணுவில் போடவேண்டும்
சஸ்டியாம்சம்
oru ராசியை அறுபது பங்காக பிரிப்பது
oru பங்கு முப்பது கலை வரும்.
ஆண்ராசி எனில் கிரகம் இருந்த ராசியில் இருந்து எண்ணி போடவேண்டும்
பெண் ராசி எனில் கிரகம் இருந்த பன்னிரண்டாவது ராசியில் இருந்து எண்ணி போடவேண்டும்.
ஞாயிறு, 29 ஏப்ரல், 2012
மாந்தி
பஞ்சமுஹன் ஜோதிட பயிற்சி மற்றும் கல்வி மையம் நாமக்கல்
நாள்- 3-7-2011அன்புள்ள மாணவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வணக்கம் ,
ஜோதிடத்தில் எத்தனையோ விஷயம் நாம் கற்க வேண்டிஉள்ளது,
ஆனால் அடிப்படையாக நாம் சில விசயங்களை நன்றாக கற்றுகொண்டால் நாம் எளிதாக கற்றுகொள்ளலாம் .அதற்க்கு நாம் புரிந்து கொள்ள கூடிய தன்மை நாம் பெற்றுக்கொள்ளவேண்டும்.
பிறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்துதான் பாரேன் என்றான் இறைவன்
இறப்பில் வருவது யாதேனக்கேட்டேன்
இறந்துதான் பாரேன் என்றான் இறைவன்
மனையாள் சுகமெனில் எதுவெனக் கேட்டேன்
மனந்துதான் பாரேன் என்றான் இறைவன்
அனுபவித்தேதான் அறிவைத் வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏன் எனக்கேட்டேன்
ஆண்டவன் சற்றேன அருகினில் வந்து
"அனுபவம் என்பதே நான்தான் " என்றான்
மாணவர்களே எந்த விசயத்தையும் பார்த்த உடனே, அல்லது படித்த உடனே முடிஉக்கு வரக்கூடாது , அனுபவித்துதான் தெரிந்துகொள்ளவேண்டும் .
நாம் விரைவில் ஜோதிடராகவேண்டும் என்று நினைக்ககூடாது, நல்ல, பண்பான, விஷயம் தெரிந்த , உண்மைகளை உரைக்கும் ஜோதிடராக மாறவேண்டும்.
உங்களை நீங்களே உணரவேண்டும், எந்த அளவிற்கு ஜோதிடத்தில் ஆர்வமாக இருக்கிறீர்கள் ,வாரம் ஒருமுறை இங்கு வரும்போது மட்டுமே உங்களுக்கு ஜோதிட பாடம் நாபகம் வருகிறதா ?
தயவு செய்து அப்படி இருக்காதீர்கள் , இனிமேலும் தாமதம் செய்யாதீர்கள் , விழிப்புடன் இருங்கள், நிறைய தெரிந்துகொள்ள முயற்சி கொள்ளுங்கள் ,உங்களுக்கு சந்தேகம் நிச்சயம் வரும், வரும் சந்தேகங்களை ஒரு நோட்டில் குறித்துகொள்ளுங்கள் , நமது வகுப்பறைக்கு வரும்போது அதைப்பற்றி கேளுங்கள்
நீங்கள் உயர்நிலை வகுப்பில் பசித்து வருகிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்
இன்னும் பாவக காரகங்களை படிக்காமல் எத்தனை பேர் இருக்கின்றனர் ,?
இன்னும் ராசியின் தன்மைகளை தெரிந்துகொள்ளாமல் உள்ளீர் ?
கிரக காரகத்துவம் பற்றி எத்தனை பேர் தெரிந்துகொள்ளாமல் இருப்பீர் ,?
தயவு செய்து இனிமேல் ஆவது தெரிந்துகொள்ளுங்கள் ,இல்லாவிட்டால் கூமுட்டை ஜோதிடர் என்ற பெயர் உங்களுக்கு வந்துவிடும்,
ஒரு சிறு கதை படித்து விட்டு நாம் பாடத்திற்கு செல்வோமா
ஒரு திறமை மிகுந்த ஜோதிடர் ஒருவர் தன் சிறு வயது சீடனுடன் , ஆறு ஓடும் ஓர் அழகிய மலைப்பிரதேசத்தின் அருகில் வாழ்ந்து வந்தார். ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஜோதிடம் பற்றி படிப்பது இவரின் அன்றாட வழக்கமாக இருந்து வந்தது.
மற்றவர்கள் மீது மிகுந்த அன்பு செலுத்தும் தனது குருவை போன்றே தானும் ஆக வேண்டும் என்ற ஆசை கொண்ட அவரின் சீடன் அவரது ஒவ்வொரு செய்கையையும் கவனித்து அவற்றை தானும் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தான்.
ஒருநாள் சீடன் குருவை பார்த்து, “குருவே ! உங்களைப் போன்றே நானும் ஜோதிடத்தை படிக்க முயற்சி செய்தேன். ஆனால் ஒன்றுமே விளங்கவில்லை. அதுமட்டுமன்றி ஜோதிட புத்தகத்தை மூடிவைத்ததும் படித்த கொஞ்சமும் மறந்தும் போய் விடுகிறது. எதுவுமே விளங்காமல் ஜோதிடத்தை படிப்பதனால் அப்படி என்ன நன்மை நமக்கு வந்துவிடப்போகிறது?” என்று கேட்டான்.
சமைத்துக்கொண்டிருந்த குருவோ , கூடையில் எஞ்சியிருந்த அடுப்புக்கரியை அடுப்பினுள் தள்ளி விட்டுக் கொண்டு பேரனிடம் திரும்பி காலியான கூடையை அவன் கையில் கொடுத்து, “இந்த கரிக்கூடையில் ஆற்றுத்தண்ணீரை நிறைத்துக் கொண்டு வா!” என்றார். சீடனும் அவ்வாறே ஆற்றிற்குச் சென்று தண்ணீரை கூடையில் நிறைத்து வீடு திரும்பினான். ஆனால் ஆற்றங்கரையிலிருந்து வீட்டிற்குத் திரும்பி வந்து சேர்வதற்குள் கூடையில் கொண்டுவந்திருந்த தண்ணீர் முழுவதும் சிறிது சிறிதாக ஒழுகி கூடை காலியாகி விட்டிருந்தது. வருத்தமுடன் வீட்டினுள் நுழைந்து காலிக்கூடையைக் குருவிடம் காண்பித்தான். அவன் மனதின் வருத்தத்தைப் புரிந்து கொண்ட குரு சிரித்துக் கொண்டே, “சரி பரவாயில்லை! இம்முறை விரைவாக வீட்டிற்கு வந்து விடு!” என்று கூறி மறுபடியும் தண்ணீர் கொண்டு வர ஆற்றுக்கு அனுப்பினார்.
இம்முறை தண்ணீரை கூடையில் நிரப்பி விரைவாக சீடன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். எனினும் கூடை முன்பு போலவே காலியாகிவிட, “இக்கூடையில் தண்ணீர் கொண்டு வருவது சாத்தியமே இல்லை குருவே !” என்று மூச்சிரைக்க கூறிக் கொண்டே தண்ணீர் கொண்டுவர கூடைக்குப் பதிலாக வீட்டிலுள்ள மற்றொரு பெரிய பாத்திரத்தை எடுக்க முயன்றான். அப்போது அவனை தடுத்த குரு , “எனக்குப் பெரிய பாத்திரத்தில் நீர் தேவையில்லை. இந்தச் சிறு கூடையில் தான் வேண்டும். நீ கடுமையாக முயற்சிக்கவில்லை என்று எண்ணுகிறேன்!” என்று அவனைப் பார்த்து கூறினார்.
சிறு துளைகள் உடைய அக்கூடையில் ஆற்றிலிருந்து வீடுவரை தண்ணீரை ஒழுகாமல் தன்னால் கொண்டு வரமுடியாது என்று நன்றாகத் தெரிந்தும், குருவிற்கு தன் கடுமையான முயற்சிகளைக் காண்பிக்க வேண்டும் என்ற ரோஷம் கொப்பளிக்க மறுபடி ஆற்றுக்கு ஓடினான் சீடன் . ஆனால் பாவம் மறுபடியும் தோல்வியுடனே வீடு திரும்பினான்.
குருவே ! நான் மிகக் கடுமையாக முயற்சி செய்தும் பயன் ஏதுமில்லை என்பதை பார்த்தீர்களா?” என்று அவரிடம் கூடையைக் காட்டினான்.
“உனது இம்முயற்சி பலன் தரவில்லை என்றா நினைக்கிறாய்? கூடையை நன்றாகப் பார்!” என்றார் குரு .
தண்ணீர் கொண்டுவர வேண்டும் என்ற கவனத்திலேயே இருந்த சீடன் முதல் முறையாக கூடையினுள் பார்வையை செலுத்தினான். அப்பொழுது தான் குருவிடமிருந்து வாங்கிய கூடைக்கும் தற்போது கையில் இருக்கும் கூடைக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்தான்.
ஆம்! அடுப்புக்கரியினால் அழுக்கேறியிருந்த அக்கூடை இப்போது உள்ளும் புறமும் தூய்மையாகி பளிச்சென்றிருந்தது.
அன்புடன் தன் சீடனை அரவணைத்த குரு சொன்னார்,
“ஒருவர் தொடர்ந்து ஜோதிடத்தை படித்து வந்தால் இதுவே நிகழ்கிறது. ஜோதிடத்தை படிக்கும் பொது அதன் பொருளறிந்து படித்து அதன்படி செயல் படுவது சிறந்தது என்பதில் மாற்று கருத்து கிடையாது.
ஆனால் பொருளறியாமல் அதை படித்தாலும் அதன் ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து நன்மைகள் கிடைக்கும் என்று இறைவன் சொல்லி உள்ளார் நம்மை படைத்த இறைவனின் வார்த்தை இது என்ற எண்ணத்தில் ஒருவர் ஜோதிடத்தை படிக்கும் பொழுது படிப்பவனுக்கு அப்போது அது புரியாமல் போனாலும், படிப்பது அனைத்துமே அவரின் நினைவில் நிற்காமல் போய் இந்தக் கூடைநீர் போல் வழிந்தோடி விட்டாலும் படிப்பவரின் உள்ளம் ஜோதிட த்தில் நம்பிக்கை அடைகிறது. விரைவில் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற தன்னபிக்கை ஏற்படுகிறது அவரின் வாழ்வில் தெளிவு பிறக்கிறது. இதுவே மனிதனைப் படைத்த இறைவன் புரியும் அற்புதமாகும்!” என்று கூறினார்.
இதனைக் கேட்ட சிறுவன் மகிழ்ச்சியுடன், “மிக்க நன்றி குருவே . இனி நானும் உங்களை போல் தினமும் அதிகாலையில் முதல் வேலையாக தொடர்ந்து ஜோதிடத்தை படிப்பதை வழக்கமாக கொள்வேன்” என்று கூறினான்.
முயற்சி இன்றி ஏதுவும் கிடைக்காது என்பதை நன்கு புரிந்துகொள்ளுங்கள்
சரி மாணவர்களே ,நாம் இன்றைய பாடமாக நாம் மாந்தி கணிதமும் மற்றும் பன்னிரண்டு பாவத்திலும் மாந்தி நின்ற பலன்களை கற்று கொள்வோம் .
- மாந்தியை குளிகன் என்றும் அழைக்கபடுகிறது
- சனிபகவானின் புத்திரன் என்றும் அழைக்கபடுகிறது
- இது துணை கிரகமாக செயல்படுகிறது
- பகலில் ஒரு குழந்தை பிறந்தால் குளிகன் என்றும் இரவில் ஒரு குழந்தை பிறந்தால் மாந்தி என்றும் சொல்ல படுகிறது
- இந்த உபகிரகம் எப்போது உதயமாகும் என்று ஒரு நிலையான கணக்கு உள்ளது
நாயிறு 26 10
திங்கள் 22 06
செவ்வாய் 18 02
புதன் 14 26
வியாழன் 10 22
வெள்ளி 06 18
சனி 02 14
ஓவொரு நாளும் சூரிய உதயத்திற்கு பின் ,மேலே குறிப்பிட்ட நாழிகையில் மாந்தி உருவாகிறது ,அந்த நாளிக வினாடிக்கு எந்த லக்னம் உதயமாகிறதோ அந்த ராசியில் குளிகனை குறிப்பிடவேண்டும்
மொத்தத்தில் லக்னத்தை கணிப்பது போலவே இதற்கும் கணிதம் செய்யவேண்டும்
எப்படி கணிதம் செய்யவேண்டும் என்பதை நாம் கற்றுகொள்வோம்
அதற்க்கு முன் மாந்தியபற்றி விரிவாக கானவேநன்மை- தீமை செய்வதில் முக்கியமானவர் சனி மைந்தன் மாந்தி!
நம்ம நாட்டு வானிலை விஞ்ஞானிகள் இப்ப உள்ள ஆளுகளை சொல்லலை. நவக்கிரகத்தை கண்டுபிடிச்சு ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு பலன்களை சொன்னாங்களே அந்த குரூப்பை சொல்றேன். அவங்க சொன்ன ஒரு துணைக் கோள்தான் மாந்தி.
சனிக்கிரகம் இருக்கு அதோட துணைக்கோளை பாத்தீங்களா-டைட்டன் அதைத்தான் மாந்தி அப்படின்னிருக்காங்க நம்ம ஆளுங்க. சமீபத்து செய்தில டைட்டன்ல தண்ணி இருந்ததுக்கான அடையாளம் இருக்குங்கறாங்க.
ரஷ்ய விஞ்ஞானிகள் என்ன சொல்றாங்க யு.எப்.ஓ எனப்படும் பறக்கும் தட்டுகளில் வரும் அயல் கிரகவாசிகள் டைட்டனில் இறங்கி ரெஸ்ட் எடுத்து பயணக் களைப்பை போக்கிட்டு பூமிக்கு வந்து பாத்துட்டு போறதா சொல்றாங்க.
எது எப்படியோ ஆயிரம் வருஷத்துக்கு முன்னால எந்த விதமான விஞ்ஞான உபகரணமும் இல்லாமல் நவக்கிரகத்தை கண்டுபிடிச்சு மாந்திய பத்தியும் சொல்லியிருக்காங்க இது நிச்சயமா நம்ம ஆளுகளுக்கு வெளி கிரக தொடர்பு நிச்சயமா இருந்ததுக்கான ஒரு ஆதாரம்.
-ஜாதகத்தில் கூர்ந்து கவனிக்க வேண்டியவர்!
பிறவிப் பலனை அறிய, ஜாதகத்தில் ஸ்ரீசனீஸ்வரரைப்போல் சனியின் மைந்தன் மாந்தியின் அமைப்பும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. சனி ஆயுள் காரகன் என்றால், மாந்தி மரணத்திற்கு காரகன் ஆவார். சர்ப்ப கிரகங்களான ராகு- கேதுவைவிட மாந்திக்கு அதிகப் பலன் உண்டு என நூல்கüல் கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீவிஷ்ணு பகவான் கூர்ம அவதாரம் எடுத்த பின்னரே ராகு- கேதுக்கள் தோன்றி னர். தேவர்களுக்கெல்லாம் சிம்ம சொப்பன மாக விளங்கிய இராவணனின் அழிவுக்குப் பிறகு ராகு- கேதுக்கள் மகாவிஷ்ணுவின் ஆசியுடன் கிரகப் பதவியேற்றனர்.
இராவணன் மகன் மேகநாதன் (எ) இந்திரஜித் பிறந்த நேரத்திலேயே மாந்தி அவதரித்தார். சர்வ வல்லமையும், அரிய அற்புதமான வரங்களையும் பெற்ற இந்திரஜித் தின் இறப்பின் பொருட்டே, அவன் பிறக்கும்போதே பிறந்தவர்தான் மாந்தி
.
ராமாயணத்தில் ஒரு கிளைக் கதையில், மாந்தியைப் பற்றிய செய்தி உள்ளது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். படித்தவர்கள் அறியத்தரலாம். தன் தவவலிமையால் சிவனிடம் வரம் பெற்ற ராவணன், கிரகங்களையே தன்னிடத்திற்கு அழைக்கும் பேறுபெற்று விளங்கினானாம். தன் மகன் இந்திரஜித் பிறக்க இருந்த சமயத்தில், சனியை வரவழைத்த ராவணன். என்னுடைய மகனின் ஜாதகத்தில் நீ பதினொன்றாம் இடத்தில்தான் இருக்க வேண்டும் என்று பணித்தானாம். ஜாதகத்தில், சனிக்கு 11ஆம் வீடு சிறந்த இடம். 12ஆம் வீடுதான் மோசமான இடம். வேறு வழியில்லாமல் சரி என்று ஒப்புக்கொண்ட சனி, அலட்சியத்தாலும், தவறுதலாலும், கவனக்குறைவாலும், அப்படி 11ல் நிற்கும் போது, சனியின் ஒரு கால் 12ஆம் வீட்டின் மேல் இருந்ததாம். கோபமுற்ற ராவணன், தன் நீண்ட வாளால், சனியின் அந்தக் காலை வெட்டிவீழ்த்த, அது ஒன்றாம் வீட்டில் போய் விழுந்ததாம். விழுந்த அந்தக் காலும், அதனுடன் இருந்த சதைப் பகுதியும் சேர்ந்துதான் மாந்தியாக உருவெடுத்ததாம். அதோடு லக்கினத்தில் உயிர் பெற்று எழுந்ததால், ராவணனின் மகன் இந்திரஜித்தின் வாழ்க்கையை, அற்ப ஆயுளிலேயே முடித்துக் கணக்கைத் தீர்த்ததாம். Mandi being on the lagna gave Indrajit, a short span of life!
ஸ்ரீசனீஸ்வரரைப்போல் சர்வ வல்லமை பெற்றவர்தான் மாந்தி. சனிக்கு நிகரானவர் எனலாம். அதனால் ஜாதகத்தில் மாந்தியின் பலன்களையும் நிர்ணயித்து அறிய வேண்டும். மாந்தி கடிகாரச் சுற்று முறையில் வலம் வரும் கிரகமாகும். மாந்தி ஆவியுலகத் தலைவர் ஆவார். சனீஸ்வரர் ஸ்ரீஐயப்பனுள் இணைந்தவர். மாந்தி ஆஞ்சனேயருள் இணைந்தவர்.
கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்கüல் மாந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஜாதகத்தில் குறிப்பார்கள். மாந்தியினால் விளையும் நன்மை, தீமைகளையும் கூறுவார்கள். குருவாயூர் தேவஸ்தான பஞ்சாங்கத்தில், பாலக்காடு ரேகாம்சத்தைக் கணக்கிட்டு மாந்தியின் உதய நேர விவரங்கள் குறிக்கப்பட்டிருக்கும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மாந்தி என்ற கிரகம் இருப்பதை நன்கு அறிந்திருந்தா லும், பெரும்பாலும் அது பஞ்சாங்கங்கüல் குறிப்பிடப்படுவதில்லை. மிக அபூர்வமாக ஒரு சில ஜோதிடர்களே மாந்தியை ஜாதக ராசிக்கட்டத்தில் குறிக்கின்றனர். மேலும் ஜாதகத்தில் மாந்தி குறிக்கப்பட்டிருந்தாலும், மாந்தியைக் கண்டும் காணாததுபோல் இருந்து விடுகின்றனர்.
ஜாதக ராசிக்கட்டத்தில் மாந்தியைக் குறிக்காவிட்டால் மாந்தி என்ற கிரகம் இல்லையென்று ஆகிவிடாது. ஜாதக ராசிக்கட்டங்களான பன்னிரண்டு வீடுகüல் ஏதாவது ஒன்றில் நிச்சயம் மாந்தி இருப்பார். மாந்தி அமர்ந்த இல்லத்திற்கேற்ப- மாந்தி சேர்க்கை பெற்ற கிரகத்திற்கேற்ப அதன் பலன்கள் நமக்கு நிச்சயம் நடைபெறும்.
மகரம், கும்பம் ஆகிய ராசிகளை ஆட்சி வீடாகப் பெற்ற ஸ்ரீசனீஸ்வரரிடமிருந்து கும்ப ராசியை ஆட்சி வீடாகப் பெற்றவர்தான் மாந்தி. இவருக்கு உச்ச வீடு, நீச வீடு இல்லை. மாந்தி தான் அமர்ந்திருக்கும் இடத்தி-ருந்து 2, 7, 12 ஆகிய இல்லங்களைப் பார்ப்பார் என நூல்கüல் கூறப்பட்டுள்ளது.
சனீஸ்வரர் கெடுப்பது உண்டென்றாலும், குதூகலமான சந்தோஷத்தையும் நன்மை களையும், செல்வம், செல்வாக்கு, ராஜயோகம் போன்றவற்றையும் வாரிவழங்கி, ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை வானளாவ உயர்த்திப் புகழ் பெற வைப்பார். இதனால்தான் "மந்தன் செய்வதைப்போல் மகேஸ்வரன்கூட செய்ய மாட்டார்' எனச் சொல்வார்கள். ஸ்ரீசனீஸ்வர ரைப்போல் மைந்தன் மாந்திக்கும் மேலே சொல்லப்பட்ட பலன்கள் யாவும் பொருந்தும்.
ஜாதகத்தில் மாந்தியின் அமைப்பில் பூர்வீக சாபம், அதிர்ஷ்டம், குடும்பம், தொழில், மனைவி, எதிர்பாராத நன்மை, திடீரென ஏற்படும் விபத்துகள், மரண அபாயம், அவமானம், புதையல், துர்ஆவிகüனால் துன்பம் போன்றவற்றை அறியலாம்.
பொதுவாக மாந்தி இருக்கும் கிரகத்தின் பலன் எட்டாம் வீட்டோன் பலன்போல் அசுபப் பலனாக அமையும். மாந்தி ஜாதகத்தில் எந்த பாவத்தில்- எந்த காரகர்களுடன் இருந்தாலும், சேர்ந்தாலும், பார்த்தாலும் அந்த காரகத்துவப்படி தீய பலனாகும். மாந்தியைப் பொறுத்தவரை ஜாதகத்தில் ஓரிரு இடங் களைத் தவிர, தான் இருக்கும் இடங்கüல் தீய பலன்களையே அüப்பார். பொதுவாக மாந்தி எந்த கிரகத்துடனும் சேராமல் இருப்பது சிறந்த பலனாகும்.
ஜாதகத்தில் மாந்தியின் பலன்கள்
ஜாதகத்தில் மாந்தி நின்ற ராசிநாதன் கேந்திரம், திரிகோணம் ஆகியவற்றில் அமையப் பெற்றால், ஜாதகர் பெரும் செல்வத்திற்கு அதிபதி யாகவும்; செல்வம், செல்வாக்கு, பூமி, மனை, வாகனம் உள்üட்ட எல்லா ஐஸ்வர்யங் களுடனும் வாழ்வார். லக்னத்திற்கு 11-ல் மாந்தி நின்றாலும் ராஜயோகம்.
லக்னத்திற்கு 6, 8, 12-ல் சந்திரன் அமர்ந்து ஆவியுலகத் தலைவன் மாந்தி சேர்க்கை பெற்றால், ஜாதகர் துர்ஆவிகüனால் பீடிக்கப்பட்டு மரண வேதனை அடைவார். ஸ்ரீஆஞ்சனேயரை வழிபட்டால் துர்ஆவிகள் விலகும். மாந்தியினால் ஏற்பட்ட தோஷம் விலகும்.
மாந்திக்கு 7-ல் புதன் அமர்ந்து சுபர்களால் பார்க்கப்பட்டால், ஜாதகர் தந்தை செய்த தொழில் மூலம் நிரம்ப வருமானம் பெற்று எல்லா ஐஸ்வர்யங்களுட னும் வாழ்வார்.
ஆண் ஜாதகருக்கு, மாந்திக்கு 3-ல் சனி அமர்ந்தால், ஜாதகரின் சகோதரர் தீய பழக்கங்கள் மிகுந்தவராவார். குலப்பெருமை கெடும். அரச தண்டனைக்கு உள்ளாவார்.
பெண் ஜாதகத்தில், மாந்திக்கு 3-ல் சனி அமர்ந்து ஜென்ம நட்சத்திரம் ரோகிணி என்றால், ஜாதகிக்கு இல்லற வாழ்க்கையில் சிறிதும் நிம்மதியிராது. வாழ்க்கையில் பெரும் பகுதி போராட்டமாக இருக்கும். பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் துரதிர்ஷ்டமா கும். தோஷம் மிகுதி.
மாந்திக்கு 5-ல் ராகு அல்லது சனி இருந்தால், ஜாதகர் ஆண்மையில்லாதவரா வார். பெண் ஜாதகம் என்றால் பிரசவத்தில் துன்பம் ஏற்படும். பெண் ஜாதகத்தில் செவ்வாய், சூரியனோடு மாந்தி சேர்க்கை பெற்றால் நெறியற்ற வாழ்க்கை வாழ்வாள்.
லக்னத்திற்கு 5, 9-ஆம் இடங்கள் கன்னி, மிதுனம், மகரம், கும்பம் போன்ற ராசிகüல் ஒன்றாக அமைந்து, சனி- மாந்தி சேர்க்கையோ, பார்வையோ 5, 9-ஆம் இடங்களுக்கு ஏற்பட்டால் ஜாதகி மலடியாவாள்.
லக்னத்திற்கு 3-ல் சனி உச்சம் பெற்று மாந்தியின் சேர்க்கை பெற்று சுக்கிரன் பார்த்தால், ஜாதகர் பெண் பித்தனாவான். பெண் நோயால் அவதியுறுவான்.
லக்னத்திற்கு 4-ல் கேதுவும் மாந்தியும் சேர்க்கை பெற்றால் மிகுந்த துரதிர்ஷ்ட மாகும். வாழ்க்கையில் எல்லா விஷயங்கü லும் அதிருப்தி காணப்படும். ஒரு இடத்திலும் நிலையாக வாழ முடியாது. நாடோடி போல் வாழ்க்கை அமையும். தாய்க்கும் தோஷமாகும்.
பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு 4-ல் மாந்தி நின்றால் புத்திரதோஷம் மிகுதி. கணவன் நோயாü ஆவான். 4-ல் உள்ள மாந்தியுடன் சனி சேர்க்கை பெற்றாலோ பார்த்தாலோ ஜாதகி மிகுந்த துரதிர்ஷ்டசா-. லக்னத்திற்கு 2, 8-ல் சர்ப்ப கிரகங்கள் அமையப் பெற்று மாந்தி சேர்க்கை பெற்றால், நாக தோஷத்தால் மாங்கல்ய தோஷமாகும்.
ஆண், பெண் ஜாதகங்கüல் லக்னத்திற்கு 2, 5, 8, 11 போன்ற இடங்கüல் மாந்தி இருப்பின், ஜாதகர் இந்தப் பிறவியில் செய்யும் கர்மப்பலனை அடுத்த பிறவியில் அனுபவிக்க நேரிடும்.
லக்னத்திற்கு 1, 4, 7, 10 போன்ற இடங்கüல் மாந்தி இருப்பின், ஜாதகர் இந்தப் பிறவியில் தமக்குத் தெரிந்தே சந்தர்ப்ப சூழ்நிலையால் பல தவறுகள்- குற்றங்களைப் புரிய உள்ளார் என்பதை அறிவிப்பதாகும். அதேசமயம் ஜாதகர் செய்யக்கூடிய தவறுகள்- குற்றங்களுக்கேற்ப சரியான தண்டனைகளை உடனுக்குடன் அனுபவிக்க நேரிடும்.
குளிகை அற்புதப் பலன்கள்
மாந்திக்கு குளிகன் என்ற சிறப்பு பெயர் உண்டு. பொதுவாக குளிகன் காலம் நல்ல காலம்- சுபகாலம் என நூல்கüல் கூறப்பட்டுள்ளது. சனியின் மைந்தனாகிய மாந்தி ஒவ்வொரு நாüலும் தான் ஆட்சி செய்யும் குளிகன் காலத்தில் செய்யப்படும் சுபகாரியங்களை- மகிழ்ச்சிக்குரிய காரியங்களை மேன்மேலும் பன்மடங்கு அபிவிருத்தி செய்து நம்மை மகிழச் செய்வார்.
குளிகன் காலத்தில் பூமி, மனை, வாகனம் வாங்கலாம். ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம்; அணிந்து மகிழலாம். புதுவீட்டிற்குக் குடிபோகலாம். கல்வி பயிலலாம். பயிர் அறுவடை செய்யலாம். மனைவியுடன் உறவு கொள்ளலாம். வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கலாம். பாங்கில் புதிய கணக்கு துவங்கி சேமிக்கலாம். வெகுமதி கொடுக்கலாம். பதவியேற்கலாம். பொதுவாக நமக்கு முன்னேற்றம் தரும் மகிழ்ச்சிக்குரிய சுபகாரியங்கள் அனைத்தையும் குளிகன் காலத்தில் செய்தால் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும்.
அதேபோல் நமக்குத் துன்பம் தரக்கூடியக் காரியங்களை குளிகன் காலத்தில் செய்தால் அவை பன்மடங்கு அபிவிருத்தியாகி துன்பங்கள் எல்லையில்லாமல் காணப்படும்.
பொதுவாக ஒரு மனிதர் இறந்துவிட்டால் பிரேதத்தை மயானத்திற்கு எடுத்துச் செல்ல குளிகன் க்காலம் தவிர்த்துதான் எடுத்துச் செல்வார்கள் என்பது அனைவரும் அறிந்ததேண்டியம் அவசியம் நமக்கு உள்ளது
சரி மாணவர்களே இனி பன்னிரண்டு பாவத்திலும் மாந்தி நின்ற பலன்களை தெரிந்துகொள்ளுங்கள்
1ல் மாந்தி இருந்தால்: ஜாதகன் பந்தா’ பேர்வழி. மற்றவர்களை மதிக்கும் குணம் இருக்காது. சிலர் கொடூர சிந்தனை உடையவர்கள். எரிச்சலைத்தரக்கூடியவர்கள். நன்றாகச் சாப்பிடக் கூடியவர்கள். முரட்டுக் குணமுடையவர்களாக இருப்பார்கள்
2ல் மாந்தி இருந்தால்: ஜாதகன் விதண்டாவாதம் செய்யக்கூடியவன். சிலர், வாயைத் திறந்தால், சண்டையில் போய் முடியும். ஜாதகங்களில் வேறு நல்ல அமைப்பு இல்லையென்றால் ஜாதகன் வறுமையில் வாட நேரிடும். சொத்துக்கள் இருக்காது. இருந்தாலும் அவன் கண்ணேதிரேயே கரைந்துவிடும். சிலர் தங்களுடைய வாக்கைக் காப்பாற்றமாட்டார்கள். இந்த அமைப்புள்ள சிலருக்குச் செல்வம் (wealth)என்பது அகராதியில் (Dictionary)மட்டும்தான்.
3ல் மாந்தி இருந்தால்: ஜாதகன் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவன். முன் கோபக்காரன். யாருடனும் இசைந்து போகாதவன் (unsocial). பிறரைக் கவர வேண்டும் என்பதற்காக அசட்டையான வேலைகளைச் செய்யக்கூடியவன். உடன்பிறப்புக்கள் இருக்காது. இருந்தாலும் அவர்களுடன் அவனுக்கு நல்ல உறவு இருக்காது. சிலர் உள்ளூர் நாட்டாமையாக இருப்பார்கள். சிலர் அரசாளுபவர்களின் தொடர்புடனும், மதிப்பைப் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.
4ல் மாந்தி இருந்தால்: ஒரே வரியில் சொன்னால் - துரதிர்ஷ்டவசமானவன் மற்றும் ஏழ்மையான நிலையில் வாழக்கூடியவன் (unfortunate and poor)
5ல் மாந்தி இருந்தால்: நிலையில்லாதவன். அதாவது நிலையான மனப்பான்மை இல்லாதவன். அடிக்கடி மனதை மாற்றிக்கொள்ளக்கூடியவன். இன்று ஒன்றை வேண்டும் என்பான். நாளையே அதை வேண்டாம் என்பான். சிக்கலான மனநிலை உடையவன். அவனை நம்பி ஒன்றும் செய்ய முடியாது. செல்வம், புகழ் எல்லாம் ஒரு நாள் தொலைந்து போகும். நாத்திக எண்ணம் உடையவன். இறையுணர்வு இருக்காது. சிலர் பெண்ணின்மேல் அதிக ஆசை உடையவர்களாக இருப்பார்கள். பெண்களிடம் அடிமைப்பட்டுக் கிடப்பார்கள்.
++++++6ல் மாந்தி இருந்தால்: துணிச்சலானவன். உங்கள் மொழியில் சொன்னால் தெனாவெட்டான ஆசாமி. அவனுடைய எதிரிகள் அவனைக் கண்டால் அலறி ஓடுவார்கள் (terror to his foes). மந்திர தந்திரங்களில் ஈடுபாடு உடையவன். சிலர் சமூகத்தில் புகழ் பெற்று விளங்குவார்கள். எந்தப் பெண்ணுமே அவனை விரும்புவாள். அவனிடம் ஈடுபாடுகொள்வாள் (loved by women)
7ல் மாந்தி இருந்தால்: வாய்ச்சண்டை போடக்கூடியவன். வீண் விவாதங்கள் செய்பவன். நமக்கு எதற்கு வீண் வம்பு என்று ஒதுங்காதவன். தவறான நியதிகள், தவறான நியாயங்களை உடையவன். உங்கள் மொழியில் சொன்னால் தனக்கென்று சில சட்டங்களை வைத்திருப்பவன். நன்றி, விசுவாசம் இல்லாதவன். சிலர் பெண்களின் கால்களில் விழுந்து கிடக்க நேரிடும். அவர்களின் தயவிலேயே வாழ்க்கையை ஓட்ட நேரிடும்!
8ல் மாந்தி இருந்தால்: கண்பார்வைக் குறைபாடுகளை உடையவன். சிலருக்கு வயதான காலத்தில் கண் பார்வைக் கோளாறுகள் ஏற்படும். எவ்வளவு சாப்பிட்டாலும், பசித்துக் கொண்டே இருக்கும் உடல் அமைப்பைக் கொண்டவன். துக்கமும், துயரமும் அவ்வப்போது தோன்றி வாட்டி எடுக்கும். கல் மனதுக்காரன். ஜாதகனிடம் நல்ல பண்புகள் இருக்காது.
9ல் மாந்தி இருந்தால்: தன்னுடைய குழந்தைகளால் மகிழ்ச்சியை இழக்க நேரிடும். குழந்தைகள் அவனை ‘அம்போ’ அல்லது ’சிவ சம்போ’ என்று கடாசிவிட்டுப் போய் விடுவார்கள். தனிமையில் கிடந்து அல்லாட வேண்டியதிருக்கும். (deserted by children). மறைமுகமாக தீய செயல்களைச் செய்யக்கூடியவர்கள். வாழ்க்கை, பிரச்சினைகளும், கவலைகளும் நிறைந்ததாக இருக்கும்.
10ல் மாந்தி இருந்தால்: ஜாதகன் பலவிதமான கண்ணோட்டங்களை உடையவன். விசித்திரமானவன். சிலருக்கு இறை நம்பிக்கை இருக்கும். வெளிப்படுத்த மாட்டார்கள். சிலருக்கு இறை நம்பிக்கை இருக்காது. சிலர் கஞ்சனாக இருப்பார்கள். வீட்டில் விளையும் மாம்பழத்தை அவனும் சாப்பிடமாட்டான். மற்றவர்களையும் சாப்பிட விடமாட்டான். எல்லாவற்றையும் விற்றுக் காசாக்கிக் கணக்கில் போட்டு வைப்பான். சிலர் எல்லாவற்றையும் தனியாக அனுபவிக்கும் மனப்பான்மை உடையவர்களாக இருப்பார்கள். மொத்தத்தில் மனைவி, மக்கள் என்று சுகமாக இருப்பார்கள்
11ல் மாந்தி இருந்தால்: ஜாதகன் அரசனைப் போல வாழ்வான். நிறையப் பெண்களின் சகவாசம் கிடைக்கும். அவர்களுடன் கூடி மகிழ்வான். சொத்து, சுகம், அதிகாரம், மகிழ்ச்சிஎன்று எதற்கும் குறை இருக்காது . உறவினர்களால் விரும்பப்படுவான். நாட்டமையாக இருப்பான். தலைமைப் பதவிகள் தேடிவரும். அரசு அங்கீகாரங்கள் தேடி வரும்.
12ல் மாந்தி இருந்தால்: ஏழ்மை நிலையில் வாட நேரிடும். பண விரையம் தொடர்ந்து இருக்கும். கட்டுப்படுத்த முடியாத செலவுகளும் தொடர்ந்து வந்து படுத்தி எடுக்கும். சிலர் பாவச் செயலில் ஈடுபடுவார்கள். துரதிர்ஷ்டமானவர்கள். கீழ்த்தரமான பெண்களுடைய சிநேகிதம் கிடைக்கும். அதில் மூழ்கிவிடுவார்கள். சிலருக்கு மூட்டு வலி, மூட்டுக் குறைபாடுகள் உண்டாகும். மொத்தத்தில் இந்த அமைப்பு ஜாதகத்தில் ஒரு மோசமான அமைப்பு.
அன்பு மாணவர்களே குளிகன் என்ற மாந்தியை பற்றி உங்களுக்கு விரிவாக தெரிந்து இருக்கும் என்று நான் நம்புகிறேன்
இதை பற்றிய சந்தேகம் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னிடம் நீங்கள் கேட்கலாம்
இன்னும் சில நாட்களே நமக்கு உள்ளது ,எனெவே முடிந்த வரை விரைவாக கற்று கொள்ள வேண்டியது நமது கடமை
இன்று எனக்கு அவசரமான வேலை இருப்பதால் இத்துடன் எனது ஜோதிட பாடத்தை முடித்து கொள்கிறேன்
மீண்டும் அடுத்த வாரம் சநதிப்போம்
நன்றி ,
வணக்கம் ,
என்றும் ஜோதிட ஆசிரிய பணியில்
நாமக்கல் சிவக்குமார் .
சனி, 21 ஏப்ரல், 2012
இன்றைய ஜோதிடம்
ஜோதிவியல் தோற்றம்
சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு
இயற்க்கை சீற்றம்- -பஞ்சபூதங்கள்---ஈரல் ஜோதிடம்
ஜோதிடம் தோன்றிய இடங்கள்
ஈராக் --வால்கா நதி, நைல்நதி, யூப்ரடிஸ் நதி, டைகிரிஸ் , சிந்து, கங்கை நதி,
ஈராக் -யூப்ரடிஸ் நதி, டைகிரிஸ் நதி ஓடுகின்றன
இரு நதிகளுக்கிடையே சுமேரியர்கள், மேசைப தொமியர்கள், பாபிலோனியர்கள் வாழ்ந்துவந்தனர்.
இதை தவிர அக்கேடியங்கள், அசிரியர்கள், சால்தியர்கள் வாழ்ந்தனர்.
அச்சத்தின் காரணமாக தெய்வ வழிபாடு செய்து வந்தனர், சூரியனை சந்திரனை வணங்கிவந்தனர் ,
மெசபதொமியர்கள்
மெசபதோமியா என்றால் மெட்டு நிலபகுதியாகும்.
இரண்டு நதிகளுஉகிடையே உள்ள பகுதியாகும், சுமார்
4000 ஆண்டுகளுக்கு முன்னரே வாழ்ந்து வந்தனர் .
பாபிலோனியர்கள்
மேசபதொமியாவின் கீழ்புறம் உள்ள தற்கு பகுதி--பாபிலோன் தொங்குதொட்டம்--கடவுளின் நுழைவாயில்
இவர்கள் காலத்தில் எனுமா அணு என்லில் என்ற புத்தகம் உருவான
சால்தியர்கள் ஜோதிடத்தில் அறிவானவர்கள் இவர்கள் கிரகங்களை கண்டுகொண்டு கிரகங்களுக்கு கடவுளின் பெயர்களை உருவாக்கினர்.
சூரியன் -சாமாஸ், சந்திரன்--சின், செவ்வாய்--நெற்கள், புதன்--நாபி, குரு--மார்த்துக், சுக்கிரன் -இஸ்தான்
சனி--நினிப்
சால்தியர்கள் ஒரையை கண்டுபிடித்தனர்.
முதலாம் நூற்றாண்டில் வருகிறார் கிலாடியச்தாலாமி -எகிப்து.-நூலகர்--
48 நட்சித்திர கூட்டங்களை -வரைபடம்---அல்மாஜெஸ்ட் நூல் ---
கிரேக்கம்--இவர்கள் ராசிமண்டலம்--நவகிரகம் கண்டுபிடித்தார்,---இவர்கள் காலத்தில் பித்தகூரர் என்ற அறினர் ஜோதிடத்தில் சிறப்பானவர்கள்
வேதகால ஜோதிடம்
இந்து சமய வேதம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது
ஆரியர்கள் வேதத்தை ஏற்படுத்துகின்றனர், காலம் தெரியவில்லை
நான்கு வேதங்கள் -ரிக் ,யாசிர், சாம , அதர்வண
ஆறு அங்கங்கள் --
சிட்சை -எழுத்திலக்கணம் ,மந்திரம் உச்சரிக்கும் முறை
வியாகரணம்- இலக்கணம் ,மந்திர சொல்
சந்தஸ்-- செய்யுள்
நிறுத்தம் -மந்திரங்களின் வேர் சொல்கள்
ஜியோதிசம்--வானசாஸ்திரம், மந்திரங்கள் உச்சரிக்கும் காலம் .
கல்ப்பம்---சமய சடங்குகள், செய்யம் வழிமுறைகள்
வேதத்தில் மனிதர்கள் கடைபிடஈக்கவேண்டிய சமயசடன்குகள் காலங்கள் மட்டும் கூறப்பட்டன ,தனி மனித வாழ்வில் ஏற்படும் பலன்கள் கூறப்படவில்லை .
ஜோதிட நூல் ஆசிரியர்கள்
வராகிமிகரர்--பிருகத் சம்கித கி.பி 587
முதல் பகுதி 57 இயல்கள் இரண்டாம் பகுதி 50 இயல்கள்
இயற்றி உள்ளார்
இவர் எழுதிய நூல்கள்- லகுஜாதகம், விவாக படலம், பிரசன்னா சந்திரிகா, தைவக்ன வல்லபம் பஞ்சசித்தாந்திகா
இவருக்குபின்னர் --பராசரர்-பராசர ஓரா , கல்யானவர்மர்--சாராவளி, மந்தறேஸ்வரர்பலதீபிகை --துண்டிராஜ்
தமிழில் நூல்கள்
சாதக சிந்தாமணி- சரசோதிமாலை--ஜாதக சுகர்நாடி---சாதகபாரிசாதகம்--செநேந்திரமாலை --ஜம்புரிசிவாக்கியம்--பலதீபிகை --மங்களேஸ்வரியம் --குமாரசாமியம்--குப்புசாமியம்
முப்பெரும் பிரிவுகள்
கணித கந்த ஸ்கந்தம்---சித்தாந்தம், தந்திரம், கரணம், யுகங்கள், சக ஆண்டுகள் ,மாதங்கள் பற்றி கூறப்பட்டுள்ளன
ஜாதக ஸ்கந்தம்--ஹோரை, ஜாஜிகம் ---ஜாதகன் பிறந்த காலத்தில் கோள்களின் அமைப்பை கூறுவது பலன்களை கூறுவது ஹோரையாகும்
கோட்சார காலத்தில் கோள்களின் நிலையை கொண்டு பலனை கூறுவது ஜாஜிகம் ஆகும்
சம்கிதாஸ் ஸ்கந்தம்---மொஹூர்த்தம் , வாஸ்து, வருசபணி,, ஆருடம்
வேதங்களில் சொல்லப்பட்ட மனிதனின் கடமைகளை கூறுவது மொஹூர்த்தமாகும்
அரண்மனை, வீடுகள், குளங்கள், கிணறுகள் கட்ட நல்லநேரம் சொல்வது வாச்துவாகும்
மாதம் மும்மாரி மலை பெய்யுமா போன்ற வானிலை அறிக்கை சொல்வது வருசபணி சக்கிரமாஹும்
தன்மனதில் சொன்ன காரியம் நிறைவேறுமா என்று கூறுவது ஆருடமாகும்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)