சனி, 30 ஏப்ரல், 2011

கிரக காரகத்துவம்

கிரக காரகத்துவம்
சூரியன்
  1. தன்னம்பிக்கை
  2. நிர்வாகத்திறமை
  3. புகழ்
  4. தாராள குணம்
  5. இறக்கம்
  6. கருணை
  7. பிடிவாதம்
  8. முன்கோபம்
  9. தைரியம்
  10. அஞ்சா நெஞ்சம்
  11. வைராக்கியம்
  12. உடல் உஷ்ணம்
  13. நெருப்பு
  14. கண்கள்
  15. சிவா வழிபாடு
  16. இவரது நிறம் சிவப்பு ஆகும்
  17. இவர் சத்திரிய ஜாதியை சேர்ந்தவர், இவரது கல் மாணிக்கம் ஆகும்
  18. செந்தாமரை ,எருக்கன், காரம், அக்னி, சிவன், தாமிரம் ஆடுதுறை ஒருமாத ம சஞ்சாரம் ,
  19. பிற பெயர்கள் ஆதவன், ரவி, கதிரவன், சுடரோன், திவாகரன், தினகரன் ,தினமணி, பகலோன், வெண்சுடர், வெய்யோன் 
  20. தந்தை, வலதுகண், அரசன், அரசாங்கம், பிரதமர், வீட்டின் வலது jannal
  சந்திரன்

  1. புகழ், கற்பனை, சலனபுத்தி, அமைதி, கொள்கை பிடிப்பு, கலை உணர்வு , சாந்தம், பொறுமை, சகிப்பு தன்மை, சோம்பல். காதல்,
  2. குட்டை, வெண்மை, வைசிய ஜாதி, முத்து, நெல்தானியம் , புஷ்ப மலர், முருங்கை குச்சி, ஈயம், பார்வதி தேவி, இரண்டேகால் நாள்
  3. வேறு பெயர்கள் , அம்புலி, இந்து, கலாநிதி, குழவி,சோம,., மதி, தண்சுடர், திங்கள்,
  4. தாய், மாமியார், மனம், உணவுப்பொருள், இடதுகண், கலை, கற்பனை, உப்பு, சங்கு, குளியல் அரை, இடதுபக்க ஜன்னல், திருட்டு தனம் ,கள்ளத்தனம்,


செவ்வாய்
  1. முன்கோபம், ஆத்திரம், அவசரம், வீரம், கர்வம், ஆணவம், அகம்பாவம், முரட்டுத்தனம், வேகம், சுசுருப்பு, படபடப்பு, வீண்சண்டை, வாக்குவாதம், உணர்ச்சி வயப்படுதல், ஆதிக்க உணர்வு, பூமி காரகன், குருதிகாரகன், அஆதகாரகன், விபதுகாரகன், பூமிகாரகன்,
  2. உடன்பிறப்பு, ஆண்கிரகம், குட்டை, சிவப்பு,சத்ரிய ஜாதி, குருர குணம், பித்தம் ,தெற்குதிசை, பவளம், துவரை தானியம், செந்தாமரை, அன்னபறவை, செம்பு உலோகம், சுப்பிரமணியர், வைதீஸ்வரன் கோவில், ஒருமாதம் சஞ்சாரம்
  3. சகொதிரன், கணவன், காவல் துறை, வெட்டுக்காயம், தழும்பு, படுக்கை அரை, சுரங்கம், துப்பாக்கி, கத்திரி, கோடாலி,

புதன்
  1. பேச்சாற்றல், எழுத்தாற்றல், நகைசுவை, பொறுமை, வசீகர தன்மை, அறிவு, தந்திரம் கலகலப்பு, கோழைத்தனம் ,விதைகள், ஜோதிட தன்மை, சிற்பம், ராஜ தந்திரம் ,வேததம் , மந்திர திறமை,கல்விகாரகன்,
  2. தாய்மாமன், ஜோதிட பாசை, வைசிய ஜாதி, வாதம், பட்சிகள், பச்சைபயிறு, வெண்காந்தள் மலர், நாஉருவி குச்சி, பித்தளை, உவர்ப்பு, பட்சைபட்டு, மதுரை, ஒருமாதம்
  3. அருணன், கணக்கன், சௌமியன், பண்டிதன், மாலவன் புக்கு,
  4. கணக்கன், சட்டம், கழுத்து, தொண்டை,நாக்கு, தோட்டம், செய்திகள், தோள்பட்டை, மாமன் ,வியாபாரம் ,வித்தைகள், கல்வி arivu
குரு
  1. சாந்தம், பொறுமை, தெய்வநம்பிக்கை, மதிப்பு, ஒழுக்கம், கடமை,கண்ணியம் நேர்மை, மனிதநேயம், பக்தி, பண்பாடு, மதகுருமார், ஆசிரியர், ,
  2. தனகாரகன், புத்திரகாரகன், ஆண்கிரகம், நேட்டையானவர், சமிஸ்கிரதம், சாமியார், பிராமண ஜாதி, புஸ்பராகம், கொண்டைகடலை, முல்லைமலர், அரசங்குச்சி, யானை, தங்கம், பிரம்மா, மஞ்சள், ஆலங்குடி, இருவருடம்
  3. வியாழன், அந்தணன், அரசன், ஆசான், சிகண்டி, அரசகுரு, தேவகுரு, பிருகஸ்பதி, மறையோன்,
  4. பக்தி, ஞானம், நீதிபதி, பிராமணன், பூஜை அரை, பசு, அமைச்சர், மூக்கு, நிர்வாகம், காசு புழங்கும் idam
சுக்கிரன்
  1. கலை,ஆடல், பாடல், நடிப்பு, அலங்காரம், ஆடம்பரம், காமகளியாட்டம், கலாரசிகர், மேன்மை, பயந்த சுபாவம், அமைதியான தோற்றம், கவர்சிகரமான பொருள், காதல், இன்பம்,
  2. களத்திரகாரகன், வாகனகாரகன், பென்கிரகம், சம உயரம், தெலுங்கு, வெண்மை, கிழக்கு, வைரம், மொச்சை, வெண்தாமரை, அத்திகுட்சி, கருடன், இனிப்பு, வெள்ளி உலோகம், மகாலட்சுமி, வெண்பட்டு, ஸ்ரீ ரங்கம், சாமியார் ,ஒருமாதம்
  3. வெள்ளி, மால், சுங்கன், அசுர குறு, சல்லியன், மலைகொள்
  4. மாணவி, சகோதிரி, காம,காதல், திருமணம், விந்து, வாசனை திரவியம், வங்கி, நகைத்தொழில், போதை பொருள்;, கேளிக்கை விடுதி, அழகு கவர்ச்சி,
சனி
  1. சோம்பல், பிடிவாதம், மந்தகுணம், நடுநிலமையான பேச்சு, துஷ்ட தனம், கீழ்த்தரமான பேச்சு, விகார கோபம், கல்நெஞ்சம்,
  2. ஜீவனகாரகன், ஆயுள்காரகன், அளிகிரகம், அந்நிய பாசை, கருப்புநிறம், சூத்திர ஜாதி, குருர குணம், மேற்குத்திசை, எல்தானியம், கருங்குவளை மலர், காகம் வாகனம், இரும்பு உலோகம், கருப்பு பட்டு, எமன் தேவதை, திருநள்ளாறு, இரண்டரை ஆண்டு
  3. அந்தகன், கரியவன், காரி, நீலன், மந்தன், முடவன், முதுமகன்,
  4. மூத் சகொதிரன், தாடை, மூட்டு, முழங்கால், சேமிப்பு அரை, கம்பளி ஆடை,
ராகு
  1. சோம்பல், அலட்சியம், வஞ்சகம், சூது, பொய், பெரும் திருட்டு, ஏமாற்றுதல், நடிப்பு, ஆடம்பரம், போதை
  2. தந்தை வலி பாட்டன், ஞானகாரகன், பென்கிரகம், நெட்டை, கருப்பு நிறம், அந்நிய பாசை, சங்கிராம ஜாதி, பித்த நோய், தென்மேற்கு , கொமேகதம், உளுந்து, மந்தாரை புஸ்பம், ஆடு வாகனம், புளிப்பு சுவை, பத்ரகாளி, கருப்பு வஸ்திரம், திருநாகேஸ்வரம், அரக்கர் தலை பாம்பு உடல் கொண்டவர்
  3. கரும்பாம்பு, நஞ்சு, மதிபகை,
  4. வாய் ,உதடு, முஸ்லீம், பாம்பின் வாழ், மோடிவித்தை, ராசாயணம், பிளாஸ்டிக், மலக்குடல், ரப்பர், காபிகொட்டை, லஞ்சம், விபத்து, மரணம், விதவைதனம், கடத்தல், சட்டத்திற்கு புறம்பான தொழில்
கேது
  1. ஞானம், தியானம், தவம், மௌனம், வைராக்கியம், நிதானம், மனவெறுப்பு, விரக்தி, சந்நியாசம், ஆன்மீக உணர்வு, பிடிப்பு இல்லாமை ,வேதாந்தம்,
  2. தைவளிபாட்டன், மோட்சகாரகன், ஆண் அலி, நெட்டை, அன்னியபாசை, சிவப்பு நிறம், சங்கிராம ஜாதி, பித்த்கநோய், வடமேற்கு திசை வைடூரியம் கொள்ளு தானியம் செவ்வரளி, தர்பை, சிங்கம், துருக்கள் , இந்திரன், பலவண்ண நிறம், காளகஸ்தி, பாம்பின் தலை ,அரக்கர் உடல்
  3. செம்பாம்பு, கதிர்பகை, சித்தி, ஞானி
  4. தாய் வலி பாட்டன், நரம்பு, முடி, மர்ம உறுப்பு, மாந்திரீகம், கோயில், மின்கம்பி, தியான அரை, மருத்துவ அரை, மூலிகை, சந்நியாசம், புகை மயக்கம்

சனி, 9 ஏப்ரல், 2011

பஞ்சாங்கம்

மாணவர்களுக்கு வணக்கம்
பழைய புதிய மாணவர்களை அன்போடு வாழ்த்துகிறோம்

நமது நாமக்கல் மையத்தில் படித்த மாணவர்கள் சிறந்த மாணவர்களாக வரவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்

அடிக்கடி எங்களை தொடர்புகொள்ளுங்கள்
உங்கள் ஜோதிட அறிவை விருத்தி செய்துகொள்ளுங்கள்

மிகுந்த சிரமம் எடுத்து கலந்து கொண்டதற்கு மையத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துகொள்கிறோம்

இந்த கரவருடத்தை நாம் மிகுந்த சந்தோசமாக வரவேற்று நல்வழிபடுத்துவோம்

கரவருடம்
கதகலயுகாதிபதி  5112
கதசாளிவாகன 1933 -34
கொல்லம் 1186  -87
பசலி 1420 - 21
ஹிஜ்ஜிரி -1432 -33
விக்கிரமசகாப்தம் 2068 -69
திருவள்ளுவர் 2042 -43
பிரபாவதி 25 வது

நவனாயகர்கள்
ராஜா- சந்திரன்
மந்திரி - குறு
சேனாதிபதி - புதன்
அர்காதிபதி- புதன்
சசியாதிபதி - சனி
ரசாதிபதி- சந்திரன்
தானாதிபதி- சுக்கிரன்
மேகாதிபதி -புதன்
நீரசாதிபதி -சனி



பஞ்சாங்கம்
இந்த சித்திரை மாதத்தில் ராமானுஜர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.








webdunia photo WD



ஆதிசங்கரர் அவதரித்தது பஞ்சமி திதி. ராமானுஜர் அவதரித்தது திருவாதிரை நட்சத்திரத்தில். சில ஆண்டுகளில் இருவரது ஜெயந்தியும் ஒரே நாளில் வருவதும் உண்டு.



சித்திரை வருடப்பிறப்பு கேரள மக்களால் ‘விஷு’ என்றழைக்கப்படுகிறது. விஷுவுக்கு முதல் நாள் ஓலை வேய்ந்த வீடுகளில் பழைய ஓலைகளை நீக்கி புது ஓலை வேய்வார்கள். மற்ற வீடுகளில் வர்ணம் பூசுவர். வீடுகளை பல விதங்களிலும் அலங்கரிப்பார்கள்.



விஷுவுக்கு முதல் நாள் இரவில் ஒரு பெரிய தட்டில் அரிசியை பரப்பி அதில் நவதானியங்கள், பொன் நகைகள், புத்தகங்கள், உடைத்த தேங்காய்கள், கொன்றை மலர், வெள்ளரிக்காய், மாவடுக் கொத்து, தின்பண்டங்கள் ஆகியவற்றை அழகாய் அடுக்கி படுக்கையறையில் வைத்து விடுவர்.

விஷு நாளில் பொழுது விடியும் முன்பாக விழி திறவாமல், முதல் நாள் வைத்த தட்டை கண்டுவிட்டு பிறகு மற்ற பொருட்களை காண்பர். இதனை ‘விஷுக்கனி காணுதல்’ என்பார்கள். மலரும் புத்தாண்டில் விழிகளை திறந்ததும் சுபமான பொருட்களை காண்பதால் நம் ஆக்கபூர்வமான கனவுகள் நனவாகும் என்று நம்புகின்றனர். இவ்விதம் விஷுக்கனி காண்பதை 'மங்களத்திண்ட ப்ரதீஷ' என்றழைக்கின்றனர்.



சித்திரை மாதம் 1-ம் தேதி ஆங்கிலம் 14.04.2011. வியாழ கிழமை கர வருடம் மகம் நட்சத்திரம், மிதுன லக்கினம் சிம்ம இராசியில் பிறக்கிறது. நம் இநதியாவின் புகழ் ஜெகம் எங்கும் பரவ போகிறது. மக நட்சத்திரத்தில் ஆண்டு பிறப்பதால் நம் நாட்டை ஜெகமே அன்னர்ந்து பார்க்க போகிறது. லக்கினத்திற்கு 4-ல் சனி. அதை செவ்வாய்,குரு,புதன் பார்வை செய்வதால் தொழில் துறையில் பெரும் முன்னேற்றம் உண்டு.




ரியல் எஸ்டேட் வியபாரம் கொடி கட்டி பறக்கும். லக்கினத்திற்கு 9-ல் சுக்கிரன் (திரிகோணத்தில்) இருப்பதால் பெண்கள் செல்வாக்கு,கல்வி,உத்தியோகம் பல மடங்கு உயரும்.



லக்கினத்திற்கு 2-க்குடைய சந்திரன் 5-க்குடைய சுக்கிரனால் பார்க்கப்படுவதால் பெண்கள் பெருமை அடையும் வருடம் இது.



கேது லக்கினத்தில் இருப்பதால் தெய்வ பக்தி அதிகரிக்கும். ஆனால் அதை சனி 10-ம் பார்வையாக வக்கிரம் பெற்று பார்ப்பதால் புது புது வியாதிகள் தோன்றும்.



அன்னிய விரோதங்கள் சூழ்ச்சிகள் சனியால் முறியடிக்கப்படும். அன்னியர்கள் இனி அடக்கி வாசிப்பார்கள். பொதுவாக லக்கினத்தில் கேது, 4-ல் சனி, 7-ல் ராகு, 10-ல் செவ்வாய்,புதன் குரு, இப்படி கேந்திரங்களில் எல்லாம் கிரகங்கள் இருந்தால் யோகமான காலகட்டம் இது.



8-க்குடைய சனி 4-ல் வக்கிரம் பெற்றதால் தீராத பிரச்சனைகள் எல்லாம் தீர்வு காணும்.



சுக்கிரனை சந்திரன் பார்வை செய்வதால், போதும் போதும் என்றளவிற்கு மழை கொட்டி தீர்க்கும். வெள்ளபெருக்கு ஏற்பட்டாலும் ஆச்சரியம் இல்லை.



லக்கினத்திற்கு 11-ல் சூரியன். மருத்துவ துறை புதிய சாதனை செய்யும். வாகனங்கள் இயந்திரங்கள் விலை உயரும். கலைத்துறைக்கு பொற்காலம். அழகு சாதனம், துணிமணிகள் ஏற்றுமதி பெருத்த லாபம் தரும்.



குரு சேர்க்கை அல்லது பார்வை கோடி புண்ணியம் என்பார்கள். இயற்கை சீற்றங்கள் அத்தனையும் குருவால் சற்று சாந்தப்படுத்தப்படும்.



பொதுவாக இந்த “கர“ வருடம் நாட்டு மக்களுக்கு பெரும் நன்மையை தன் கருனையால் வாரி வழங்கும்.





கரவருட ராசி பலன்
கர வருடம், 14.4.2011 வியாழக்கிழமை காலை மணி 11.27க்கு சுக்ல பட்சத்தில் ஏகாதசி திதி, மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, மிதுன லக்னத்தில், நவாம்சத்தில் மீன லக்கினம், மிதுன ராசியில், கண்மம் நாமயோகம், பாலவம் நாம கரணம், அமிர்தயோகம் நேத்திரம் நிறைந்த நன்னாளில், பஞ்ச பட்சியில், மூன்றாவது சாமத்தில், ஆந்தை நடை பயிலும் நேரத்தில், கேது தசையில், குரு புக்தி, சூரியன் அந்தரத்தில், சந்திரன் ஓரையில் பிறக்கிறது.




கர வருஷத்திய பலன் வெண்பா:

‘கர வருடமாரிபெய்யுங் காசினியுமுய்யும்

உரமிகுத்து வெள்ளமெங்குமோடும்&நிறைமிகுத்து

நாலுகாற்சீவ னலியுநோயான்மடியும்

பாலும்நெய்யுமே சுருங்கும் பார்.’



வெண்பாவின்படி உலகெங்கும் கனமழை பொழியும். வெள்ளப் பெருக்கால் அழிவுகள் அதிகரிக்கும். ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகள் விசித்திர நோயால் இறக்கும். பால், மோர், தயிர், நெய் உற்பத்தி குறையும். அவற்றின் விலையும் அதிகரிக்கும் என்று இடைக்காடர் சித்தர் பெருமான் சூசகமாகக் கூறியுள்ளார்.





இந்த வருடத்தின் ராஜாவாக சந்திரன் வருவதால், பெண் குழந்தை பிறப்பு அதிகரிக்கும். சுமங்கலிப் பெண்களை விட, விதியால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகழடைவார்கள்.
மக்கள் சுகமாக இருப்பார்கள்
மந்திரியாக குரு வருவதால் அரசியல் சூழ்நிலை பலவித வடிவங்களை எடுக்கும். எதிர் கருத்தும் பலத்து ஒலிக்கும்.
மழை நன்கு வரும், செல்வா விருத்தி உண்டாகும் ,நல்ல ஆட்சி நடக்கும்
அர்க்காதிபதி, மேகாதிபதி மற்றும் சேனாதிபதியாக புதன் வருவதால் கல்வித்துறையில் அதிரடி மாற்றங்கள் உண்டாகும். தனியார் பள்ளிகளுக்கும் அரசுக்குமிடையே நிலவி வரும் பனிப்போர் விலகும்
அதிகமான காற்றும் மழையும் உண்டாகும் ,விலைவாசி குறையும், மழை அதிகமாகும்



மாணவர்களிடையே அறிவியல் சிந்தனை அதிகரிக்கும். ஆனாலும், பாலியல் தடுமாற்றங்களும் பெருகும். சுதேசித் தொழில்கள் மீண்டும் வளரும். என்றாலும் சுய தொழில் தொடங்குவோர் நெருக்கடிக்கு உள்ளாவார்கள். சூறாவளிக் காற்றால் இயல்புக்கு அதிகமாக மழை கொட்டும். வெள்ளச் சேதம் அதிகரிக்கும். கந்தக பூமியும், பாலைவனமும் செழிக்கும்.





சேனாதிபதியாக புதன் வருவதாலும் 20.12.2011 வரை கன்னியில் சனி நீடிப்பதாலும் சீனா, இலங்கை நாடுகள் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும்

இந்தியாவிற்கு சீனாவால் அச்சுறுத்தல் அதிகரிக்கும். நேபாளம், பாகிஸ்தான் மூலமாகவும் தீவிரவாதிகள் நுழைவார்கள். ஸஸ்யாதிபதியாகவும், நீரஸாதிபதியாகவும் சூரியன் வருவதால் வெயிலின் சீற்றம் கடுமையாக இருக்கும்.





அயல்நாட்டில் இருப்பவர்கள் தாய்நாடு திரும்ப வேண்டி வரும். பெட்ரோல், டீசல் விலை உயரும். பிளாட்டினம் மற்றும் கனிம, கரிம வளப்பகுதி கண்டறியப்படும்.

தானியாதிபதியாக சுக்கிரன் வருவதால், மழையால் உணவுப் பொருட்கள் சேதமடையும். தானியக் களஞ்சியங்களில் தீ விபத்து உண்டாகும். அரிசி, சர்க்கரை விலை உயரும். அந்தமான், இந்தோனேஷியா, இந்தியாவில் கடல் சீற்றம் உண்டு. பூமி விலை உயரும். கட்டிடங்கள் விலை சற்றே குறையும். தங்கம் விலை உயரும். ஆடியோ, வீடியோ சாதனங்களின் விலை குறையும்.
நீரச அதிபதியாக சனி வருவதால் இரும்பு பொருள் விலை குறைந்து மக்களுக்கு பலன் ஏற்படும், தொழில் முன்னேற்றம் வந்து விடும்



கர ஆண்டின் மகர சங்கராந்தி தேவதையாக வணஜீ என்ற ராட்சசன், எருமைக்கிடா வாகனம் ஏறிவருவதால் உலகெங்கும் மக்களிடையே மரண பயம் உண்டாகும். சாலை விபத்துகள், விமான விபத்துகள் அதிகரிக்கும். பழிவாங்கும் குணமும், குறுக்கு வழியில் முன்னேறும் போக்கும் அதிகரிக்கும். உள்நாட்டுக் குழப்பம், உள்குத்து வேலைகள் பரவலாகக் காணப்படும். உலகில் புகழ்பெற்ற வியாபார மையங்கள், சுற்றுலா மையங்கள், அரண்

மனைகள், வழிபாட்டு தலங்கள் பாதிக்கும். வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்கள் ஓரளவு செழிப்படைவார்கள்.



இந்த வருடம் முழுக்க சுக்கிரன் வக்கிரமடையாமல் காணப்படுவதால் சினிமா துறை சூடுபிடிக்கும். புதிய படங்கள் அதிகம் வெளியாகும். தொலைக்

காட்சிகள் அமைப்பில் பல முன்னேற்றங்கள் உண்டாகும். அரைகுறையாக நின்று போன படங்களும் வெளியாகும் என்றாலும், 21.11.2011 முதல் சனி பகவான் சுக்கிரனின் வீடான துலாத்தில் அமர்வதால் பெண் கலைஞர்களுக்கு சவாலான காலகட்டமாகும். விவாகரத்து சம்பவங்கள் அதிகரிக்கும். முன்னணி நடிகர்கள், போட்டி காரணமாக பின்னுக்குத் தள்ளப்படுவார்கள். புதுமுகங்கள் பிரபலமடைவார்கள். வியாபாரிகளையும், விலைவாசி உயர்வையும் கட்டுப்

படுத்த கடுமையான சட்டம் வரும்.



18.4.2011 முதல் 16.7.2011 வரை மற்றும் 23.7.2011 முதல் 17.10.2011 வரையிலான காலகட்டங்களில் அரசியல் குழப்பங்கள், என்கவுன்ட்டர், இயற்கை சீற்றங்கள் அதிகரிக்கும். 15.6.2011 அன்று கேட்டை நட்சத்திரம் விருச்சிக ராசியில் சந்திர கிரகணம் நிகழ்வதால் மேஷம், விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஆரோக்கிய குறைவும், பண இழப்பும் ஏற்படும். 10.12.2011 அன்று ரோகிணி நட்சத்திரம் ரிஷப ராசியில் சந்திர கிரகணம் நிகழ்வதால் தமிழறிஞர்கள், மூத்த பேராசிரியர்கள், கலைத்துறையினர் பாதிக்கப்படுவார்கள்.





ரிஷப ராசிக்காரர்களுக்கு ரத்தம், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வந்து நீங்கும்.

சிம்ம ராசியிலேயே செவ்வாய் 4.11.2011 முதல் 14.8.2012 முடிய நீடிப்பதால் ரியல் எஸ்டேட் அதிபர்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள். வெள்ளப் பெருக்கால் பூமி சுருங்கும். காவல் துறையில் களை எடுப்பு அதிகரிக்கும். 7.2.2012 முதல் 10.4.2012 வரை செவ்வாய் வக்ரமாவதால் நிலநடுக்கம் உண்டாகும்.





மின்வெட்டை சரி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மின்சார கட்டணம் உயரும். காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தி அதிகரிக்கும். அண்டை மாநிலங்களுடன் நதிநீர் பிரச்னை வெடிக்கும். மீனவர்கள் பாதிப்படைவர்.





7.9.2011 முதல் 15.12.2011 வரை குரு வக்ரமாவதால் வங்கிகள் தடுமாறும். வங்கிக் கடன் வட்டி அதிகரிக்கும். கர ஆண்டு தொடக்கம் முதல் 10.6.2011 வரை மற்றும் 5.2.2012 முதல் கர வருடம் முடியும் வரை சனி வக்ரமாவதால் அரசியலில் குழப்பங்களும், சுரங்க விபத்துகளும் அதிகரிக்கும்.



பரிகாரம்: இந்த கர வருடத்தில் மனோகாரனாகிய சந்திரனை இரண்டு கிரகணங்கள் தாக்குவதாலும், ஆத்மகாரனாகிய சூரியனின் வீட்டில் செவ்வாய் 4.11.11 முதல் ஏறக்குறைய முக்கால் வருடம் சிம்மத்திலேயே நீடிப்பதாலும் மக்களிடையே மனோபீதியும், எதிர்மறை சிந்தனையும் நிலவும்.





இதிலிருந்து விடுபட, விக்னங்களை விரட்டும் விநாயகரை, வெற்றிலை மீது மஞ்சளால் பிடித்து வைத்து அறுகம்புல் சாற்றி வணங்குங்கள். பிரிந்துபோன சொந்தங்களிடம் மனம்விட்டுப் பேசி உறவை புதுப்பித்துக் கொள்ளுங்கள். விரோதப் போக்கு விலகும்.