செவ்வாய், 21 ஜூன், 2011

சதுரகிரி பயணம்

சதுரகிரி பயணம்

சென்ற 14 -6 -2011  அன்று நாங்கள் புறப்பட்ட சதுரகிரி பயணம் மறக்க முடியாத பயணமாகும்.
என் வாழ்வில் இந்த பயணம் ஓர் அற்புதம்தான் ,
சதுரகிரி பயணம் என்பது என் வாழ்வின் கனவாகவே இருந்தது
ஏன் என்றால் அது பெரியமலை பலகிலோ மீட்டர் கரடு முரடான பாதையில் நடந்தே செல்லவேண்டும் என்று கூறி என்னை பயபடுத்தி வந்தனர் .
அதனால் நான் பயந்து இந்த பயணத்தை ஒத்திவைதுவிட்டேன் ,கிட்டத்தட்ட ஐந்து முறை தள்ளிவிட்டேன் .
எப்படியாவது நீங்கள் பயணம் செய்யவேண்டும் என்று என்னை தன்னபிக்கை ஊட்டியவர்கள் நாமக்கல் திருச்சி ரோடில் டிரங்கு பெட்டி செய்வும் ஓனர்  திரு வெங்கடாசலம் மற்றும் நாமக்கல் கடைவீதியில் உள்ள பைனான்சியர்  திரு ராமசாமிக்கும் தான் என் நன்றி கடனே .
நான் மற்றும் என்னிடம் பயிலும் மாணவர்களும் துணியுடன் கிளம்பிவிட்டோம்

சதுரகிரி மலை அடிவாரமான தானிபாரை சென்று குளித்து காலை ஆறு மணிக்கு கிளம்பி சென்றோம்.
சிறு குழந்தை முதல் என்பது வயது பெரியவர்கள் வரை ஏறி கொண்டே இருந்தனர் , அதை பார்க்கும் பொது எனக்கு உற்சாகம் வந்துவிட்டது . சிவனை வேண்டி துணிவுடன் நடந்தேன், எனக்கும் முன்னும் ,பின்னும் மாணவர்கள் நடந்து என்னை உற்சாகம் ஊட்டினர். அழகான மலை, அருமையான மூலிகை காற்று , பயமூட்டும் பாதை ,அப்பப்பா எனக்கு ரொம்ப சிலிர்ப்பாக ஆகிவிட்டது .
இடையில் கோரக்கர் குகையை அடைந்து , நாங்கள் கொண்டு சென்ற புளிசாதம், தயிர்சாதம் நன்கு சாபிட்டோம் ,
அங்கு கோரக்கர் குகையில் உள்ள எழுபது வயது பாட்டி சித்தரிடம் ஆசிர்வாதம் வாங்கினோம் ,
நாமக்கல் முனிசிபாலிட்டி யில் வேலை செய்யும் கண்ணன் பலவிசயங்களுக்கு வழிகாட்டினார் .
இடையில் நாவல் ஊற்றில் தன்னிற் பருகினோம் ,ஆகா என்ன ருசி நம்ம ஊர் மினரல் வாட்டர் தோற்றுபோய்விட்டது .அதை சாபிட்டால் சக்கரை நோய் குணமாகி விடும் என்றும் கூறினார்


ஒருவழியாக பன்னிரண்டு மணி அளவில் மேலே உச்சபகுதிக்கு சென்று குளித்துவிட்டு சுந்திர மாகலிங்க ஈஸ்வரனை தரிசித்தபிரகுதான் எண்கள் மனம் மகிழ்ச்சி அடைந்ததது ,எண்கள் கால்வலி போய்விட்டது ,அதன் பின் ஒரு பர்லாங் தூரம் உள்ள சந்தன  மகாலிங்க  ஈஸ்வரனை  தரிசித்தோம் .இன்னும் என் மனம் அமைதியாகிவிட்டது ,சித்தர்களே வாழும் பகுதிக்கு வந்து சிவனை வணங்கியது எங்கள் வாழ்வில்  பெரிய புண்ணியம் செய்து பெருமை கொண்டோம் .
பிறகு அடுத்த பயனதிர்ற்கு சாப்பிட்டு தயாராகிவிட்டோம்
ஆம் இன்னும் உயரமான தவசிபாரைக்கு சுமார் இரண்டு கிலோமீட்டர் உயரம்  உள்ள இந்த மலைக்கு கடுமையான வழிகளில் பயணம் செய்து தவசி பாறை அடைந்தோம்  ,இந்த பாறை அடியில் ஒரு சிவலிங்கம் உள்ளது ,அந்த லிங்கத்தை காணவேண்டுமானால் பாறை அடியில் பாம்பு போல ஊர்ந்துதான் செல்லவேண்டும் ,மனதிடம் உள்ளவர்கள் மட்டுமே செல்லமுடியும் நான், கோபி, சிவராஜ், ராமசாமி அவர்கள், கண்ணன் ,சீரங்கன் நாங்கள் அனைவரும் மனதிடம் கொண்டு உள்ளே ஊர்ந்து சிவனை பார்த்துடன் அழுகையே வந்துவிட்டது ,நம் மாணவர் சீரங்கன் வாய் விட்டு அழுதே  விட்டார்

இந்த நிலையை அனுபவித்தால் மட்டுமே உணரமுடியும் , அந்த குகையில் டார்ச் லைட் இல்லாமல் போகமுடியாது ,அப்படி ஒரு இருட்டு ,உள்ளே சின்ன சிவலிங்கம் உள்ளது ,அங்கே என்னை விளக்கு எரிந்துகொண்டே உள்ளது , அந்த சிவனை பார்த்தால் அப்படியே பரவசம் ஆகிவிடும் ,ஏன் தெர்யுமா இந்த தவசி பாறை ஏற மிகுந்த கஷ்டபட்ட அத்தனை வலிகளும் மறந்துவிடும் .

அடுத்த தவசிபாரை அருகில் உள்ள ஏசி பாறைக்கு சென்று உள்ளே அமர்ந்தோம் , அப்படியே உள்ளே ஜில் என்ற காற்று ஏசி காற்றுபோல அதைவிட அதிகமாக இருந்தது ,அதை நன்கு அனுபவித்தோம் ,
ஏசி பாறை உள்ளே எடுத்த படங்கள்

அதன் பின்பு கீழே இறங்க தயாரானோம் (அடிவாரம் அல்ல )வழியில் பெரிய மகாலிங்கம் ஈஸ்வரனை தரிசனம் செய்தோம் ,
பின்பு பாதை மாறி சென்று விட்டோம் நல்ல வேலையாக வழிகண்டுபிடித்துவிட்டோம் , வரும் வலி மிகுந்த அடர்ந்த கானகம் போல இருந்தன ,யானை ,கரடிகள் , சிறுத்தைகள் அடிக்கடி வந்து போகும் இடமாம் , நாங்கள் தண்ணீர் கொண்டுபோக  மறந்துவிட்டோம், நாவு தாகத்தால் அனைவருக்கும் தவித்துவிட்டது ,அப்போதுதான் திரு ராமசாமி அழகிய மூன்று மாமரம் சூழ்ந்த இடத்தில் ஒரு தண்ணீர் சுனையகண்டுவிட்டார் , அவ்வளது தான் மாணவர்களுக்கு குசி வந்துவிட்டது ஒரு பாட்டிலில் தண்ணீரை பிடித்து அனைவரும் தாகம் தனித்துகொண்டோம்  ,தண்ணீர் கண்ணாடி போல ,அவ்வளவு சுவையாக இருந்தது, ராமாசாமி தண்ணீரை பார்சல் செய்துவிட்டார்
அந்த சுனை தண்ணீர் இடைத்தை பாருங்கள்

ராமசாமி ஸ்டைலாக




(ராமசாமி தண்ணீர் பிடிக்கும் காட்சி)


பின்பு ஒரு வழியாக கீழே வந்து (அடிவாரம் அல்ல மலை மீதே )
நமது முன்னாள் மாணவரான வனத்துறை கார்டு திரு ஆட்சிமுத்து அவர்கள் அருமையான அவரே தயார் செய்த மூலிகை எண்ணையை அவர்கையாலே காலில் தடவி விட்டார் ,எல்லோர் கால்வலியும் பறந்துவிட்டது, பசிக்கு சுக்கு காபியும் ,காரவடையும் ,இதமாக கிடைத்தன , பின்பு நன்றாக குளித்து (அந்த தண்ணி ஐஸ் மாதிரி இருந்தது )
அன்ன தான மடத்திற்கு வந்து நன்றாக சாப்பிட்டோம் .
எவ்வளு பேர் வந்தாலும் சலிக்காமல்,சங்கடபடாமல், அன்பாய் கவனித்து சாப்பாடு போடுவது ஒரு வகையில் ஆச்சரியமாக உள்ளது,
அன்று பௌர்ணமி , பௌர்ணமி அன்று அங்கு சிவனுக்கு விசேசமாக அபிசேகம் செய்து அலங்காரம் காட்டி ,சங்கு ஊதி  பூஜை செய்வார்கள் , இந்த அற்புதமான பூஜைய கண்டு மெய் சிலிர்துவிட்டோம்.
மணி பத்து ஆகிவிட்டன, கண்கள் சொக்கிகொண்டே வந்தன ,சாப்பிட்ட இடமே தற்போது படுக்கை இடமாக மாறி இருந்தது, நாங்கள் அனைவரும் ஒரே வரிசையில் படுத்துவிட்டோம் , மடத்தை சேர்ந்தவர்கள் பல நூறு பேரை அமைதியாக அடக்கமாக படுக்க வைத்த பாங்கு எங்களை மேலும் அமைதிபடுத்தியது , அப்படியே ஆழ்ந்து தூங்கிவிட்டோம்,
மறு நாள் காலை நான்கு மணிக்கு எழுந்து அடிவாரம் செல்ல கிளம்பிவிட்டோம், அனைவரும் டார்ச் லைட் , எடுத்துக்கொண்டு மெதுவாக கிளம்பிவிட்டோம், பாதி வலி வந்திருப்போம் அப்போதுதான் என் கண்ணில் ஒரு உருவம் தட்டுபட்டது, மங்கிய நிலவு வெளிச்சத்தில் ஒரு பாறையில் ஒரு சித்தர் அப்படியே விறைப்பாய் தியானம் செய்துகொண்டு இருந்தார் அதை  கண்டு மெய்சிலிர்த்தோம் ,அப்பன் சிவன் எங்களின் ஆசைப்படி சித்தரை காண்பித்து விட்டார் என்ற திருப்தி ஆகிவிட்டது .பிறகு மெல்ல மெல்ல கீழே வந்து சேர்ந்தோம் ,
இடையில் சுக்கு காபி ,ராகி வடை சாப்பிட்டோம், அது மிகவும் சுவையாக இருந்தது ,
குளித்து சாப்பிட்டு வண்டி ஏறி கிளம்பி வந்துவிட்டோம்,
வரும் வழியில் மதுரை திருப்பரகுன்றம் அழகு முருகனை தரிசித்து ,அங்கேயே சாப்பிட்டு மாலை ஆறு மணிக்கு நாமக்கல் வந்து சேர்ந்தோம்
ஒரு அற்புதமான ,பயம் கலந்த, கரடுமுரடான, வியப்புமிகுந்த மலையை கண்ட ,சிவனை கண்ட ,அந்த சிலிர்ப்பு மிகுந்த பயணம் எங்கள் மாணவர்களை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது, வாழ்வில்  இது நாங்கள், நான் அடைந்த பாக்கியம் இதுவே
இப்போதும் என் கண்களில் அந்த அதிசிய சதுரகிரி காட்சி மாறவில்லை
மலையில் எடுத்த மாணவ செல்வங்கள் புகை படம்









இரட்டை  லிங்கம்









நானும் ராமசாமியும்

மிகுந்த தாகம் எனக்கு







தியான நிலையில்





ஏசி பாறையில்




AUDITOR NAAMAKKAL

ஆடிட்டர் நாமக்கல்
அன்பு மக்களே நான் நாமக்கலில் உள்ள ஆடிட்டர் சென்குட்டுவேல் சொல்கிறேன் கொஞ்சம் கவனமா கேளுங்க
நான் நாமக்கலில் சேலம் ரோட்டில் கடை கணக்குகளை பராமரித்து வருகிறேன் என் கஸ்டமர் சுமார் 500  பேர் உள்ளார்கள் . அவர்களுக்கு நான் சிறந்த முறையில் சேல் டேக்ஸ், மற்றும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்து நாமக்கல்லியே சிறந்த ஆடிட்டர் என்ற நற் பெயரை எடுத்துள்ளேன் அதனால் நாமக்கல் நகரத்தில் உள்ள வணிகர்கள் என்னை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமாய் அன்பாய் கேட்டுக்கொள்கிறேன் இந்த வலைத்தளம் சிறந்த தளமாக மாற வாழ்த்துகிறேன்