தசை மற்றும் புக்தி என்றால் என்ன?
தசை என்பது, மனிதனின் வாழ்நாட்களில் கிரஹங்கள் ஆட்சி செலுத்தும் கால அளவு (period) என்று பொருள்படும். மனிதனுடைய வாழ்நாளை 120 வருஷங்கள் என்று சோதிட சாஸ்திரத்தில் நிச்சயித்திருக்கிறார்கள். இது தீர்க்காயுசு எனப்படும்.
ஆகையால், தீர்க்காயுசு என்பது 120 வருஷங்கள் என்று நம் சோதிடக் கிரந்தங்களில் நிர்ணயித்திருப்பது உண்மையாகும். மேற்கண்ட 120 வருடங்களை 9 பாகங்களாகப் பிரித்திருக்கிறார்கள். ஒன்பதும் சமபாகங்கள் அல்ல; சிறிது ஏற்றக் குறைவுள்ள பாகங்கள். அவரவர் ஜனன நட்சத்திரத்தையொட்டி, கேது, சுக்கிரன், சூரியன், சந்திரன், செவ்வாய், ராகு, குரு, சனி, புதன் இந்த வரிசையில் தசைகள் நடக்கும். இந்த ஒன்பது தசைகளுக்கு மேற்கண்ட 120 வருடங்களும் பின்வருமாறு பங்கிடப்பட்டிருக்கின்றன:
கிரஹம் | (வருஷங்கள்) | கிரஹம் | (வருஷங்கள்) | ||
1. | கேது | 7 | 6. | ராகு | 18 |
2. | சுக்கிரன் | 20 | 7. | குரு | 16 |
3. | சூரியன் | 6 | 8. | சனி | 19 |
4. | சந்திரன் | 10 | 9. | புதன் | 17 |
5. | செவ்வாய் | 7 | 120 |
முதல் தசை எது?
முதல் தசை என்பது அந்த அந்த ஜாதகன் பிறந்த நட்சத்திரத்தையொட்டி ஆரம்பமாகும். உதாரணமாக, ஒருவன் ‘கிருத்திகை’ நட்சத்திரத்தில் பிறந்தால் அவனுக்கு ஜனன காலத்தில் சூரிய தசை ஆரம்பமாகும். ஒருவன் ‘ரோகிணி’யில் பிறந்தால் சந்திர தசை ஆரம்பமாகும். இவ்விதமே மற்ற நட்சத்திரங்களுக்கும் அந்த அந்தத் தசைகள் ஆரம்பமாகும்.
தசை அறியும் விதம் வருமாறு : நட்சத்திரங்கள் மொத்தம் 27 என்பது யாவரும் அறிந்ததே. அந்த 27 நட்சத்திரங்களையும் 9 கிரஹங்களுக்கு மும்மூன்றாகப் பங்கிட்டிருக்கிறார்கள். வரிசையாக மும்மூன்று நட்சத்திரங்கள் அல்ல. வரிசையாக ஒவ்வொரு கிரஹத்துக்கும் ஒவ்வொரு நட்சத்திரத்தைக் கொடுத்து, அந்த அந்த நட்சத்திரத்துக்குப் பத்தாவது நட்சத்திரத்தை மறுபடியும் அதே கிரஹத்துக்குப் பங்கிட்டிருக்கிறார்கள். அதன் விவரம் :
நட்சத்திரங்கள் தசை | ||||
1. | அசுவினி | மகம் | மூலம் | கேது |
2. | பரணி | பூரம் | பூராடம் | சுக்கிரன் |
3. | கிருத்திகை | உத்திரம் | உத்திராடம் | சூரியன் |
4. | ரோகிணி | ஹஸ்தம் | திருவோணம் | சந்திரன் |
5. | மிருகசீர்ஷம் | சித்திரை | அவிட்டம் | செவ்வாய் |
6. | திருவாதிரை | சுவாதி | சதயம் | ராகு |
7. | புனர்வசு | விசாகம் | பூரட்டாதி | குரு |
8. | பூசம் | அனுஷம் | உத்திரட்டாதி | சனி |
9. | ஆயில்யம் | கேட்டை | ரேவதி | புதன் |
முதல் தசையில் கவனிக்க வேண்டியது
மேற்கண்டபடி ஒவ்வொருவருக்கும் ஆரம்பமாகும் முதல் தசை அவரவர் ஜன்ம நட்சத்திரத்துக்கான முழுக் காலத்திலும் இராது. அதாவது கிருத்திகையில் பிறந்த ஒருவன், சூரிய தசை 6 வருஷத்தையும் அநுபவிப்பான் என்று சொல்ல முடியாது. ஏனெனில் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறப்பவன் அந்த நட்சத்திரம் ஆரம்பமான முதல் விநாடியிலேயே பிறந்தால், முதல் தசையாகிய சூரிய தசையை 6 வருஷமும் கணக்கிடலாம். இப்படி அநேகமாக நேராது. எவ்வாறெனில், ஒருவன் கிருத்திகை நட்சத்திரத்தில் 60 நாழிகை உள்ள ஒரு நாளில் அந்த நட்சத்திரம் ஆரம்பமாகி 20 நாழிகை கழிந்த பிறகு பிறந்திருப்பான். அவனுக்குச் சூரிய தசை நாழிகை கழிந்த பிறகு பிறந்திருப்பான். அவனுக்குச் சூரிய தசையில் 1/3 போக, மீதி 2/3 அதாவது சுமார் 4 வருஷமே இருப்பு என்று சொல்ல வேண்டும். இதற்கு ஜனன கால தசாசேஷம் என்று பெயர்.
புக்தி என்றால் என்ன?
புக்தி என்பது தசையில் ஒரு பாகம்; அதாவது ஒரு கிரஹ தசைக்குள் மற்றைய கிரஹங்கள் வரிசையாக வந்து ஆட்சி செலுத்தும் காலம் ‘புக்தி’ அல்லது அந்தரம் (Sub-period) எனப்படும். தசை எந்தக் கிரஹத்தினுடையதோ, அதன் புக்தி முதலில் ஆரம்பமாகும். உதாரணமாகச் சூரிய தசையில் சூரிய புக்தி ஆரம்பம். பிறகு சந்திரபுக்தி, செவ்வாய்புக்தி. இவ்விதமாக, சூரிய தசை, சூரிய புக்தியுடன் ஆரம்பித்துச் சுக்கிர புக்தியுடன் முடியும். இதே மாதிரி, சந்திர தசை, சந்திரபுக்தியில் ஆரம்பித்துச் சூரிய புக்தியோடு முடியும். இம்மாதிரியே மற்றைய கிரஹங்களின் தசைகளில் புக்திகளை அறிய வேண்டும். தசையானாலும் புக்தியானாலும் கேது, சுக்கிரன், சூரியன், சந்திரன், செவ்வாய், ராகு, குரு, சனி, புதன் என்ற முறையிலே வரிசையாகத்தான் வரும்.
புக்திகளைக் கண்டுபிடிக்கும் சுலபமான வழி
தசாநாதனான கிரஹத்தின் தசை வருஷ எண்ணை புக்திநாதனான கிரஹத்தின் தசை வருஷ எண்ணால் பெருக்கி வரும் மொத்த எண்ணில் கடைசி எண்ணுக்கு முன் புள்ளி வைக்கவேண்டும். அந்தப் புள்ளிக்கு முன்னுள்ளவை புக்தி மாதங்கள். புள்ளிக்குப் பிறகு உள்ள எண்ணை மூன்றால் பெருக்க அவை நாட்களாகும்.
உதாரணமாக, சூரிய தசை, செவ்வாய் புக்தி கணிக்கும் விதம் : தசாநாதனான சூரிய தசை வருஷ எண் 6-ஐ, புக்திநாதனான செவ்வாய் தசை வருஷ எண் 7-ஆல் பெருக்க 6 X 7 = 42. இதில் கடைசி எண்ணான 2க்கு முன் புள்ளி வைக்க 4.2 ஆகும். புள்ளிக்கு முன்னுள்ள எண் 4 மாதங்களாகும். புள்ளிக்குப் பின்னுள்ள 2-ஐ மூன்றால் பெருக்க 6 வரும். ஆக, சூரிய தசையில் செவ்வாய் புக்தி 4 மாதங்கள், 6 நாட்களாகும்.
மற்றோர் உதாரணம் : (குரு தசை, சனி புக்தி)
குரு தசை வருஷங்கள் 16-ஐ, சனி தசை வருஷங்கள் 19-ஆல் பெருக்க 16 X 19 = 304.
அதாவது 30.4 (4 X 3)=12 நாட்கள். ஆகவே, 2 வருஷம், 6 மாதம், 12 நாட்கள் ஆகும்.
இம்மாதிரியே எந்தத் தசையில் எந்தக் கிரஹத்தின் காலம் தெரிய வேண்டுமானாலும் தசாநாதன் தசை வருஷத்தைப் புக்திநாதனின் தசை வருஷத்தால் பெருக்கி முன் சொன்னபடி புக்திநாதனான கிரஹத்தின் காலத்தை அறியலாம்.
புக்தியின் உபயோகம் என்ன?
ஒரு தசை ஒரு ஜாதகனுக்குக் கெடுதலாகப் பலனைத் தரும் என்று வைத்துக்கொள்வோம். உதாரணமாக, ஒருவனுக்குச் சூரிய தசை நடக்கிறது. சூரிய தசை 6 வருஷம். ஆகையால், சூரிய தசை முழுவதும் அவனுக்குக் கெடுதல் என்று வைத்துக் கொள்ளக்கூடாது. அல்லது அதே சூரியன் ஒரு ஜாதகனுக்கு நல்ல யோக பலனைக் கொடுப்பவனாக இருக்கிறான். அதனால் 6 வருஷ காலமும் அவனுக்கு நல்ல யோக பலனே நடக்கும் என்று கருதக்கூடாது.
மற்றும் யாதெனில், சூரிய தசையில் சூரியன் முதலாகச் சுக்கிரன் வரையில் உள்ள 9 கிரஹங்களின் புக்திகள் நடக்கும். ஆகையால், அந்தப் புக்திகளில் சில புக்திகளுக்கு உரியவர்களான கிரஹங்கள் நல்ல நிலையில் இருந்தால் நல்லதும், அசுப ஸ்தானத்தில் இருந்தால் கெடுதலும் நடக்கும் என்று அறிய வேண்டும்.
ஆகையால், ஒரு தசையின் உட்பிரிவான புக்தி காலங்களில் (Sub-period) நற்பயன் அல்லது கெட்ட பயன் ஏற்படும். இதை அறிவிப்பதே புக்திகளின் உபயோகமாகும்.
(உத்தர அக்ஷாம்சத்தைப் பற்றிப் பார்க்கலாம்…)
மிக்க நன்றி, திசைகளையும் புத்தியும் பற்றி இவ்வளவு சுலபமஹா பஹிர்ததற்கு
பதிலளிநீக்குthank u so much sir
பதிலளிநீக்குகிரகங்களின் தசா ஆண்டுகள் எதன் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது ? ex சூரியன்-6,, சுக்ரன்-20..
பதிலளிநீக்குthanks for the useful information..
பதிலளிநீக்குVery simple and informative.
பதிலளிநீக்குNallathu
பதிலளிநீக்குநல்ல பதிப்பு. மிக்க நன்றி. பயனுள்ள தகவல்.
பதிலளிநீக்குமிக்க நன்றி
பதிலளிநீக்குஅருமை அய்யா....நன்றி
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குSir I hve born on27/05/1988 sign:virgo nakshathiram:hasthamlagnam:meenam. now 30years completed sir .now guru dasha started for me. It is good for me sir.kindly tell me sir
பதிலளிநீக்குthanks for explaining bhukthi dhasai calculation
பதிலளிநீக்கு10.09.1999 my date of birth இப்போ எனக்கு என்ன தசை நடக்குதுன்னு கொஞ்சம் சொல்லுங்க
பதிலளிநீக்குExcellent sir
பதிலளிநீக்குVery proud of your work sir
Please go ahead
Keep it up
Help us sir
Thanking you for your time sir
Thnx ji...
பதிலளிநீக்குஊன்மாய் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.என்னால் படித்து தெரிந்துகொல்லும் அலௌவ்க்க்கு எளிமையாக இர்ருந்தது நன்றி ஐய்யா.
பதிலளிநீக்குhusband and wife ku dhesa pukthi meet pannuna enna palan kidaikkum
பதிலளிநீக்குAyya oru manithanukku 120 years muduncha next piravi irukatha
பதிலளிநீக்குAyya oru manithanukku 120 years muduncha next piravi irukatha
பதிலளிநீக்கு8.7.1968 neramum 7.15 am ippodhu enkku Emma plan. Nan our nausea paisa kooda illamal varumaiyil velayum illamal irukkiran. Enkku thangalin melasma arivurai Emma
பதிலளிநீக்கு8.7.1968 neramum 7.15 am ippodhu enkku Emma plan. Nan our nausea paisa kooda illamal varumaiyil velayum illamal irukkiran. Enkku thangalin melasma arivurai Emma
பதிலளிநீக்குrahu dasa matrum bhukthigal patri vilakamaaga podavum
பதிலளிநீக்குI born 1962 11-Nov My Nakshtra is Mesha born in 4th Patham and Kethu Maha thesai, what is my thesaputhi now (2020)
பதிலளிநீக்கு