சனி, 7 மே, 2011

ஜோதிட சொல் விளக்கங்கள்

ஜோதிட சொல் விளக்கங்கள்
  1. ராசி சக்கிரம்   -ஒரு குழந்தை பிறந்த பொழுது வான மண்டலத்தில் கிரகங்கள் எந்தெந்த ராசி மண்டலத்தில் நிற்கின்றது எனும் காட்டும் வரை படமே ராசி சக்கிரமாகும்
  2. அச்தங்கிதம் -- சூரியன் மிகவும் வெப்பம் மிகுந்த கிரகமாகும் , சூரியனை ராகு, கேது, தவிர மற்ற கிரகங்கள் நெருங்கும் பொது சூரியனின் அதீத வெப்பத்தால் அந்த கிரகம் எரிந்துவிடுகிறது அல்லது பலம் இழந்துவிடுகிறது    கீழ் கண்ட பாகை காலையில் கிரகம் வரும்போது அது நடக்கும் .
         சந்திரன் 12  *,   செவ்வாய் 17 , புதன் 14 , குரு 11  சுக்கிரன் 10  சனி 15
அஸ்தமனம் அடைந்த பாவக காரக பலன் கிடைக்காது

3  வர்கோத்தமம்
ஒரு கிரகமானது ராசியிலும் நவாம்சதிலும் ஒரே ராசியில் நின்றாள் அந்த கிரகம் வர்கோத்தமம் பெற்றுள்ளது என பொருள் ஆகும் , வர்கோத்தமம் பெற்ற கிரகம் பலம் உள்ள கிரகம் ஆகும்.

4  பரிவர்த்தனை

ராசி சகிரதிலோ அல்லது நவாம்ச சகிரதிலோ இரு கிரகங்கள் தங்களது ஆட்சி வீடுகளில் மாறி நிற்பது பரிவர்த்தனை நிலை ஆகும் , உதாரணமாக சுக்கிரன் புதனின் மிதுன வீட்டில் நின்று அந்த புதன் சுக்கிரன் வீட்டில் நின்றாள் அது பரிவர்த்தனை பெற்றுள்ளது என்று பொருள் ,
பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் பலம் பெற்ற கிரகமாகும்

5  கிரக உத்தம்

ஒரு ராசியில் செவ்வாய் நின்று இருந்து அந்த செவ்வாய்க்கு பின் நின்ற கிரகங்கள் கிரக யுத்தம் அடைந்துள்ளது என்பதாகும் , உதாரணமாக செவ்வாய் பூரம் 1  பாதம் நின்று குரு மகம் 4  பாதம் நின்ற நிலையாகும்
இந்த செவ்வாய் சிம்ம ராசியில் அதிக பாகை கடந்துள்ளது .
கிரக யுத்தத்தில் தோற்ற கிரகம் பூரண பலனை தராது

6  ஆத்மா காரகன்

ஒரு ராசி கட்டத்தில் அதாவது 12  ராசிகளில் எந்த ஒரு கிரகம் அதிகம் பாதம் பெற்றுல்லுதோ அதுவே அந்த கிரகமே ஆத்மா காரகன் ஆவார் ,
இந்த ஆத்மகாரகன் ஜாதகனுக்கு நன்மை பயக்கும் கிரகமாகும்
இந்த கிரகம் திசை புதிகளில் நன்மை பயக்கும்.

7  சஸ்தாச்டகம்
சஷ்டி என்றால் ஆறு ஆகும் அஷ்டம் என்றால் எட்டு ஆகும்
ஒரு ராசி கட்டத்தில் ஒரு கிரகம் நின்று அந்த கிரகம் நின்ற ராசி கட்டத்திற்கு ஆறாம் ராசியிலோ அல்லது எட்டாம் ராசியிலோ ஒரு கிரகம் நிற்கும் நிலை சஸ்தாச்டகம் ஆகும்
சஸ்தாச்டகம்  பெற்ற கிரகம் திசை புத்தியில் பலனை கொடுக்காது , .

8  த்விர்தாம்சம்
ராசி சக்கிரத்தில் ஏதாவது ஒரு ராசியில் ஒரு கிரகம் நின்று அந்த கிரகத்திற்கு இரண்டிலோ அல்லது பன்னிரின்டிலோ ஒரு கிரகம் நிற்கும்  நிலை ஆகும்
இப்படி கிரகம் நிற்கும் நிலை த்விர்தாம்சம் ஆகும் . இந்த நிலா பெற்ற கிரகம் திசை புத்தியில் பலனை தராது

9 . வக்கிரம்

வக்கிரம் என்றால் பின்னோக்கும் நிலை ஆகும்
ராகு கேதுக்கள் எப்போதும் பின்னோக்கியே செல்லும்
சூரியன் ,சந்திரன் எப்போதும் முன்னோக்கியே செல்லும் ,மற்ற கிரகமான செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, வக்கிர நிலை அடையும், சூரியனை நோக்கி ஒரு குறிப்பிட்ட பாகை கலையில் நெருங்கும் பொது மேற்கண்ட கிரகங்கள் வக்கிர நிலை அடையும் , குறிப்பாக பூமியை நெருங்கும் சமயம் கிரகம் வக்கிர கதி அடைகிறது வக்கிர நிலை பெரும் கிரகம் உச்ச கிரக பலனை தரும்.

௧௩ ௦ பாகை முதல் 245  பாகை வரை சூரியனை நெருங்கும் பொது கிரகங்கள் வக்கிர கதி ஏற்படும்

10 .  கேந்திரம் 
1 ,4 ,7,10  வீடுகள் கேந்திர ஸ்தானங்கள் என்று அழைக்கப்படும் , இவை விஸ்ணு ஸ்தானங்கள் என்று அழைக்கப்படும் இந்த ஸ்தானங்களில் சஞ்சாரம் செய்யும் கிரகம் மிகவும் பலமாக செயல்படும்

11, திரிகோணம்
1 ,5 ,9  வீடுகள் திரிகோணம் என்று அழைக்கப்படும் இந்த வீடுகள் லட்சுமி ஸ்தானம் என்று அழைக்கப்படும் இந்த வீடுகளில் நிற்கும் கிரகம் நல்ல சுபமான பலனை கொடுக்கும்   

12 . பணபரம்
25811  வீடுகள் பண்பர ஸ்தானமாகும்
இரண்டாம் வீடு தன உழைப்பினால் வரும் பணமாகும்
ஐந்தாம் வீடு குழந்தை மற்றும் அதிர்ஷ்டத்தினால் வரும் பணமாகும்
எட்டாம் வீடு எதிர்பாராத விளைவினால் வரும் பணமாகும்
11  மிடம் தான் செய்யும் தொழில் மூலம் பலவழிகளில் கிடைக்கும் பணமாகும்

13  உபஜெய ஸ்தானம்
361011  மிடம் உபஜெயச்தானமாகும்
இந்த இடத்து அதிபதிகள் எந்த ஒரு செயலிலும் வெற்றியை கொடுக்கும் அதிபதியாகும்.

14 . ஆபோக்லீமம்
பணபரதிர்க்கு அடுத்த வீடுகள் அதாவது 36912  ஆம் வீடுகள்
இந்த இடத்தில் உள்ள கிரகங்கள் வலிமை குறைந்து செயல் படும் ஆனால் 9  பாவகம் இதில் விளக்கு அளிக்கப்பட்டுள்ளது ஆனால் 10  பாவக அதிபதி இதில் இருக்க கூடாது

15 . மறைவு ஸ்தானங்கள்
36812  ஆம் வீடுகள் ஆகும் இந்த வீடுகளில் ஒருகிரகம் நின்றாள் அது பலம் இழந்து விடுகிறது , அதில் மூணாம் பாவகம் அரை பலத்துடன் செயல்படும்