தசை என்பது, மனிதனின் வாழ்நாட்களில் கிரஹங்கள் ஆட்சி செலுத்தும் கால அளவு (period) என்று பொருள்படும். மனிதனுடைய வாழ்நாளை 120 வருஷங்கள் என்று சோதிட சாஸ்திரத்தில் நிச்சயித்திருக்கிறார்கள். இது தீர்க்காயுசு எனப்படும்.
ஆகையால், தீர்க்காயுசு என்பது 120 வருஷங்கள் என்று நம் சோதிடக் கிரந்தங்களில் நிர்ணயித்திருப்பது உண்மையாகும். மேற்கண்ட 120 வருடங்களை 9 பாகங்களாகப் பிரித்திருக்கிறார்கள். ஒன்பதும் சமபாகங்கள் அல்ல; சிறிது ஏற்றக் குறைவுள்ள பாகங்கள். அவரவர் ஜனன நட்சத்திரத்தையொட்டி, கேது, சுக்கிரன், சூரியன், சந்திரன், செவ்வாய், ராகு, குரு, சனி, புதன் இந்த வரிசையில் தசைகள் நடக்கும். இந்த ஒன்பது தசைகளுக்கு மேற்கண்ட 120 வருடங்களும் பின்வருமாறு பங்கிடப்பட்டிருக்கின்றன:
கிரஹம்
(வருஷங்கள்)
கிரஹம்
(வருஷங்கள்)
1.
கேது
7
6.
ராகு
18
2.
சுக்கிரன்
20
7.
குரு
16
3.
சூரியன்
6
8.
சனி
19
4.
சந்திரன்
10
9.
புதன்
17
5.
செவ்வாய்
7
120
அதாவது, 120 வயதுள்ள ஒருவருக்கு ஜனன காலத்தில் கேது தசை ஆரம்பித்தால், பிறகு சுக்கிர தசை 20 வருஷம், சூரிய தசை 6 வருஷம், சந்திர தசை 10 வருஷம், செவ்வாய் தசை 7 வருஷம் இவ்விதமாகத் தசைகளைக் கணித்துக்கொள்ள வேண்டும். முதல் தசை எது?
முதல் தசை என்பது அந்த அந்த ஜாதகன் பிறந்த நட்சத்திரத்தையொட்டி ஆரம்பமாகும். உதாரணமாக, ஒருவன் ‘கிருத்திகை’ நட்சத்திரத்தில் பிறந்தால் அவனுக்கு ஜனன காலத்தில் சூரிய தசை ஆரம்பமாகும். ஒருவன் ‘ரோகிணி’யில் பிறந்தால் சந்திர தசை ஆரம்பமாகும். இவ்விதமே மற்ற நட்சத்திரங்களுக்கும் அந்த அந்தத் தசைகள் ஆரம்பமாகும். தசை அறியும் விதம் வருமாறு : நட்சத்திரங்கள் மொத்தம் 27 என்பது யாவரும் அறிந்ததே. அந்த 27 நட்சத்திரங்களையும் 9 கிரஹங்களுக்கு மும்மூன்றாகப் பங்கிட்டிருக்கிறார்கள். வரிசையாக மும்மூன்று நட்சத்திரங்கள் அல்ல. வரிசையாக ஒவ்வொரு கிரஹத்துக்கும் ஒவ்வொரு நட்சத்திரத்தைக் கொடுத்து, அந்த அந்த நட்சத்திரத்துக்குப் பத்தாவது நட்சத்திரத்தை மறுபடியும் அதே கிரஹத்துக்குப் பங்கிட்டிருக்கிறார்கள். அதன் விவரம் :
நட்சத்திரங்கள் தசை
1.
அசுவினி
மகம்
மூலம்
கேது
2.
பரணி
பூரம்
பூராடம்
சுக்கிரன்
3.
கிருத்திகை
உத்திரம்
உத்திராடம்
சூரியன்
4.
ரோகிணி
ஹஸ்தம்
திருவோணம்
சந்திரன்
5.
மிருகசீர்ஷம்
சித்திரை
அவிட்டம்
செவ்வாய்
6.
திருவாதிரை
சுவாதி
சதயம்
ராகு
7.
புனர்வசு
விசாகம்
பூரட்டாதி
குரு
8.
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
சனி
9.
ஆயில்யம்
கேட்டை
ரேவதி
புதன்
மேற்கண்ட அட்டவணையால் விளங்குவது யாதெனில், அசுவினி, மகம், மூலம் இந்த மூன்று நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களானாலும், அவர்களுக்கு ஜனன காலத்தில் கேது தசை ஆரம்பம் என்பதாம். இவ்விதமே பரணி, பூரம், பூராடம் இவற்றில் ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குச் சுக்கிரதசை ஆரம்பமாகும். இம்மாதிரியே அவரவர் நட்சத்திரத்தையொட்டி ஜனன காலத்தில் அவரவர்களுக்கு எந்தத் தசை ஆரம்பமாகும் என்று தெரிந்துகொள்ளலாம். முதல் தசையில் கவனிக்க வேண்டியது
மேற்கண்டபடி ஒவ்வொருவருக்கும் ஆரம்பமாகும் முதல் தசை அவரவர் ஜன்ம நட்சத்திரத்துக்கான முழுக் காலத்திலும் இராது. அதாவது கிருத்திகையில் பிறந்த ஒருவன், சூரிய தசை 6 வருஷத்தையும் அநுபவிப்பான் என்று சொல்ல முடியாது. ஏனெனில் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறப்பவன் அந்த நட்சத்திரம் ஆரம்பமான முதல் விநாடியிலேயே பிறந்தால், முதல் தசையாகிய சூரிய தசையை 6 வருஷமும் கணக்கிடலாம். இப்படி அநேகமாக நேராது. எவ்வாறெனில், ஒருவன் கிருத்திகை நட்சத்திரத்தில் 60 நாழிகை உள்ள ஒரு நாளில் அந்த நட்சத்திரம் ஆரம்பமாகி 20 நாழிகை கழிந்த பிறகு பிறந்திருப்பான். அவனுக்குச் சூரிய தசை நாழிகை கழிந்த பிறகு பிறந்திருப்பான். அவனுக்குச் சூரிய தசையில் 1/3 போக, மீதி 2/3 அதாவது சுமார் 4 வருஷமே இருப்பு என்று சொல்ல வேண்டும். இதற்கு ஜனன கால தசாசேஷம் என்று பெயர். புக்தி என்றால் என்ன?
புக்தி என்பது தசையில் ஒரு பாகம்; அதாவது ஒரு கிரஹ தசைக்குள் மற்றைய கிரஹங்கள் வரிசையாக வந்து ஆட்சி செலுத்தும் காலம் ‘புக்தி’ அல்லது அந்தரம் (Sub-period) எனப்படும். தசை எந்தக் கிரஹத்தினுடையதோ, அதன் புக்தி முதலில் ஆரம்பமாகும். உதாரணமாகச் சூரிய தசையில் சூரிய புக்தி ஆரம்பம். பிறகு சந்திரபுக்தி, செவ்வாய்புக்தி. இவ்விதமாக, சூரிய தசை, சூரிய புக்தியுடன் ஆரம்பித்துச் சுக்கிர புக்தியுடன் முடியும். இதே மாதிரி, சந்திர தசை, சந்திரபுக்தியில் ஆரம்பித்துச் சூரிய புக்தியோடு முடியும். இம்மாதிரியே மற்றைய கிரஹங்களின் தசைகளில் புக்திகளை அறிய வேண்டும். தசையானாலும் புக்தியானாலும் கேது, சுக்கிரன், சூரியன், சந்திரன், செவ்வாய், ராகு, குரு, சனி, புதன் என்ற முறையிலே வரிசையாகத்தான் வரும். புக்திகளைக் கண்டுபிடிக்கும் சுலபமான வழி
தசாநாதனான கிரஹத்தின் தசை வருஷ எண்ணை புக்திநாதனான கிரஹத்தின் தசை வருஷ எண்ணால் பெருக்கி வரும் மொத்த எண்ணில் கடைசி எண்ணுக்கு முன் புள்ளி வைக்கவேண்டும். அந்தப் புள்ளிக்கு முன்னுள்ளவை புக்தி மாதங்கள். புள்ளிக்குப் பிறகு உள்ள எண்ணை மூன்றால் பெருக்க அவை நாட்களாகும். உதாரணமாக, சூரிய தசை, செவ்வாய் புக்தி கணிக்கும் விதம் : தசாநாதனான சூரிய தசை வருஷ எண் 6-ஐ, புக்திநாதனான செவ்வாய் தசை வருஷ எண் 7-ஆல் பெருக்க 6 X 7 = 42. இதில் கடைசி எண்ணான 2க்கு முன் புள்ளி வைக்க 4.2 ஆகும். புள்ளிக்கு முன்னுள்ள எண் 4 மாதங்களாகும். புள்ளிக்குப் பின்னுள்ள 2-ஐ மூன்றால் பெருக்க 6 வரும். ஆக, சூரிய தசையில் செவ்வாய் புக்தி 4 மாதங்கள், 6 நாட்களாகும். மற்றோர் உதாரணம் :(குரு தசை, சனி புக்தி)
குரு தசை வருஷங்கள் 16-ஐ, சனி தசை வருஷங்கள் 19-ஆல் பெருக்க 16 X 19 = 304.
அதாவது 30.4 (4 X 3)=12 நாட்கள். ஆகவே, 2 வருஷம், 6 மாதம், 12 நாட்கள் ஆகும்.
இம்மாதிரியே எந்தத் தசையில் எந்தக் கிரஹத்தின் காலம் தெரிய வேண்டுமானாலும் தசாநாதன் தசை வருஷத்தைப் புக்திநாதனின் தசை வருஷத்தால் பெருக்கி முன் சொன்னபடி புக்திநாதனான கிரஹத்தின் காலத்தை அறியலாம். புக்தியின் உபயோகம் என்ன?
ஒரு தசை ஒரு ஜாதகனுக்குக் கெடுதலாகப் பலனைத் தரும் என்று வைத்துக்கொள்வோம். உதாரணமாக, ஒருவனுக்குச் சூரிய தசை நடக்கிறது. சூரிய தசை 6 வருஷம். ஆகையால், சூரிய தசை முழுவதும் அவனுக்குக் கெடுதல் என்று வைத்துக் கொள்ளக்கூடாது. அல்லது அதே சூரியன் ஒரு ஜாதகனுக்கு நல்ல யோக பலனைக் கொடுப்பவனாக இருக்கிறான். அதனால் 6 வருஷ காலமும் அவனுக்கு நல்ல யோக பலனே நடக்கும் என்று கருதக்கூடாது.
மற்றும் யாதெனில், சூரிய தசையில் சூரியன் முதலாகச் சுக்கிரன் வரையில் உள்ள 9 கிரஹங்களின் புக்திகள் நடக்கும். ஆகையால், அந்தப் புக்திகளில் சில புக்திகளுக்கு உரியவர்களான கிரஹங்கள் நல்ல நிலையில் இருந்தால் நல்லதும், அசுப ஸ்தானத்தில் இருந்தால் கெடுதலும் நடக்கும் என்று அறிய வேண்டும்.
ஆகையால், ஒரு தசையின் உட்பிரிவான புக்தி காலங்களில் (Sub-period) நற்பயன் அல்லது கெட்ட பயன் ஏற்படும். இதை அறிவிப்பதே புக்திகளின் உபயோகமாகும்.
(உத்தர அக்ஷாம்சத்தைப் பற்றிப் பார்க்கலாம்…)
ஜாதகம் கணிக்கும் வழி ஜோதிடர் வளரொளி மோகன் பதிவு செய்த நாள் : November 10, 2010 கருத்துகள் (0) 590 views 1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (2 votes, average: 5.00 out of 5) Loading ... Loading ... லக்னம் என்றால் என்ன? லக்னம் என்பது ஒரு குழந்தை பிறந்த குறிப்பிட்ட காலத்திற்குப் பெயர். அதைச் சற்று விளக்குவோம். ராசி என்பது 12 சம பாகமாகப் பிரிக்கப்பட்ட பூமண்டலத்தின் பாகம். சூரியனும் மற்ற கிரகங்களும் கிழக்கிலிருந்து மேற்குப் பக்கமாகச் சுற்றுகின்றன. அதே சமயத்தில் மேஷாதி 12 ராசிகளைச் சம பாகமாகக் கொண்ட பூமண்டலமானது மேற்கிலிருந்து கிழக்குப் பக்கமாகச் சுற்றுகிறது. அப்படிச் சுற்றும்பொழுது பூமண்டலத்தின் எந்தப் பாகம் கிழக்கில் நமக்கு நேராக வருகிறதோ அந்த ராசிக்கு லக்னம் என்று பெயர். அதாவது, அந்த நேரத்தில் பிறந்த குழந்தைக்கு அந்த ராசியை லக்கினமென்று சொல்வார்கள். மற்றும் அப்பொழுது கிரஹங்கள் எந்த எந்த ராசியில் இருக்கின்றனவோ, அதையும் குறித்து வைத்துக் கொள்வார்கள். இதேல்லாம் சேர்ந்ததற்கே ஜாதகச் சக்கரம் அல்லது ராசிச் சக்கரம் என்று பெயர். இனி லக்னம், கிரஹநிலை, தசாபுக்தி ஆகியவற்றைக் கணிக்கும் வழியை ஓர் உதாரணம் மூலமாக விளக்குவோம்… உதாரண ஜாதகம் விகாரி வருடம் தை மாதம் 9-ம் தேதி வெள்ளிக்கழிமை, சுவாதி நக்ஷத்திரம் 29-27 மறுநாள் விசாகம் 25-42 (23-1-1960 @ 5-40 A.M…) இரவு மணி 5.40க்கு (சனிக்கிழமை விடியற்காலை) சென்னையில் ஓர் ஆண் குழந்தை பிறந்ததை வைத்துக் கொண்டு, அதற்கு ஜாதகம் கணிக்கும் விதத்தையும் கிரகங்களை அமைக்கும் வழியையும் தசா புக்திகள் கணிக்கும் விதத்தையும் கீழே விளக்குவோம். ஒரு ஜாதகம் கணிக்குமுன் கீழ்க்கண்ட அம்சங்களை முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டும் : 1. குழந்தை எத்தனையாவது அட்சாம்சத்தில் உள்ள ஊரில் பிறந்தது? 2. அந்த அட்சாம்ச ரேகைக்குத் தக்கபடி மேஷாதி ராசிப் பிரமாணங்கள் என்ன? 3. குழந்தை ஜனனமான தேதியில் அது பிறந்த ஊரில் சூரிய உதயம், எத்தனை மணி, எத்தனை நிமிஷத்துக்கு நிகழ்ந்தது? 4. சூரியோதயம் முதல் குழந்தை பிறந்தது வரையில் எத்தனை நாழிகை எத்தனை விநாடிகள் சென்றன? 5. சிசு பிறந்த நட்சத்திரத்தின் மொத்த நாழிகை என்ன? இவற்றைப் பஞ்சாங்கத்தின் உதவியால் முக்கியமாகக் குறித்து வைத்துக் கொண்டால் சுலபமாக ஜாதகம் கணித்துவிடலாம். 1. சூரிய உதயம்இந்தக் குழந்தை சென்னையில் பிறந்தது. சென்னையில் அட்சாம்சம் 13. சென்னையில் அன்றைக்குரிய உதயம் 6-39. தை மாதம் 9-ஆம் தேதி வெள்ளிக்கிழமை. குழந்தை விடியற்காலை மணி 5-40க்குப் பிறந்தது. அதாவது சனிக்கிழமை உதயத்துக்கு முன் 0-59 நிமிஷங்களுக்கு முன்னதாகப் பிறந்துள்ளது. நம் நாட்டு வழக்கப்படி சூரிய உதயத்திலிருந்து அடுத்த சூரிய உதயம் வரையில் ஒரு நாள் என்று கணக்கிடப்படும். 2. உதயாதி ஜனன நாழிகைவெள்ளிக்கிழமை சூரிய உதயம் முதல் குழந்தை பிறந்த நாழிகை விநாடிகள் வரையில் கணக்கிட வேண்டும. அது முதல் சனிக்கிழமை விடியற்காலை 5.40 வரையில் 23 மணி 1 நிமிஷம் ஆகும். மணி ஒன்றுக்கு 2 ½ நாழிகை வீதம் கணக்கிட, 57 நாழிகை 33 விநாடிகள் வரும். ஆகையால், வெள்ளிக்கிழமை சூரிய உதயாதி நாழிகை 57-33-க்கு அந்தக் குழந்தையின் ஜனனம் என்று அறிய வேண்டும். குறிப்பு : சூரிய உதயம் ஒவ்வொரு நாளும் காலை 6-00 மணிக்கே நிகழ்வதில்லை. காலை 5-39 முதல் 6-39க்கு இடையிலான காலத்தில் நாளுக்கு நாள் வித்தியாசமாக சூரியோதயம் ஆகிக்கொண்டிருக்கும். அதேபோல் இடத்திற்கு இடம் சூரியோதய காலம் மாறுபடும். உதாரணமாக, சென்னையில் காலை 6-01க்குச் சூரியோதயமென்றால், ராமேசுவரத்தில் அதே தினத்தில் 6-09க்குச் சூரியோதயம் ஆகும். ஆகவே, ஒரு குறிப்பிட்ட ஜாதகத்தைக் கணிப்பதற்கு முன், அந்தக் குழந்தை பிறந்த ஊரில் சூரியோதயம் எப்பொழுது நிகழ்ந்தது என்பதைப் பஞ்சாங்கங்கள் மூலம் துல்லியமாகத் தெரிந்து கொள்ளவேண்டும். அட்சாம்சங்களும் ராசிப் பிரமாணமும் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளை 360 சம பாகங்களாக (அதாவது ராசி ஒன்றுக்கு 30 பாகைகள் வீதம்) பிரித்திருக்கிறார்கள். இவற்றுக்கு அட்சாம்சம் (Latitude) என்று பெயர். பூமி முழுவதும் இந்த அட்சாம்ச ரேகைகளின் மீதே இருக்கிறது. அந்த அந்த அட்சாம்சங்களிலுள்ள பட்டணங்களுக்கு வெவ்வேறு ராசிமான சங்கியைகள் (அதாவது ராசியளவு நாழிகை, விநாடிகள்) ஏற்பட்டுள்ளன. இந்த அட்சாம்சங்களை அநுசரித்தே மேஷாதி ராசிகளின் கால அளவை அறிய வேண்டும். உதாரணமாக, சென்னையும், அதைச் சுற்றி சுமார் 100 மைல்களுக்கு உட்பட்ட பிரதேசங்களும் 13-ஆவது அட்சாம்சத்தில் இருக்கின்றன. ஆகையால், இந்த 13-வது அட்சாம்சத்தைச் சேர்ந்த இடங்களுக்கு மேஷ ராசிப் பிரமாணம் 4 நாழிகை 29 விநாடிகள் என்றால், இதே மேஷ ராசிக்கு 9-ஆவது அட்சாம்சத்தில் இருக்கும் ராமேசுவரத்துக்கு 4-37 விநாடியாகும். அதாவது சென்னையைக் காட்டிலும் 2 விநாடி குறைவு. (45-வது பக்கம் அட்டவணை 2-ஐ கவனிக்க). இம்மாதிரி, இடத்துக்கு இடம் மேஷாதி ராசிப் பிரமாணங்கள் மாறுபடும். ஆகையால், ஒரு குழந்தை பிறந்த இடம் எந்த அட்சாம்சத்தைச் சேர்ந்ததோ அந்த அட்சாம்சத்துக்குரிய மேஷாதி ராசிப் பிரமாணங்களைச் சூரியோதயம் தொடங்கி, குழந்தையின் ஜனன காலம் வரையில் கூட்டி லக்கினத்தை அறிய வேண்டும். இதைக் கவனிக்காவிட்டால் சரியான ஜாதகம் கணிக்க இயலாது. 3. உதய லக்ன சேஷம்சூரியன் உதய காலத்தில் எந்த ராசியில் இருக்கிறானோ, அதுவே உதய லக்னம் என்று கூறப்படும். மேற்படி உதய லக்ன நாழிகை ஒவ்வொரு நாளும் சூரியோதய காலத்தில் குறைந்துகொண்டே வரும். அதாவது, தமிழ் மாதமான சித்திரை மாதத்தின் முதல் தேதியன்று சூரிய உதய காலத்தில் மேஷ ராசியில் இருப்பு 13-வது அட்சாம்சத்தைச் சேர்ந்த சென்னைக்கு 4-29 என்றால் 2-ஆம் தேதி மேஷத்தின் இருப்பு 4-20. இம்மாதிரி ஒவ்வொரு தேதிக்கும் சூரிய உதய காலத்தில் 0-9 விநாடி வீதம் கழித்துக்கொண்டே போக வேண்டும். இது பஞ்சாங்கத்தில் ராசி இருப்பு என்ற தலைப்பில் இருக்கும். அப்படிக் கழித்தது போக மீதி நாழிகை விநாடியே உதய லக்ன சேஷமாகும். 4. ஜந்ம லக்னம் பிறகு ஜனன கால நாழிகை விநாடிகள் வரும்வரை ஒவ்வொரு ராசியாகக் கூட்டிக்கொண்டே போனால், எந்த ராசிப் பிரமாணத்தில் ஜனன கால நாழிகை அடங்குமோ அதுவே அந்தக் குழந்தையின் ஜன்ம லக்னம் என்று அறிய வேண்டும். லக்னம் கணிக்கும் வழி இந்தக் குழந்தை பிறந்தது தை மாதம் 9-ஆம் தேதி இரவு. ஆகையால் தை மாதம் 9-ஆம் தேதிக்குச் சரியாக (தை மாதத்திற்குரிய) மகர ராசியின் சேஷத்தைப் பஞ்சாங்கத்தில் உள்ளபடி குறித்துக் கொள்ளவேண்டும். அதன் கீழ் கும்பம் தொடங்கி ஜனன கால நாழிகை வரும் வரையில் ராசிமான சங்கியைகளை எழுதிக் கூட்டிக் கொள்ள வேண்டும். அதாவது: தை 9-ஆம் தேதி சூரிய உதயத்தில்- (உதய லக்னம்) நா-வி மகர சேஷம் – 3-32 கும்பம் – 4-17 மீனம் – 4-11 மேஷம் – 4-29 ரிஷபம் – 5-04 மிதுனம் – 5-27 கடகம் – 5-22 சிம்மம் – 5-08 கன்னி – 5-04 துலாம் – 5-16 விருச்சிகம் – 5-28 தனுசு ஆரம்ப நாழிகை – 53-18 தனுசு – 5-19 சேர்த்து – 58-37 ஜனன கால நாழிகையான 57-33, மேற்கண்ட தனுசு ராசி வரையிலுள்ள 58-37க்கு உட்பட்டிருப்பதால், இந்தக் குழந்தை தனுர் லக்னத்தில் பிறந்ததாகும். அதாவது குழந்தையின் ஜன்ம லக்னம் தனுசு என்று அறிய வேண்டும். இனி அந்தக் குழந்தையின் ஜன்ன காலத்தில் கிரகங்கள் எந்த பாதசாரத்தில் இருந்தன என்பதைக் கவனிப்போம்: பஞ்சாங்கத்தில் கிரகபாதசாரங்கள் என்னும் அட்டவணையில் கண்டபடி, தை மாதம் 9-ஆம் தேதி கிரகங்கள் கீழ்க்கண்ட வகையில் நக்ஷத்திர பாதங்களில் சஞ்சரிக்கின்றன: கிரகம் நக்ஷத்திரம் பாதம் ராசி நவாம்சம் சூரியன் உத்திராடம் 4 மகரம் மீனம் சந்திரன் விசாகம் 2 துலாம் ரிஷபம் செவ்வாய் மூலம் 4 தனுசு கடகம் புதன் உத்திராடம் 3 மகரம் கும்பம் குரு மூலம் 1 தனுசு மேஷம் சுக்கிரன் மூலம் 1 தனுசு மேஷம் சனி பூராடம் 2 தனுசு கன்னி ராகு உத்திரம் 3 கன்னி கும்பம் கேது உத்திரட்டாதி 1 மீனம் சிம்ஹம் 5. நவாம்ச லக்னம் நவாம்ச லக்னம் என்பது ஜன்ம லக்னத்தில் 9-ல் ஒரு பங்கு என்று பொருள். அதாவது ஜன்ம லக்னம் தனுசு, அதன் நிராயன ராசிமானம் சென்னைக்கு 5 நாழி 19 விநாடி அல்லது 319 விநாடி. இதை 9-ஆல் வகுக்க ஒரு பாகம் 35 4/9. குழந்தை பிறந்த நேரம் 57 நாழி 33 விநாடி. தனுர் லக்னம் ஆரம்பம். 53 நாழி 18 விநாடி. தனுர் லக்னம் பிறப்பு வரை சென்றது 57 நாழி 33 விநாடி – 53 நாழி 18 விநாடி (57-33—53-18) 4 நாழி 15 விநாடி அல்லது 255 விநாடி. இதை 35 4/9-ஆல் வகுக்க 8-வது பாகத்தில் அமையும். ஆக நவாம்ச லக்னம்-மேஷம் முதல் கணக்கிட விருச்சிக லக்னம் வரும். 35) 255 (7 245 —— 10 —— மற்ற லக்னங்களுக்கு நவாம்ச லக்னம் போடுவது எப்படி என்பதைக் கீழே விளக்கியுள்ளோம். மேஷம், சிம்மம், தனுசு – ஜன்ம லக்னமானால் – மேஷம் முதல் கணக்கிட வேண்டும் ரிஷபம், கன்னி, மகம் – ஜன்ம லக்னமானால் – மகம் முதல் கணக்கிட வேண்டும் மிதுனம், துலாம், கும்பம் – ஜன்ம லக்னமானால் – துலாம் முதல் கணக்கிட வேண்டும் கடகம், விருச்சிகம், மீனம் – ஜன்ம லக்னமானால் – கடகம் முதல் கணக்கிட வேண்டும் 6. ஜந்மநக்ஷத்திரம் ஆத்யந்தம் இனி ஜன்ம நட்சத்திரத்தின் ஆதியந்த நாழிகைகளையும் ஜனனகால தசாசேஷத்தையும் கணிப்போமாக : மாதம் 9-ஆம் தேதி வெள்ளிக்கிழமை சூரியோதயத்திலிருந்து 29-27 நாழிகை வரை சுவாதி நக்ஷத்திரம் இருக்கிறது. பிறகு விசாக நக்ஷத்திரம் ஆரம்பம். ஜாதகன் சூரிய உதயாதி 57 நாழிகை 33 விநாடிகளுக்குப் பிறந்திருப்பதால் சுவாதி கழிந்து விசாக நக்ஷத்திரத்தில் ஜனனம் என்று தெரிகிறது. இனி விசாக நக்ஷத்திரத்தின் ஆத்யந்த பரம நாழிகை – அதாவது மொத்த நாழிகை என்ன என்று தெரிந்தால் தசாசேஷம் கணிக்கலாம். ஒரு தினத்துக்கு 60-00 நாழிகைகள். அதில் 9-ஆம் தேதி சுவாதி இருப்பு 29-27 போக, அன்றைய தினம்-விசாக நக்ஷத்திரம் 30-33. மறுநாள் தை 10-ஆம் தேதி விசாகம் (பஞ்சாங்கத்தில் உள்ளபடி) 25-42. ஆகையால், இவைகள் இரண்டையும் கூட்ட விசாகம் மொத்த நாழிகை 36-15 ஆகும். ஜனன நாழிகை 57-33 அன்று சுவாதி செல்லு 29-27 9-ஆம் தேதி விசாகத்தில் செல்லு 28-06 விசாகம் மொத்தம் (அ) ஆத்யந்த பரம நாழிகை 56-15ல் 28-06ஐக் கழிக்க ஜனன காலத்தில் விசாகம் இருப்பு 28-09 7. ஜனனகால தசாசேஷம் ஆகையால், மேற்கண்ட விசாக நக்ஷத்திரத்தின் சேஷம் 28 நாழிகை, 9 விநாடிகளுக்கு தசாசேஷம் கணிக்க வேண்டும். முன்பு குறிப்பிட்டபடி விசாக நட்சத்திரத்துக்கு குருதசை ஆரம்பம். குரு தசை 16 வருஷங்கள். விசாக நட்சத்திரம் மொத்தம் நாழிகை 56-15க்கு 16 வருஷங்களானால் விசாகத்தில் மீதியுள்ள 28-09க்குத் தசாசேஷம் என்ன என்பதைக் கீழ்க்கண்ட விதமாகக் கணிக்கலாம்.அதாவது, 1. விசாகம் மொத்த நாழிகை 56-15 X 60 3360 விநாடிகள் 15 மொத்தம் 3375 விநாடிகள் 2. விசாகம் செல்லு போக இருப்பு 28.09 X 60 1680 9 1689 விநாடிகள் விசாகம் குருவின் நக்ஷத்திரம். ஜனன காலதசை குருதசை. ஆகவே, மேற்கண்ட இருப்பு விநாடிகளைக் குரு தசா வருஷமான 16ஆல் பெருக்க வேண்டும். அந்த மொத்தத்தை விசாகம் மொத்த விநாடிகளால் வகுக்க தசாசேஷ வருடங்கள் வரும். மீதியை 12-ஆல் பெருக்கி மொத்த விநாடிகளால் வகுத்தது மாதம். 30-ஆல் பெருக்கி வகுத்தது நாட்கள். இவ்விதமாக தசா சேஷம் வரும். 1689 X16 ———— 3375) 27024 (8 வருடம் 27000 ————— 24 X 12 / 3375 = 0 மாதம் ———- 288 X 30 ——————- 3375) 8640 ( 2 + 1 =3 நா. 6750 —— 1890 பாதிக்குமேல் இருப்பதால் 1 ஆகச் சேர்த்துக் கொள்ளலாம். ——— ஆக, ஜனன காலத்தில் குருதசை சேஷம் 8 வருடம் 0 மாதம் 3 நா. அதாவது இந்தக் குழந்தை கர்ப்பத்தில் இருக்கும்போதே விசாக நட்சத்திரத்தில் பாதி பாகம் கழிந்துவிட்டபடியால், அதற்கு உரிய குருதசை 16 வருஷத்தில் சுமார் பாதி கழிந்து 8 வருஷம் 3 நாட்கள் மாத்திரமே பாக்கி இருக்கின்றன. (தசா புக்திகளைப் பற்றி அறிவோம்)
சென்ற 14 -6 -2011 அன்று நாங்கள் புறப்பட்ட சதுரகிரி பயணம் மறக்க முடியாத பயணமாகும்.
என் வாழ்வில் இந்த பயணம் ஓர் அற்புதம்தான் ,
சதுரகிரி பயணம் என்பது என் வாழ்வின் கனவாகவே இருந்தது
ஏன் என்றால் அது பெரியமலை பலகிலோ மீட்டர் கரடு முரடான பாதையில் நடந்தே செல்லவேண்டும் என்று கூறி என்னை பயபடுத்தி வந்தனர் .
அதனால் நான் பயந்து இந்த பயணத்தை ஒத்திவைதுவிட்டேன் ,கிட்டத்தட்ட ஐந்து முறை தள்ளிவிட்டேன் .
எப்படியாவது நீங்கள் பயணம் செய்யவேண்டும் என்று என்னை தன்னபிக்கை ஊட்டியவர்கள் நாமக்கல் திருச்சி ரோடில் டிரங்கு பெட்டி செய்வும் ஓனர் திரு வெங்கடாசலம் மற்றும் நாமக்கல் கடைவீதியில் உள்ள பைனான்சியர் திரு ராமசாமிக்கும் தான் என் நன்றி கடனே .
நான் மற்றும் என்னிடம் பயிலும் மாணவர்களும் துணியுடன் கிளம்பிவிட்டோம்
சதுரகிரி மலை அடிவாரமான தானிபாரை சென்று குளித்து காலை ஆறு மணிக்கு கிளம்பி சென்றோம்.
சிறு குழந்தை முதல் என்பது வயது பெரியவர்கள் வரை ஏறி கொண்டே இருந்தனர் , அதை பார்க்கும் பொது எனக்கு உற்சாகம் வந்துவிட்டது . சிவனை வேண்டி துணிவுடன் நடந்தேன், எனக்கும் முன்னும் ,பின்னும் மாணவர்கள் நடந்து என்னை உற்சாகம் ஊட்டினர். அழகான மலை, அருமையான மூலிகை காற்று , பயமூட்டும் பாதை ,அப்பப்பா எனக்கு ரொம்ப சிலிர்ப்பாக ஆகிவிட்டது .
இடையில் கோரக்கர் குகையை அடைந்து , நாங்கள் கொண்டு சென்ற புளிசாதம், தயிர்சாதம் நன்கு சாபிட்டோம் ,
அங்கு கோரக்கர் குகையில் உள்ள எழுபது வயது பாட்டி சித்தரிடம் ஆசிர்வாதம் வாங்கினோம் ,
நாமக்கல் முனிசிபாலிட்டி யில் வேலை செய்யும் கண்ணன் பலவிசயங்களுக்கு வழிகாட்டினார் .
இடையில் நாவல் ஊற்றில் தன்னிற் பருகினோம் ,ஆகா என்ன ருசி நம்ம ஊர் மினரல் வாட்டர் தோற்றுபோய்விட்டது .அதை சாபிட்டால் சக்கரை நோய் குணமாகி விடும் என்றும் கூறினார்
ஒருவழியாக பன்னிரண்டு மணி அளவில் மேலே உச்சபகுதிக்கு சென்று குளித்துவிட்டு சுந்திர மாகலிங்க ஈஸ்வரனை தரிசித்தபிரகுதான் எண்கள் மனம் மகிழ்ச்சி அடைந்ததது ,எண்கள் கால்வலி போய்விட்டது ,அதன் பின் ஒரு பர்லாங் தூரம் உள்ள சந்தன மகாலிங்க ஈஸ்வரனை தரிசித்தோம் .இன்னும் என் மனம் அமைதியாகிவிட்டது ,சித்தர்களே வாழும் பகுதிக்கு வந்து சிவனை வணங்கியது எங்கள் வாழ்வில் பெரிய புண்ணியம் செய்து பெருமை கொண்டோம் .
பிறகு அடுத்த பயனதிர்ற்கு சாப்பிட்டு தயாராகிவிட்டோம்
ஆம் இன்னும் உயரமான தவசிபாரைக்கு சுமார் இரண்டு கிலோமீட்டர் உயரம் உள்ள இந்த மலைக்கு கடுமையான வழிகளில் பயணம் செய்து தவசி பாறை அடைந்தோம் ,இந்த பாறை அடியில் ஒரு சிவலிங்கம் உள்ளது ,அந்த லிங்கத்தை காணவேண்டுமானால் பாறை அடியில் பாம்பு போல ஊர்ந்துதான் செல்லவேண்டும் ,மனதிடம் உள்ளவர்கள் மட்டுமே செல்லமுடியும் நான், கோபி, சிவராஜ், ராமசாமி அவர்கள், கண்ணன் ,சீரங்கன் நாங்கள் அனைவரும் மனதிடம் கொண்டு உள்ளே ஊர்ந்து சிவனை பார்த்துடன் அழுகையே வந்துவிட்டது ,நம் மாணவர் சீரங்கன் வாய் விட்டு அழுதே விட்டார்
இந்த நிலையை அனுபவித்தால் மட்டுமே உணரமுடியும் , அந்த குகையில் டார்ச் லைட் இல்லாமல் போகமுடியாது ,அப்படி ஒரு இருட்டு ,உள்ளே சின்ன சிவலிங்கம் உள்ளது ,அங்கே என்னை விளக்கு எரிந்துகொண்டே உள்ளது , அந்த சிவனை பார்த்தால் அப்படியே பரவசம் ஆகிவிடும் ,ஏன் தெர்யுமா இந்த தவசி பாறை ஏற மிகுந்த கஷ்டபட்ட அத்தனை வலிகளும் மறந்துவிடும் .
அடுத்த தவசிபாரை அருகில் உள்ள ஏசி பாறைக்கு சென்று உள்ளே அமர்ந்தோம் , அப்படியே உள்ளே ஜில் என்ற காற்று ஏசி காற்றுபோல அதைவிட அதிகமாக இருந்தது ,அதை நன்கு அனுபவித்தோம் ,
ஏசி பாறை உள்ளே எடுத்த படங்கள்
அதன் பின்பு கீழே இறங்க தயாரானோம் (அடிவாரம் அல்ல )வழியில் பெரிய மகாலிங்கம் ஈஸ்வரனை தரிசனம் செய்தோம் ,
பின்பு பாதை மாறி சென்று விட்டோம் நல்ல வேலையாக வழிகண்டுபிடித்துவிட்டோம் , வரும் வலி மிகுந்த அடர்ந்த கானகம் போல இருந்தன ,யானை ,கரடிகள் , சிறுத்தைகள் அடிக்கடி வந்து போகும் இடமாம் , நாங்கள் தண்ணீர் கொண்டுபோக மறந்துவிட்டோம், நாவு தாகத்தால் அனைவருக்கும் தவித்துவிட்டது ,அப்போதுதான் திரு ராமசாமி அழகிய மூன்று மாமரம் சூழ்ந்த இடத்தில் ஒரு தண்ணீர் சுனையகண்டுவிட்டார் , அவ்வளது தான் மாணவர்களுக்கு குசி வந்துவிட்டது ஒரு பாட்டிலில் தண்ணீரை பிடித்து அனைவரும் தாகம் தனித்துகொண்டோம் ,தண்ணீர் கண்ணாடி போல ,அவ்வளவு சுவையாக இருந்தது, ராமாசாமி தண்ணீரை பார்சல் செய்துவிட்டார்
அந்த சுனை தண்ணீர் இடைத்தை பாருங்கள்
ராமசாமி ஸ்டைலாக
(ராமசாமி தண்ணீர் பிடிக்கும் காட்சி)
பின்பு ஒரு வழியாக கீழே வந்து (அடிவாரம் அல்ல மலை மீதே )
நமது முன்னாள் மாணவரான வனத்துறை கார்டு திரு ஆட்சிமுத்து அவர்கள் அருமையான அவரே தயார் செய்த மூலிகை எண்ணையை அவர்கையாலே காலில் தடவி விட்டார் ,எல்லோர் கால்வலியும் பறந்துவிட்டது, பசிக்கு சுக்கு காபியும் ,காரவடையும் ,இதமாக கிடைத்தன , பின்பு நன்றாக குளித்து (அந்த தண்ணி ஐஸ் மாதிரி இருந்தது )
அன்ன தான மடத்திற்கு வந்து நன்றாக சாப்பிட்டோம் .
எவ்வளு பேர் வந்தாலும் சலிக்காமல்,சங்கடபடாமல், அன்பாய் கவனித்து சாப்பாடு போடுவது ஒரு வகையில் ஆச்சரியமாக உள்ளது,
அன்று பௌர்ணமி , பௌர்ணமி அன்று அங்கு சிவனுக்கு விசேசமாக அபிசேகம் செய்து அலங்காரம் காட்டி ,சங்கு ஊதி பூஜை செய்வார்கள் , இந்த அற்புதமான பூஜைய கண்டு மெய் சிலிர்துவிட்டோம்.
மணி பத்து ஆகிவிட்டன, கண்கள் சொக்கிகொண்டே வந்தன ,சாப்பிட்ட இடமே தற்போது படுக்கை இடமாக மாறி இருந்தது, நாங்கள் அனைவரும் ஒரே வரிசையில் படுத்துவிட்டோம் , மடத்தை சேர்ந்தவர்கள் பல நூறு பேரை அமைதியாக அடக்கமாக படுக்க வைத்த பாங்கு எங்களை மேலும் அமைதிபடுத்தியது , அப்படியே ஆழ்ந்து தூங்கிவிட்டோம்,
மறு நாள் காலை நான்கு மணிக்கு எழுந்து அடிவாரம் செல்ல கிளம்பிவிட்டோம், அனைவரும் டார்ச் லைட் , எடுத்துக்கொண்டு மெதுவாக கிளம்பிவிட்டோம், பாதி வலி வந்திருப்போம் அப்போதுதான் என் கண்ணில் ஒரு உருவம் தட்டுபட்டது, மங்கிய நிலவு வெளிச்சத்தில் ஒரு பாறையில் ஒரு சித்தர் அப்படியே விறைப்பாய் தியானம் செய்துகொண்டு இருந்தார் அதை கண்டு மெய்சிலிர்த்தோம் ,அப்பன் சிவன் எங்களின் ஆசைப்படி சித்தரை காண்பித்து விட்டார் என்ற திருப்தி ஆகிவிட்டது .பிறகு மெல்ல மெல்ல கீழே வந்து சேர்ந்தோம் ,
இடையில் சுக்கு காபி ,ராகி வடை சாப்பிட்டோம், அது மிகவும் சுவையாக இருந்தது ,
குளித்து சாப்பிட்டு வண்டி ஏறி கிளம்பி வந்துவிட்டோம்,
வரும் வழியில் மதுரை திருப்பரகுன்றம் அழகு முருகனை தரிசித்து ,அங்கேயே சாப்பிட்டு மாலை ஆறு மணிக்கு நாமக்கல் வந்து சேர்ந்தோம்
ஒரு அற்புதமான ,பயம் கலந்த, கரடுமுரடான, வியப்புமிகுந்த மலையை கண்ட ,சிவனை கண்ட ,அந்த சிலிர்ப்பு மிகுந்த பயணம் எங்கள் மாணவர்களை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது, வாழ்வில் இது நாங்கள், நான் அடைந்த பாக்கியம் இதுவே
இப்போதும் என் கண்களில் அந்த அதிசிய சதுரகிரி காட்சி மாறவில்லை
அன்பு மக்களே நான் நாமக்கலில் உள்ள ஆடிட்டர் சென்குட்டுவேல் சொல்கிறேன் கொஞ்சம் கவனமா கேளுங்க
நான் நாமக்கலில் சேலம் ரோட்டில் கடை கணக்குகளை பராமரித்து வருகிறேன் என் கஸ்டமர் சுமார் 500 பேர் உள்ளார்கள் . அவர்களுக்கு நான் சிறந்த முறையில் சேல் டேக்ஸ், மற்றும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்து நாமக்கல்லியே சிறந்த ஆடிட்டர் என்ற நற் பெயரை எடுத்துள்ளேன் அதனால் நாமக்கல் நகரத்தில் உள்ள வணிகர்கள் என்னை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமாய் அன்பாய் கேட்டுக்கொள்கிறேன் இந்த வலைத்தளம் சிறந்த தளமாக மாற வாழ்த்துகிறேன்
*ஆழ்மனதைப் பயன்படுத்தி நமது லட்சியங்களை அடைவது எப்படி?
இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் கோடீஸ்வரராக முடியும்.அதற்கு
வேண்டியதெல்லாம்
இந்தக் கட்டுரையைப் படிக்கும் ஒவ்வொருவரும் தினமும் காலை 15 நிமிடம் மற்றும்
மாலை 15 நிமிடம் ஒரு குறிப்பிட்ட தியானம் செய்ய வேண்டியதே!
அது எப்படி தியானம் செய்தால் கோடீஸ்வரராக முடியும்.நாம் ஒவ்வொருவரும்
கடவுள்தன்மையோடு தான் படைக்கப்பட்டிருக்கிறோம்.ஆனால் அதை நாம் உணராமல்
இருக்கிறோம்.
**www.alphamindpower.net* <http://www.alphamindpower.net/>* என்ற
இணையதளத்திற்குச் செல்லுங்கள்.இது சென்னையிலிருந்து செயல்படும் ஒரு தமிழ்
இணையதளமாகும்.
இதில் கூறப்பட்டுள்ள நாளில் உங்களுக்கு அருகிலுள்ள நகரில் ஆல்பா தியானப்
பயிற்சியில்(தமிழில் அல்லது ஆங்கிலத்தில்) கலந்து கொள்ளுங்கள் ।
பயிற்சிக்கட்டணம் உண்டு;கலந்து கொண்ட பிறகு உங்களது நியாயமான ஆசைகள் நிஜமாகும்
என்பதை உணரலாம்.
எந்தெந்த ஆசைகள் நிறைவேறும்?
1.ஐ.ஏ.எஸ் ஆவது
2.மாநிலத்திலேயே முதல் மாணவராவது
3.ஒரு கோடி ரூபாய்கள் 5 வருடங்களில் சம்பாதிப்பது
4.குடிக்கும் கணவன்/சகோதரன்/அப்பாவை குடிக்காமல் நிறுத்தச்செய்வது
5.குடும்பப்பிரச்னைகள் தீர்வது
6.கடன் தீர்வது
7.நீண்டகால உடல் அல்லது மன நோய் தீர்வது
8.செய்யும் வேலையில் இன்னும் கவனமாக செயல்பட்டு பதவி உயர்வுகிடைப்பது
9.எல்லோரும் வெறுக்கும் நம்மை நேசிக்கச்செய்வது
10.பொருளாதார வளம் அடைவது
11.இன்னும் நிறைய
இதெல்லாம் எப்படி சாத்தியம்?நான் நம்ப மாட்டேன் எனக்கூறுகிறீர்களா?
இந்த அறையில் டாடா, ரிலையன்ஸ்,ஓடபோன், ஏர்செல், ஏர்டெல்,எம்.டி.எஸ் மற்றும்
செல் ஒன்னின் செல்போன் அலைகள் இருப்பது உண்மைதானே!அவற்றைப்பார்க்க முடியுமா?
உரிய செல் எண்ணுடன் செல்போனை ஆன் பண்ணினால்தானே உணர முடியும்.அது போலத்தான்.
இருந்தாலும் சுருக்கமாக ஏற்கனவே இந்த ஆன்மீகக்கடலில் விளக்கியுள்ளேன்.
மீண்டும் சுருக்கமாக:
மனித மனம் இரண்டு பெரும் பிரிவுகளாக செயல்படுகின்றன.ஒன்று மேல் மனம்.இதற்கு
ஓரளவே சக்தி உண்டு.பெயர்கள்,நமது வீடு,நமது அலுவலகம்,படிக்கும்/படித்த
பள்ளி/கல்லூரி இவை ஞாபகமிருக்கும்.
மற்றது ஆழ்மனம்.இதைப் பற்றி நாம் அதிகம் அறிய வில்லை.இதன் சக்தி
எல்லையற்றது.நாம் மனம் இதயத்தில் இருப்பதாக நம்புகிறோம்.ஆனால் நமது மனம் நமது
வலப்பக்க மூளையில் இருக்கிறது.இதற்கு திரைப்படம் போலக் காட்சிகள் மட்டுமே
தெரியும்.இது முழுக்க உணர்வுகளால் மட்டுமே ஆனது.
நாம் பிறந்ததுமுதல் மரணம் அடையும் வரை நமது வாழ்வில் நடந்த நடக்கும்
நடக்கப்போகும் அத்தனை சம்பவங்களும் இங்கே பதிவாகிக்கொண்டே
இருக்கின்றன.எதையெல்லாம் நாம் அடிக்கடி நினைத்துக் கொண்டே இருக்கிறோமோ அது
மேல்மனதைக்கடந்து ஆழ்மனதில் பதிவாகிவிடுகிறது.
எதெல்லாம் ஆழ்மனதில் பதிவாகிறதோ(அது நல்ல விஷயமோ கெட்டவிஷயமோ எதுவானாலும்),அதை
ஆழ்மனமானது விண்வெளியில் உள்ள பிரபஞ்சமனத்திடம் அஞ்சல் செய்துவிடுகிறது.
பிரபஞ்ச மனதில் பதிவான உடனே அந்தக் காட்சி நமது நிஜ வாழ்க்கையில்
நிகழ்ந்துவிடுகிறது.
நாம் காலையில் தூங்கியெழும் சில நிமிடங்களுக்கு முன்பாக பால்க்காரனின்
சப்தம்,பறவைகளின் ஒலி முதலியவற்றைக் கேட்டிருப்போம் இல்லையா? அதுதான் நமது
ஆழ்மனம் விழித்திருக்கும் நேரம்.
அதன்பிறகு ஒருநாளில் அடிக்கடி நமது ஆழ்மனம் விழிப்பு நிலைக்கு வரும்.ஆனால் அது
எப்போது என்பதை நம்மால் உணர முடியாது.
இந்த ஆல்பா மைண்டு தியானத்தில் நாம் விரும்பும்போது நம்மால் நமது ஆழ்மனதை
திறக்கச் சொல்லித்தருகிறார்கள்.அப்படித் திறந்து நமது நியாயமான ஆசை/லட்சியங்களை
ஆழ்மனதில் பதியச்செய்கிறார்கள்.நமது லட்சியங்களை நிறைவேற்ற நமது ஆழ்மனம்
உதவுகிறது.
இந்த ஆல்பா தியானப்பயிற்சி 5 லெவல்களைக் கொண்டது.
இதில் 1ஆம் லெவலை மட்டுமே தொடர்ந்து பயிற்சி செய்தால் போதும்.நாம் கோடீஸ்வரராக
முடியும்.இப்படி கோடீஸ்வரரானவர்கள் பற்றி அறிய www.alphamindpower.net-இல்
Testimonial பகுதியைப் பார்க்கவும்.
குறிப்பு:எல்லோரின் ஆசையும் கோடீஸ்வரராவது என்று இருக்காது.சிலர் அரசுத்
தேர்வில் வெற்றி பெறுவதாக இருக்கலாம்.சிலர் காதலில் வெற்றியாக இருக்கலாம்.சிலர்
சினிமாவில் ஜெயிப்பதாக இருக்கலாம்.சிலர் வெளிநாட்டில் குடியேறுவதாகக்கூட
இருக்கலாம்.உங்கள் ஆசை எதுவாக இருந்தாலும் அது நியாயமாக இருக்கவேண்டும் அது
மட்டுமே நிபந்தனை.முயன்று பாருங்கள்.
எனது ஆல்பாதியான பயிற்சிப்படி எனது நியாயமான ஆசை ஒன்று நிறைவேற மூன்று மாதங்கள்
ஆனது.மூன்றாவது மாதத்திலிருந்து எனது ஒரு லட்சியம் நிறைவேறுவதற்கான அடையாளங்கள்
தெரிய ஆரம்பித்தன.நான் ஒன்றரை வருடங்களாக ஆல்பா தியானம் செய்து வருகிறேன்*
நன்றி அடுத்ததாக நான் கற்றுக்கொண்டது ஈசா த்யானம். இது ஸ்ரீ ஜக்கிவாசுதேவ்ஜி என்பவரால்
நடத்தப்படுகிறது. ஈசா என்றால் ஒரு ஆளும் சக்தி எனலாம். அதற்கு உருவமில்லை.
ஆனால் கடவுள் தன்மை உண்டு. அதற்கு உருவம் கொடுத்தால் ஈச்வரன் ஆகிறான்.
ஜகதீசா என்றும் ஜகதீச்வரன் என்றும் நாம் கூப்பிடுகிறோம். ஈசா த்யானத்தில் நாம்
தீக்ஷை எடுத்து கொள்ள வேண்டும். அங்கு சூன்ய தியானம் கற்றுக் கொடுக்கிறார்கள்.
சூன்யம் என்றாலே ஏதும் அற்ற நிலை. அதை வேறு ஒன்றிடம் ஒப்பிடமுடியாது.
மனதை ஒருமைப்படுத்தி எண்ணங்கள் வந்தாலும் வலிய தடுக்காமல் ஓடவிட்டு பின் ஒரு எண்ணமும் இல்லாமல் இருக்கும் போது சூன்யதியானத்தில் ஈடுபடவேண்டும்.
எல்லா தியானத்திற்கும் முடிவு ஒன்றுதான். எப்படி பல நதிகளின் நீளம் திசைகள்
மாறி இருந்தாலும் முடிவில் கலப்பது கடலில்தான். சில நதிகள் சுலபமாக கலக்கிறது.
சிலமேடு பள்ளம் ஏறி வந்து பின் கலக்கிறது.
நாம் குண்டலினி தியானத்தை எடுத்துக் கொண்டால்... ஒவ்வொரு மனிதனிடமும் உள்ள உயிர் சக்தி குண்டலினி தான். அதைப் பாம்புடன் ஒப்பிடுகிறார்கள்.
பாம்பு அசையாமல் இருக்கும் போது நமக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் கொஞ்சம் நகர ஆரம்பிக்கும் போது
தான் பாம்பு இருப்பதே நினைவுக்கு வரும். அதே போல் குண்டலினி அசையும் போதுதான் நாம் அந்த சக்தியை
உணரமுடியும். அது நம் ஏழு சக்ரங்களைத் தாண்டி கடைசியில் ஸஹஸ்ராரா சக்ராவைத் தாண்டும்போது
தான் பேரானந்தம் கிடைக்கிறது. அந்த குண்டலினி சக்தியை கொஞ்சம் கொஞ்சமாக அசைய வைத்து
மேலே ஏற்றுவது ஒருவிதமான யோகம் வேதாத்திரி
மஹராஜ் "வாழ்க வளமுடன்" என்று வாழ்த்த நம் பாபங்கள்
விலகி தியானம் விரைவில் சித்திக்கும் என்கிறார். அங்கு குருவே குண்டலினியை எழுப்பி விடுகிறார்கள்
குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் அவர்கள் பயிற்சியில்
ஸோஹம் என்ற சொல்லை ஜபித்து நம்மை தயார்
ஆக்குகிறார். ஸோஹம் என்றால் நான்தான் அது”
என்று அர்த்தம் என நினைக்கிறேன் அதாவது நான் தான்
ப்ரும்மம் “என்று சொல்லப்படுகிறது அதை சுதர்சனக்ரியாஎன்கிறர்கள். உள்மூச்சு,வெளிமூச்சு என்று மாறி மாறி விட்டுக்கொண்டே பயிற்சி செய்ய
வியாதிகளே அண்டுவதில்லை. இதை ஆத்ம க்யான யோகா என்கிறர்கள்.
ஆல்ஃபா த்யானம் மிக எளிமையான ஒன்று. அதை நடத்துபவர் டாக்டர் விஜயலக்ஷ்மி …கையில் ஆல்பா முத்திரை எடுத்து, தியானம் செய்ய வாழ்க்கையில் அடையாதது ஒன்றுமில்லை. தியானத்தின் போது பிரபஞ்சத்தின் சக்தியை
ஒளியை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை பரவவிட்டு நம்மை சுற்றி சக்தி காப்பு போட்டுகொண்டு தியானம் ஆரம்பிக்க வேண்டும்
ஆழ்மனசக்திதான் மிகப்பெரிய சக்தி. அதை உணர்ந்து அதை திறக்கும் வழிதான் ஆல்பா தியானம். அப்படி திறந்து விட்டால்
டால் வெற்றி, தெளிந்த சிந்தனை, நிம்மதி எல்லாம் கிடைக்கும்.
அடுத்தது பிரமிட் தியானம் நம் மூக்கை பிரமிட் போல பாவித்து
கைகளைக்கோர்த்து கால்களை ஒன்றன் மேல் வைத்து நம் மூச்சில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் உள்மூச்சு வெளிமூச்சு விடுவதை கவனமாக அனுபவித்து நம்மால் முடியும் வரை செய்யலாம் இதை
ந்டத்துபவர் டாக்டர் பத்ரிஜி .பிரமிட்குள் நிறைய விஷயங்
கள் உள்ளன பின்னால் அதை பற்றிச்சொல்லுகிறேன்
இதே போல் மஹெஷ் யோகி நடத்தும் தியானமும்
சிறப்பாக உள்ளது இன்னும் பல வகை தியானம் இருக்கின்றன. விபாசனா தியானம், காயத்திரி தியானம் சித்த சக்தியின் த்யானம் போன்றவைகள். எழத ஆரம்பித்தால் ப்ட்டியல் நீண்டுக்கொண்டே போகும்.
எல்லாவற்றிலும் சுலபமான தியானம் என்னவென்றால் நாமஸ்மரணம் கடவுக்காகவே பாடும் இசை.
மும்மூர்திகளான தியாகராஜர், தீக்ஷதர், ச்யாமா
சாஸ்திரிகள் தங்கள் பாட்டுக்களினாலேயே கடவுளை
கண்டனர். சங்கீதத்தையே தியானம் ஆக்கினார்கள்
மீராபாய் க்ருஷ்ண்ரிடமே கலந்து விட்டாள்
வள்ளலார் ஜோதியிலேயே சக்தியைக் கண்டார்.
முழு சமர்ப்பணத்துடன் செய்யும் தொழில், எல்லாவேலைகளிலும் கடவுளைக் காண்பது என்பது எல்லாமே த்யானம்தான்.
கவிஞர் பாரதி சொல்கிறார்
"எண்ண்மிட்டாலே போதும்…………..
யாதுமாம் ஈசவெள்ளம் என்னுள் நிரம்பியதென்
றோதுவதே போதுமதைவுள்ளுவதே போதுமடா
காவித்துணி வேண்டா, கற்றை சடை வேண்டா
பாவித்தல் போதும் பரமனை எய்வதற்கு,
சிவமென்றேயுள்ளதெனச் சிந்தை செய்தால்
போதுமடா"
நித்தசிவ வெள்ளமென்னுள் வீழ்ந்து நிரம்புதென்றுன்
சித்தமிசைக் கொள்ளுஞ் சிரத்தை ஒன்றே
போறுமடா.”
பகவான் பாபா சொல்கிறார் " எப்போது நீ அதிக அன்பு செலுத்த ஆரம்பித்து விட்டாயோ, அதிக பேச்சைக் குறைத்துக்கொண்டாயோ, அதிக சேவையில் மனம் ஈடுபட்டதோ அப்போது உனக்கு த்யானம் நன்றாக வந்து விட்டது என்று பொருள் கொள்"
முடிவாக நான் சொல்வது அன்பு உயர பண்பு உயரும். பண்பு உயர ஒழுக்கம் உயரும் ஒழுக்கம் உயர,தியானம் வளரும் தியானம் வளர ஒளி மிளிரும், ஒளி மிளிர வாழ்வு ஓங்கும் . வாழ்வு ஓங்க.சாதனை ஓங்கும் சாதனை ஓங்க இலட்சியப்பூர்த்தி……………… விசாலம் விஞ்ஞானிகள் தியானம் செய்யும் மனிதனுடன் விஞ்ஞானக் கருவிகளை இணைத்து, ஆராய்ச்சி செய்து பின் பல கருத்துக்களைக் கூறி இருக்கிறார்கள். உடலளவில் ஏற்படும் நன்மைகள் :-
1. தியானம் செய்வதினால் மூச்சு வாங்கி வெளிவிடும் வேகம் குறைகிறது. இருதயத் துடிப்புக் குறைகிறது. ஆயுள் அதிகரிக்கிறது.
2. (Blood Pressure) இரத்த அழுத்த நோய் குணமாகிறது.
3. எல்லா நரம்புகளுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கிறது.
4. உடலின் உஷ்ணம் சிறிது அதிகரித்துப் பிறகு படிப்படியாகக் குறைகிறது.
5. உடல் முழுவதற்கும் நன்கு ஓய்வு கிடைக்கிறது.
6. ஏற்கனவே கெட்டுப்போன செல்களை நீக்கிப் புதிய செல்களை உருவாக்குகின்றன.
இனி உள்ளத்தளவில் ஏற்படும் நன்மைகளைப் பார்ப்போம் :
1. மனம் குவிகிறது. இதனால் மன ஆற்றல் அதிகரிக்கிறது.
2. மூளையில் உள்ள பல புதிய நூற்றுக்கணக்கான செல்கள் தியானத்தினால் ஊக்குவிக்கப்பட்டு இயங்க ஆரம்பிக்கின்றன. இதனால் அறிவு கூர்மை பெறுகிறது. எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை அதிகரிக்கிறது.
3."As a man thinketh, so he becomes it", "A man is what he thinks all day long" என்பது இன்றைய மனோதத்துவ நிபுணர்களின் கருத்து. அந்தக் கூற்றுப்படி நாம் துரியாதீத தவத்தில் சுத்தவெளியை நினைப்பதினால், நாம் நாளடைவில் சுத்தவெளியாக, பிரம்மமாக மாறி விடுகிறோம்.
4. விஞ்ஞானிகள் மிகவும் நுணுக்கமான அணுவை ஆராய்கிறார்கள். அதே நேரத்தில் கோடானு கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தி உள்ள பொருட்களைப் பற்றி எண்ணுகிறார்கள். அதிலேயே தோய்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்கள் "பீட்டா" wave-ல் இருக்க முடியாது. "ஆல்பா" wave-க்கு பக்கத்தில் வருகிறார்கள். "விஞ்ஞானிகள் பரம்பொருளுக்கு மிகப் பக்கத்தில் இருக்கிறார்கள்". ஆக தியானத்தின் மூலம் உடல் அளவிலும்,உள்ளத்தளவிலும் பல நன்மைகள் உண்டு என்பது தெளிவாக விளங்குகிறது.'தீட்டா அலை'யிலும், 'ஆல்பா அலை'யிலும் விழிப்பு நிலையிலேயே இருக்கப்
பழகிக் கொண்டோமானால், மற்றவர்களுடைய எண்ண அலைகள் தீமை விளைவிப்பனவாக
இருந்தாலும், உணர்ச்சிக்கு ஊக்கம் கொடுப்பவையாக இருந்தாலும், அவை நம்மைப்
பாதிக்கா. உதாரணமாக நான்கு வானொலி நிலையங்கள் நான்கு விதமான வேறு பட்ட
நிகழ்ச்சிகளை ஒரே நேரத்தில் ஒலிபரப்புகின்றன. நம் ரேடியோவை எந்த அலை
நீளத்தில் வைக்கிறோமோ அது மாத்திரம் தான் இங்கே கேட்கும். மற்றவை எல்லாம்
வந்து மோதும்; ஆனால் கேட்காது. அது போலவே, தேவையற்ற அலைக் கழிப்பும்
பாதிப்பும் இல்லாமல் விட்டு விலகி எந்த நிலையில் இருக்கிறோமோ அந்த
நிலைக்கு ஏற்ப நமக்கு என்ன தேவையோ அது கிடைக்கும். நாம் என்ன செய்ய
வேண்டுமோ அதை நினைப்போம். நாம் என்ன நினைக்கிறோமோ அதைச் செய்ய முடியும்
என்ற அளவிலே மனிதத்திறமை வெளிப்படுகிறது. இந்த மனிதத் திறமை அதிகரிக்க
அதிகரிக்க என்ன ஆகும்? நாம் எங்கு போனாலும், நமக்காக மற்றவர் தாமாகவே
அந்த அலையிலேயே கட்டுப்பட்டு, நம் மதிப்பை உணர்ந்து புரிந்து கொள்ள
அவர்களுக்கு எண்ணம் தோன்றும். எங்கே போனாலும் நமக்கு வெற்றியாகவே
இருக்கும்.
அப்படி எங்கேயாவது வெற்றி இல்லாமல் தடை ஏற்பட்டாலும், அந்தத்
தடையினால் நமக்குக் கெடுதல் இல்லை. "நம்மைத் திருப்பி விடுவதற்காக இந்த
அலை நீளத்தில் தேவையில்லாதவற்றைத் தள்ளி விடுகிறது. அதனால் அந்த வேலை
நடக்கவில்லை" என்று எண்ணி அமைதி அடைந்தால், எந்தக் காலத்தில் எந்தச்
சூழ்நிலையில் அந்த வேலை நடக்க வேண்டுமோ அது தானாகவே நடந்துவிடும்.
"படிக்கும்போது தவம் செய்யலாமா; இரவில் செய்யலாமா?" என்றெல்லாம்
கேட்பார்கள். தவத்திற்குக் காலமும் வேண்டியதில்லை; திசையும்
வேண்டியதில்லை. அறிவை, விரிவான பிரபஞ்ச இணைப்போடு இணைக்கக்கூடிய ஒரு
பயிற்சிதான் தவம். அதற்குக் கால நேரம் பார்க்க வேண்டியதில்லை. எந்தக்
காலத்திலேயும் செய்யலாம். இதையெல்லாம் உணர்ந்து, நீங்கள் எவ்வளவு தூரம்
ஆழ்ந்து தவம் செய்து வருகிறீர்களோ, அந்த அளவுக்கு, விவகாரங்களில்
ஏற்படக்கூடிய சிக்கல்களை அறுத்துக் கொள்ளவும், தெளிந்த நிலையிலே அந்தச்
சிக்கல்களை தீர்த்துக் கொள்ளவும், சிக்கல் வராமல் காத்துக் கொள்ளவும்
வேண்டிய விழிப்பு நிலையை இந்தத் தவம் உங்களுக்குக் கொடுக்கும்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
சின்னக் குழந்தைகளின் மூளை அலைகள் தீட்டா நிலையிலும், முதியவர்களின் மூளை அலைகள் பீட்டா நிலையிலும் உள்ளது என்பதை முந்திய பாராக்களில் படித்த போது தீட்டா, பீட்டா நிலை என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது. அதைப் புரிந்து கொண்டால் மூளை பற்றிய பல முக்கிய விஷயங்கள் நமக்குப் புலப்படும்.
நமது பிரக்ஞையின் மட்டங்கள் நான்காகப் பிரிக்கப்படுகிறது. இந்த வெவ்வேறு பிரக்ஞையின் மட்டங்களில் மூளை அலைகளின் இயக்கம் வெவ்வேறு அளவுகளில் உள்ளது.
மேல் பரப்பில் உள்ள பிரக்ஞை அல்லது விழித்திருக்கும் போது இருக்கும் பிரக்ஞை, பீட்டா மட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிடப் படுகிறது. இந்த பீட்டா நிலையில் மூளை அலைகளின் இயக்கம் விநாடிக்கு 14 முதல் 21 சைக்கிள் என்ற அளவில் உள்ளது.
அடுத்து ஆழ்மன பிரக்ஞையின் போது அதாவது கனவு நிலையில் உள்ள பிரக்ஞையின் போது உள்ள நிலை ஆல்பா மட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ஆல்பா நிலையில் மூளை அலைகளின் இயக்கம் விநாடிக்கு 7 முதல் 14 சைக்கிள் என்ற அளவிள் உள்ளது.
அடுத்து ஹிப்னோதெராபி வேலை செய்யும் நிலை அல்லது யோசனைகள் ஆற்றலுடன் செயல்படும் நிலையில் உள்ள பிரக்ஞை தீட்டா மட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த தீட்டா நிலையில் மூளை அலைகளின் இயக்கம் விநாடிக்கு 4 முதல் 7 சைக்கிள் என்ற அளவில் உள்ளது.
இறுதியாக ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள பிரக்ஞை நிலை டெல்டா மட்டத்தில் உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த டெல்டா நிலையில் மூளை அலைகளின் இயக்கம் விநாடிக்கு 1.5 முதல் 4 சைக்கிள் என்ற அளவில் உள்ளது.
மூளை முழுதுமாக இயங்குவதற்காகச் செய்யப்படும் பயிற்சிகள் பீட்டா நிலையிலிருந்து மிக சுலபமாக ஆல்பா மட்டத்திற்கும் பிறகு தீட்டா மட்டத்திற்கும் நம்மை ஏற்றி விடுகிறது. இதைப் புரிந்து கொண்டு விட்டால் நாம் தீட்டா நிலையை எய்துவதற்காக முழு முயற்சியை எடுத்து வெற்றி பெறுவோம்.
(தியானம் செய்யும் யோகிகள் மிக சுலபமாக அதி வேகத்தில் டெல்டா நிலையை அடைவதாக ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன.)
மூன்றாவது வழி : எதிர்காலத்திற்குச் செல்லுங்கள்
உங்களது மனம் அடைபட்டிருக்கும் சட்டத்திலிருந்து விடுபட்டு உங்கள் பார்வையைப் பரந்ததாக ஆக்குங்கள். உங்களுக்கு இன்று இருக்கும் பிரச்சினைகளை அலசி ஆராயுங்கள். பின்னர் இன்றிலிருந்து பத்து வருடங்கள் கழித்து நீங்கள் இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்.
பத்து வருடம் கடந்த இப்போதைய புதிய சூழ்நிலையில் உங்களது பிரச்சினை மிகவும் பழையது. அதை விருப்பத்துடன் நினைத்துப் பாருங்கள். அதைக் கடந்து வந்து பத்து வருடம் ஆகி விட்டதல்லாவா? அதை எப்படித் தீர்த்திருப்பீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். இதை மிக்க ஓய்வான நிலையில் அல்லது தியானத்தின் போது அல்லது ஹிப்நாடிஸ நிலையில் ஆழ்ந்து எண்ணிப் பாருங்கள். உங்களது இன்றைய பிரச்சினை தீர வழி கிடைக்கும்!
நான்காவது வழி: உரக்கச் சொல்லுங்கள்
இந்த வழி புதிய மூளை தொடர்புகளையும் நெட்வொர்க்கையும் செயல்பட வைக்கும். பார்வையை விரிவுபடுத்தும். படைப்பாற்றலை மேம்படுத்தும்.
ஜெர்மானிய கவிஞரும் எழுத்தாளருமான கதே உரக்கப் படிப்பதன் மூலம் எண்ணப் பொறிகளைப் பெறுவது வழக்கமாம். தன்னுடைய மனக் கற்பனையில் தோன்றிய ஒரு நண்பருடன் அவர் உரக்கப் பேசுவாராம். தன்னுடைய கதையின் கரு, அதில் வரும் பாத்திரங்கள், அவர்கள் வாழும் இடங்கள் உள்ளிட்ட அனைத்தையும் உரக்கச் சொல்வாராம். இதுவே ஆழ்ந்த அறிவையும் சிறந்த கற்பனையையும் தனக்குத் தந்ததாக அவர் நம்பினார். இந்தக் கற்பனை யதார்த்தத்தையும் அவரது எழுத்துக்களில் புகுத்தியது.
இந்தியாவில் பரந்து விரிந்து கிடக்கும் கட்டுப்பாடுகளற்ற மதம் இந்து மதம்!அதன் சிறப்புகளை இங்கு அறியத் தருகிறோம்!
தமிழ் எழதி
இப்பொழுது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +g அழுத்தவும்)அல்லது இதை
சொடுக்குங்கள்
(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
கண்ணுக்குத்தெரியும் உடல், கண்ணுக்குத் தெரியாத மனம், அறிவு இவற்றை எது இணைக்கிறது அப்படின்னு பார்த்தோம்னா எந்த சந்தேகம் வேண்டியதில்லை மூளைதான் அது.:))
மனதில் ஏற்படும் மாற்றங்கள் தியானத்தாலும் வந்திருக்கலாம், வேறு காரணங்களினாலும் வந்திருக்கலாம். சாட்சி இல்லை. நிரூபிக்க முடியாது. வேண்டுமானால் நீயும் அனுபவித்துப்பார் என்றுதான் சொல்ல முடியும்.
முறையாக தியானம் செய்தால் மூளையில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுமா, அப்படி ஏற்பட்டால் அறிவியல் மூலம் நிரூபிக்க முடியும் அல்லவா..இது குறித்த அலசல் இது..
மூளையைப்பற்றி பொதுவாக ஆராய்ச்சிகள் பல நடந்திருந்தாலும் குறிப்பாக 1932 ல் பிரிட்டனைச் சேர்ந்த எட்கர் ஆல்ட்ரின் மூளையின மின் இயக்கத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து அதை அளந்து காட்டியதற்காக நோபல்பரிசு பெற்றார்.
மூளையினின்று வெளிப்படும் மின்சக்தி அலைகளின் சுழற்சியை அளக்க இயலும்.. (Electroen - cephalograph). இதனை மூளையின் செயல்மின் சுழற்சி அலைகள்’ என சொல்கிறோம். தனது செயல்களின் தன்மை அல்லது தீவிரத்திற்கேற்ப நான்குவிதமான மின் சுழற்சி அலைகள் மூளையினின்று வெளிப்படுத்துகின்றன.
ஆழ்ந்த தூக்கத்தில் மூளை ஒரு நொடிக்கு ஒன்றிலிருந்து நான்குவரை மின் ஆற்றல் அலைகளை வெளிப்படுத்துகிறது. இது டெல்டா அலைகள் (Delta waves) அலைகள் என அழைக்கப்படுகின்றது.
ஆழ்ந்து தூங்க ஆரம்பிக்கும்போது நான்கு முதல் ஏழுவரை மின்சக்தி அலைகள் வெளிப்படுகின்றன. இது தீட்டா (Theta waves) என அழைக்கப்படுகின்றன.
உடலையும், மனதையும் தளரச் செய்யும்போது மூளையின் மின் அலை அளவுகள் ஏழு முதல் பதினாலு வரை இருக்கும். இதை ஆல்ஃபா அலைகள் (Alpha waves ) என அழைக்கிறோம் எழுமுதல் பதினாலு வரையிலான அலை அளவில் இடது மூளையும் வலது மூளையும் சிறப்பான முறையில் இணைந்து பணியாற்றுகின்றன. அருளியலும், பொருளியலும் நன்கு இணைந்து சம அளவில் இருக்கும். எண்பதுகோடி எண்ணங்களை நினைந்து எண்ணும் மனம் அமைதியுறும். பிரபஞ்ச ஆற்றல் எனும் கணினியுடன் நமது மூளையும் மனமும் தொடர்பு கொள்ள இயலும். தியான வாழ்க்கை அமையும். வாடும் பயிரைக்கண்டபோதெல்லாம் வாடும் மனநிலையை உணரமுடியும். வசையிலாது, இசைபாடும் வாழ்வு மிளிரும். படைப்பாக்கம் ஆல்ஃபா நிலையிலேயே சிறப்பாக நடைபெறும். ஆழ்மனத்தொடர்வு கிடைக்கும்.
விழித்திருக்கும் நேரமெல்லாம், நாம் உலகியல் நடப்புகளை மேற்கொள்ளும்போது நமது மூளையின் மின் அலைகள் ஒரு நொடிக்கு பதினாலிலிருந்து இருபத்தி ஒன்று வரை இருக்கும். இதனை பீட்டா அலைகள் (Beta waves) என அழைக்கிறோம். பதினாலிலிருந்து இருபத்திஒன்றுவரை இயல்பாக மனிதர் வாழும் வாழ்க்கை
அதேசமயம் இருபத்திஒன்றுக்கு மேல் மூளையின் அலைகள் போனால் அவ்ர்கள் வாழ்க்கை விலங்கு வாழ்க்கையாக இருக்கும். மன அமைதி இன்றி புலன்வழி சென்று, ஆசையினால் தன்னிலை அழிந்து, உடல், மன நோய்கள் மிகும். அன்பின்றி, பண்பின்றி, சுயநலம் மிகுந்து, அறவழி நாட்டமில்லாது மறவழி சென்று, தனக்காகவே உலகம் படைக்கப்பட்டு இருக்கிறது என்கிற சீழ்பிடித்த எண்னம் தோன்றி, ஈயினும் இழிந்து, நாயினும் கடையனாகி வாழும் வாழ்க்கையாக இருக்கும்.
எனவேதான் மூலையின் அலைகளை நாம் ஏழு முதல் பதினாறு வரை எல்லா நேரமும் இருத்தி வைத்து தவ வாழ்க்கை வாழ முற்படவேண்டும். தவ வாழ்க்கை எனில் வீடுவிட்டு காடுபோய், காய்கனி, இலை புசித்து வாழும் வாழ்க்கை அல்ல. இல்லறத்தை நல்லறமாக வாழும் வாழ்க்கை. புலன்வழி செல்லா வாழ்க்கை. நம்மை வளர்த்த சமுதாயத்திற்கு பணியாற்ற வேண்டிய வாழ்க்கை. தன்னைத்தான் உணர்ந்து வாழ்தலும், உள்ளுணர்வின் வழி வாழ்தலும் எளிதாகும்.
பீட்டா(14-21), ஆல்பா(7-14),தீட்டா(4-7), டெல்டா (1-4) மூளையில் இந்த அலைச்சுழல் இருக்கும் போது என்னென்ன மனதிலும், வாழ்விலும் மாற்றங்கள் வரும் என்பதை அறிந்து கொண்டீர்கள் அல்லவா !!
இப்போது தீர்மானம் செய்து செயல்படுத்துங்கள். எந்த மனோநிலை தேவை, அதை எப்படிப்பெறுவது என ....இது உங்கள் உரிமை