சனி, 28 மே, 2011

சர்தாரா .. கொக்கா?

சர்தாரா .. கொக்கா? 

இரு பாகிஸ்தானியர்கள் வாஷிங்டனிலிருந்து நியூயார்க் செல்லும் விமானத்தில் ஏறி, ஒருவர் ஜன்னலை ஒட்டிய இருக்கையிலும், இன்னொருவர் நடு இருக்கையிலும் அமர்ந்தனர். விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் ஒரு பருமனான சர்தாஜி அந்த பாகிஸ்தானியர்கள் பக்கத்தில் இருந்த (நடையை ஒட்டிய) இருக்கையில் அமர்ந்தார்!

அமர்ந்தவுடன், தன் கால்களை சற்று இளைப்பாற்ற காலணிகளை களைந்தவுடன், ஜன்னலருகில் அமர்ந்திருந்த பாகிஸ்தானி, "நான் சென்று ஒரு கோக் எடுத்து வருகிறேன்" என்றார். உடனே நல்ல மனம் கொண்ட நம் சர்தார்ஜி, "நீங்கள் இருங்கள், நான் போய் எடுத்து வருகிறேன்!" என்று கூறி காலுறைகளுடன் நடந்து சென்றார்.

சர்தார் சென்றவுடன், அந்த பாகிஸ்தானி, சர்தாரின் காலணிக்குள் எச்சில் துப்பி, வைத்து விட்டார். சர்தார் கோக்குடன் வந்தவுடன், இன்னொரு பாகிஸ்தானி, "எனக்கும் கோக் அருந்த வேண்டும் போலுள்ளது" என்றவுடன், சர்தார் தயாள மனதுடன், "கவலைப்படாதீர்கள்! நான் போய் உங்களுக்கும் ஒன்று எடுத்து வருகிறேன்!" என்று மறுபடியும் சென்றார். அந்த நேரத்தில், அதே பாகிஸ்தானி இப்போது சர்தாரின் மற்றொரு காலணியிலும் எச்சில் துப்பி வைத்து விட்டார்!!!

சிறிது நேரத்தில், விமானம் தரை இறங்கத் தொடங்கியது. சர்தார் காலணிகளுக்குள் தன் கால்களை நுழைத்தவுடன், நடந்த நிகழ்வை யூகித்து புரிந்து கொண்டு விட்டார்!!! மிகுந்த வேதனையுடனும் மனவலியுடனும், பாகிஸ்தானியர்களை பார்த்து கூறினர் " இன்னும் எவ்வளவு நாள் இவை நீடிக்க வேண்டும்! நம்மிடையே நிலவும் இந்தப் பகை ... வெறுப்புணர்வு ... தீங்கு செய்ய நினைக்கும் மனோபாவம் ... காலணிகளுக்குள் எச்சில் துப்புதல், கோக்கில் சிறுநீர் கழித்தல் !!!!!!"
 
 
==========================================================
அவசரப்படாதே மச்சி!!

 ஒரு கடைநிலை மேலாளர், இடைநிலை மேலாளர் மற்றும் உயர் மேலாளர் ஆகிய மூவரும் ஓர் அலுவல் குறித்த முக்கிய சந்திப்புக்காக அவசரமாக சென்று கொண்டிருக்கும்போது, வழியில் ஓர் அதிசய விளக்கை பார்க்கின்றனர்.

அம்மாய விளக்கை எடுத்து தேய்த்தவுடன், ஒரு பூதம் அவர்கள் முன் தோன்றி, "நான் சாதாரணமாக ஒருவருக்கு மூன்று வரங்கள் தருவேன்! இங்கு நீங்கள் மூவர் இருப்பதால், ஆளுக்கொரு வரம் தருகிறேன்! கேளுங்கள்" என்றது.

இடைநிலை மேலாளர் முந்திக் கொண்டு, "நான் இப்பொழுதே பஹாமாஸ் அருகே உள்ள கடலில், ஒரு விசைப்படகில், எந்தவித கவலையுமின்றி பயணிக்க வேண்டும்!" என்றவுடன், பூதத்தின் அருளால், அவர் அவ்விடத்திலிருந்து மாயமாய் மறைந்து போனார்!

உடனே பொறுமையை இழந்த கடைநிலை மேலாளர், "நான் மியாமி கடற்கரையில், குறைவில்லா உணவு, மது வகைகளுடன் அழகிய பெண்கள் சூழ உல்லாசமாய் பொழுதை கழிக்க விரும்புகிறேன்!" என்றவுடன், அவரும் பூத அருளால் காணாமல் போனார்!

அதுவரை பொறுமையாய் இருந்த உயர் மேலாளர், பூதத்திடம் (தன் விருப்பமாக) அமைதியாகக் கூறினார், " அந்த இரு முட்டாள்களும், மதிய உணவிற்குப் பிறகு சரியாக 1 மணிக்கு அலுவலகத்தில் இருந்தாக வேண்டும்!"

Read more: http://www.livingextra.com/2011/03/blog-post_24.html#ixzz1NiENtxnS
வயது முதிர்ந்த தாத்தா ஒருவர் , மருத்துவரிடம் உடலை மாதமொரு முறை தொடர்ந்து போய் பரிசோதித்து இருக்கிறார் .

அவரை பரிசோத்தித்த மருத்துவர்: - " உங்களுக்கு உடலில் ஒரு குறையும் இல்லையே , நீங்க மனதளவில் நன்றாக சந்தோஷமாக  இருக்கிறீர்கள் போல ? "
அதற்க்கு பதில் அளித்த தாத்தா  :-  "ஆம் கடவுளும் நானும் மிகவும் நெருக்கம் . கதவுக்கும் எனக்கும் இடையில் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு . நிறைய ஆச்சரியங்கள் எனது வாழ்வில் . நான் இரவு வேளையில் எழுந்து  கதவை திறந்து பாத்ரூம் போகும்  போது  தானாவே லைட் வருது . அப்புறம் தானாவே ஆப் ஆகுது ." 


வாவ் என்று மருத்துவர் கூறிவிட்டு அனுப்பிவிட்டார் .
 
ஒரு நாள் மருத்துவர் ஆர்வம் பொறுக்க முடியாமால் அந்த பெரியவரின்  வீட்டுக்கு வந்து அவர் மனைவியிடம் " உங்கள் கணவர் கடவுளுடன்  நெருங்கிய தொடர்புடையவர். இரவில் பாத்ரூம் செல்லும் போது தானாகவே லைட் ஆன் ஆகுதாம் அப்புறம் ஆப் ஆகுதாம் . நான் அவருடன் பழகி ஆன்மீக வழியில் செல்ல வேண்டும் . அவர் இருக்கிறாரா ? "

அதற்கு அவர் மனைவி " ஏன் டாக்டர் உங்களுக்குமா அறிவில்லை . அந்த மனுஷன் ராத்திரிலே பிரிட்ஜ்  ஐ திறந்து ஒவ்வொரு நாளும் பாத்ரூம்  மாதிரி நாசம் பண்ணி வைக்கிறாரேனு நானே கவலைலே இருக்கேன்."


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக